பொருத்தப்பாடற்ற NITI Aayog | The Caravan






கூட்டிசைவு கூட்டாட்சியை(Co-operative Federalism) தழைத்தோங்க செய்யும் நோக்கத்தில்- அதிகார குவியலின் பீடமாக இருந்த நிறுவனங்களில் ஒன்றான திட்ட குழுவை(Planning Commission) களைத்து விட்டு உருவாக்கப்பட்டது NITI Aayog.

அதிகார பரவலாக்கத்தை சாத்தியப்படுத்த உதவுகிறது என்று பெயரளவில் கூறப்பட்டாலும், 2014 ஆண்டு உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் இதுவரை உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பதை தான் இம்மாத The Caravan Magazine இதழ் Cover Story நமக்கு தெரிவிக்கிறது.
திட்ட குழு மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஐந்தாண்டு திட்டங்களே கூட்டாட்சிக்கு விரோதமானவை என்பது தான் ஆரம்பம் முதலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. அதன் காரணமாக தான் 1970களில் மாநில திட்ட குழு நிறுவப்பட்டது.

சோசலிச அரசின் எச்சமான திட்ட குழு இந்தியாவில் 1990-களுக்கு பிறகு வழக்கொழியத் தொடங்கியது. அதை 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு முற்றிலுமாக ஒழித்துக் கட்டியது. 

அது முதல் NITI ஆயோக் என்ற அமைப்பு ஒன்றிய அரசின் திட்டங்களை மாநிலங்களின் மீது திணிப்பதற்கான சாதனமாக செயல்பட்டு வருகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசதிகாரிகள் திட்டக் குழுவின் முதுகெலும்பென்றால், எவ்வித பொறுப்பையும் ஏற்க தயங்கும் தனியார் ஆலோசகர்கள்(Private Consultants) NITI Aayog-ன் செயல்படுத்துனர்கள். இதனாலயே இவ்வமைப்பை சார்ந்திருக்கும் அரசை Consultancy Raj என்று விளிக்கிறார்கள். இந்திய ஒன்றியத்தில் செயல்படும் பல்வேறு மாநில அரசுகளின் நிலையம் இதுதான் என்பது ஒருபக்கம். நிற்க.

Aspirational District Programme முதல் Multi-Dimensional Poverty Index வரை இந்நிறுவனம் பெருமிதங்களாக கூறி கொள்ளும் அனைத்துமே மேலோட்டமானவை, அடிப்படையற்றவை, உள்ளீடுகள் அற்றவை முறையாக செயல்படுத்த படாதவை என்பதை தான் இக்கட்டுரை வாதிடுகிறது.
ஒன்றிய அரசின் அதிகராகுவிப்பை தமிழ்நாடு எப்படி எல்லாம் எதிர்கொண்டு வருகிறது என்பதை இக்கட்டுரை ஆசிரியர் இறுதி பகுதியில் முதன்மை படுத்தியுள்ளார்.

மாநிலங்களை மாநகராட்சி போல் மாற்ற துடிக்க துணை போகும் NITI Aayog போன்ற அமைப்புகளின் பொருத்தப்பாடற்ற & பயனற்ற தன்மையை அறிந்துகொள்ள உதவும் கட்டுரை!

@EramAgha #Federalism #NITI_Aayog #Decentralisation #Planning_Commission  #The_Caravan

Comments