சோழர்கள் இன்று
6 ஆம் வகுப்போ 7 ஆம் வகுப்போ படிக்கும்போது தஞ்சாவூர் சென்றிருக்கிறேன், பெரிய கோவிலை காட்டி ராஜராஜன் கட்டியது என்றபோது வியந்திருக்கிறேன், நந்தியின் காதில் பக்தர்கள் ஏதோ சொல்லி சென்று கொண்டிருந்தார்கள், கோவிலின் பின் புறத்தில் மிக சிறிய துளையில் ஒருவர் ஊசியை நுழைத்து சோழர்களின் பெருமையை வெளிநாட்டவருக்கு சொல்லி கொண்டிருந்தார், நகைப்பாட்டினமும் சுனாமியால் சிதைவடைந்த கடலோர பகுதிகளையும், அரசு அமைத்த பேரிடர் பாதுகாப்பு பகுதிகளையும் காண முடிந்தது. பிரமாண்டங்கள் பல கண்டும் அந்த பயணத்தில் என்னை கவர்ந்தது தலையாட்டி பொம்மைகள் தான். தஞ்சை குறித்த நினைவு இப்படியான ஒன்றாக தான் என் மனதில் விரிகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு Escape from Rome: The Failure of Empire and the Road to Prosperity என்ற நூலை படிக்க சொல்லி ஜெயன் எனக்கு அனுப்பி இருந்தார், பாதி படித்துவிட்டு வேறொரு நூலுக்கு தாவி இருந்தேன். ரோம் பேரரசின் வீழ்ச்சியை அதன் காரணங்களை அந்நூல் பேசியது. முற்கால தகவல்கள், வரைபடங்கள், ஓவியங்கள் என ஆதார தரவுகள் நிரம்பிய ஆய்வு நூல் அது. ஒரு பேரரசு எழுந்ததையும் வீழ்ந்ததையும் நாம் அப்படி தான் அறிந்துகொள