நா முத்துக்குமார் பிறந்தநாள் கடிதம் 1
நா. முத்துக்குமார் பிறந்தநாள் கடிதம் 1
தூரத்த்து தேசத்தில் பட்டாம்பூச்சி விற்றுக்கொண்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டும் புத்தனுடன் உரையாடி கொண்டிருக்கும் நா.முத்துக்குமாருக்கு, உங்கள் மேல் பேரன்பு கொண்ட வாசகன் எழுதுவது,
நலம் நலமறிய ஆவல், இங்கு உங்கள் பாடல் வரிகள் தினம் தினம் யாருடைய கைபேசியிலேனும் ஒலித்து கொண்டும், முகநூல் பக்கத்தில் மிளிர்த்துக்கொண்டும் இருக்கும்போது, நீங்கள் எங்களுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். இப்போதேல்லாம் உங்களை போல் யாரும் கவிதை எழுதுவது இல்லை. உங்களின் இடம் இன்னும் நிரப்பப்படாமலும் மாற்றப்படாமலும் அப்படியே உள்ளது.
“தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை” என்ற வரிகளின் காதலர்கள் உங்களை கேட்டதாக சொல்லச்சொன்னார்கள்.
“எங்கேயோ பார்த்த
மயக்கமும்” “தேவதையை கண்டேன் “ பாடல் வரிகள் தான் பலரது முதல் காதலின் கனவு வரிகள் .
உங்களின் “தூர்” கவிதை இப்போது பலரது குரலில் பல மேடைகளில் உரக்க ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது பெண்களில் உரிமைக்காக.
உங்களில் வரிகளில் ராமின் கற்றது தமிழும்,தங்க மீன்களும், தரமணியும் அமைந்தது போல் பேரன்பு அமையவில்லை. யுவனும் உங்கள் வரிகளில் பாடியதை போல் வேறு யாருக்கும் பாடவில்லை, அந்த பாடல் உயிர் அற்ற பாடலாக தான் எனக்கு தோன்றுகிறது. நீங்கள் ஆசைப்பட்டது போலவே உங்கள் மகன் ஜீ.வி பிரகாஷ் துணையோடு இசையமைக்க கற்றுக்கொண்டுள்ளான்,விரைவில் இசைஅமைப்பான் உங்கள் வரிகளுக்கு. அங்கு நீங்கள் எழுதும் வரிகளை அவ்வப்போது எங்களுக்கும் அனுப்பிவிடுங்கள் நல்ல கவிதை வாசித்து நாட்கள் பல ஆகிவிட்டது.
மழை பெய்யும்போதெல்லாம் “மழை வரும் அறிகுறியும்” வெயில் காலத்தில் “வெயிலோடு விளையாடியும்” வசந்த காலத்தில் “பூக்கள் பூக்கும் தருணமும்” இலையுதிர் காலத்தில் “காற்றை கொஞ்சம் நிக்க சொன்னேன்” என்ற பாடல்கள் காலத்திற்கேற்ப ஒழித்துகொன்டே தான் இருக்கிறன்றன.
இந்த முறை என் தோழியின் பிறந்தநாளுக்கு உங்களின் “அ’னா ஆவன்னா” என்ற நூலை பரிசாக தரவிருக்கிறேன். அதன் முகப்பிலும் உங்கள் வரிகளை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். இந்த கடிதத்தின் மூலம் உங்களின் அனுமதியையும் பெற்றுக்கொள்கிறேன். அதற்கு கைமாறாக எனக்கு ஒரே ஒரு வரியை மட்டும் பதிலாக எழுதி அனுப்புங்கள்.
ஒற்றை வரிக்காக அடுத்த பிறந்தநாள் வரை காத்துக்கிடக்கிறேன்!
பேரன்புடன்
கௌதம் 💙
#NaaMuthukumar
#HBDNaaMuthukumar
Comments
Post a Comment