பாஜகவின் மாட்டுக்கறி பொருளாதாரம்!
பாஜகவின் மாட்டுக்கறி பொருளாதாரம்!
வெங்காயத்தையும் பூண்டையும் சோற்றில் சேர்த்துக்கொள்ளாதவர்கள் கூட மாட்டுக்கறி விற்பனையில் கோலோச்சி கோடிகளில் ஈட்டுகிறார்கள் என்கிறது அண்மையில் வெளியான The Caravan கட்டுரை.
ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி குடும்பம் சர்வதேச அளவில் விவசாயப் பொருட்களின் பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் நிலையில், அதன் சகோதர நிறுவனங்களில் ஒன்றான Rembal Agro and Foods தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே மாட்டுக்கறி வர்த்தகத்தின் மூலம் கோடிகளில் லாபம் ஈட்டுவதை இந்தக் கட்டுரை அம்பலப்படுத்துகிறது.
மேலும், இதன் பொருளாதார வலைப்பின்னல் அதிர்ச்சி நிறைந்த பல சந்தேகங்களை எழுப்புகிறது. குறிப்பிட்ட சிலரால் மட்டும் அதிக அளவில் வாங்கப்பட்ட நிறுவனப் பங்குகள், எளிதில் கிடைக்கும் வங்கிக் கடன், பசு பாதுகாவலர்கள் இந்த வர்த்தகத்திற்கு வழங்கும் சலுகை, சர்வதேச பொருளாதாரக் கண்காட்சிகளில் இந்த நிறுவனத்திற்கு கிடைக்கும் வெளிச்சம் என அனைத்துமே மிகச் சாதுர்யமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் நினைப்பதைவிட இவை அனைத்தும் எளிதாகவும் இயல்பாகவும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, அரசியல் வன்முறைகள் நடைபெறும் விதம் குறித்து தரவுகளை வெளியிடும் தன்னார்வ நிறுவனமான அமெரிக்காவின் ACLED நிறுவனம், இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதற்கு முதன்மைக் காரணமாக cow vigilantism தான் இருப்பதாகக் கூறுகிறது. பசு பாதுகாப்புக் குண்டர்களால் 3 ஆண்டுகளில் 280 பேர் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், 44 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், இதில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் இதன் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
சித்தாந்த ரீதியாக பசுவைப் புனிதம் என்று கூறி அதன் மூலம் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பைத் தூண்டியும், அயல்நாடுகளுக்கு மாட்டுக்கறி ஏற்றுமதி மூலம் தனது முதலைப் பெருக்கிக் கொண்டும், அரசியலைத் தனக்கு உகந்த வகையில் வளைத்து வருகிறது பாஜக.
வெகுஜன செய்தி ஊடகங்கள் பாஜக அரசின் நாய்க்குட்டி போல் செயல்படுவதால், அதற்கு வைத்த பாலை மட்டும் உறிஞ்சிக் கொண்டு கறித்துண்டுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் இந்த அவல நிலைக்குக் காரணம்.
#Beef #Cow_vigilantism #Cow_Politics #BJP



Comments
Post a Comment