சித்தாந்த அரசியலை சினிமா வெற்றிகொள்ளும் தருணம்
மருத்துவர் இராமதாசு எழுதிய ‘கழகத்தின் கதை’ நூலில் திண்டுக்கல் இடைத்தேர்தல் அத்தியாயத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். சமகால அரசியல் பொருத்தம் மிக்க பல சுவாரசியமான புள்ளிகளை கவனிக்க முடிந்தது.
திமுக - அதிமுக - காமராசர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் - ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த இந்திரா காங்கிரஸ் என நான்குமுனைப் போட்டி கொண்ட களமாக திண்டுக்கல் உருவெடுத்திருந்தது.
புதிதாக உருவாகி இருந்த அதிமுகவிற்கு அது முதல் தேர்தல். இடைத்தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்குமா என்ற அச்சத்தில் எம்.ஜி.ஆர் தயங்கினார். பின்னர் துணிச்சலற்ற எம்.ஜி.ஆர் தனது ரசிகர்களின் அழுத்தத்தால் வழக்கறிஞர் மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்திருந்தார். திமுக சார்பாக பொன் முத்துராமலிங்கம் போட்டியிட்டார்.
இரண்டு காங்கிரஸ் கட்சிகளுக்கும் இந்திய அளவில் இருந்த தலைவர்கள் திண்டுக்கல்லுக்கு வந்து பிரச்சாரம் மேற்கொண்டனர். தலைவர் கலைஞரும், எம்.ஜி.ஆரும் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர்.
தேர்தல் மே 20 என்றால், மே 11 அன்று எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.
வாக்கு எண்ணிக்கையான மே 22ஆம் தேதியன்று அ.தி.மு.க. வேட்பாளர் கே. மாயத்தேவர் மொத்தம் பதிவான 5,05,253 வாக்குகளில் 2,60,930, அதாவது 52 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இரண்டாவது இடம் ஸ்தாபன காங்கிரஸுக்கு (1,19,000 வாக்குகள்),
மூன்றாவது இடம் கழகத்திற்கு (93,000 வாக்குகள்).
மத்தியில் ஆளுங்கட்சியான இந்திரா காங்கிரஸ் கட்சி 11,423 வாக்குகள் பெற்று வைப்புத் தொகையை இழந்தது.
1973-ல் திண்டுக்கல் வாக்காளப் பெருமக்கள் கொண்டிருந்த மனநிலைக்கும், 2026-ல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு வாக்காளர்கள் கொண்டிருக்கும் மனநிலைக்கும் பெரிய வேறுபாடில்லை.
சித்தாந்த அரசியலை சினிமா வெற்றிகொள்ளும் தருணம், இரண்டாவது முறையாக மிக வெற்றிகரமாக நம் முன் நிகழ்த்திக் காட்டப்பட்டிருக்கிறது.
கவர்ச்சிக்கு கொடுக்கும் மதிப்பை நம் மக்கள் கருத்துக்கு கொடுப்பதில்லை என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.
We’re witnessing the emergence of yet another AIADMK — this time in an uglier coating, backed by a politically blunt/apolitical electorate.
#AIADMK #Dindigul #MGR #TVK #Vijay


Comments
Post a Comment