ஆற்றுப்படுங்கள்!


 

நெடுநாள் கழித்து கர்நாடக இசை கேட்கவேண்டும் போல் இருந்தது. Spotify-ல் எம்.எஸ் அம்மா Playlist-ஐ தேடி கொண்டிருந்தபோது கிடைத்தது ஒரு பேரமைதி. அந்த பாடலை அவர் குரலில் கேட்கும்போது அப்படியான உணர்வு தான் ஏற்பட்டது. பாடல் வரிகளில் அர்த்தம் அறிந்துகொண்டே பாடலை 3-4 முறை கேட்டேன். ஆற்றுப்பட்டேன்.

Russia(Rachmaninoff Hall, Moscow, 1988)-கச்சேரியின் போது MS அம்மா பாடிய பாடல் இது. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தை சேர்ந்த குருவாயூரப்பன் பக்தரான ‘பூந்தானம்’ நம்பூதிரி இயற்றிய மலையாள பாடலாம். Blog-ஒன்றில் வரிகளுக்கான விளக்கமும் கிடைத்தது. கிருஷ்ணனை துதிக்கும் பாடல் தான் என்றாலும் மானுட யதார்த்தத்தை சுட்டி அமைதியை-சமாதானத்தை வலியுறுத்திய அதன் கடைசி பகுதி என்னை மிகவும் கவர்ந்தது. அதை மட்டும் இங்கே அளிக்கிறேன்: நாம் பிறக்கும்போது ஒருபோதும் ஒன்றாக இருந்ததில்லை, இறக்கும்போது ஒருபோதும் ஒன்றாக இருக்க மாட்டோம். பிறகு ஏன் பொறாமை, பகை போன்றவற்றைக் கொண்டு உங்கள் வாழ்க்கையை வீணாக்குகிறீர்கள்? அமைதியை இழந்து அன்றாடத்தில் தவிக்கும் காலத்தின் பிரஜைகளே ஆற்றுப்படுங்கள் ! Now listen to this Gem: https://youtu.be/NA47UjDkEWA?si=DX1aHeeFLOsB3gPj

#MS #MSSubbulakshmi #Carnatic_Music

Comments