“சார்பட்டா” பேசும் கலையும் அரசியலும்
“சார்பட்டா” பேசும் கலையும் அரசியலும்
“சார்பட்டா பரம்பரை” -ஆக்ரோஷமான ஆங்கில குத்துச்சண்டையை மையமாக வைத்து வெளிவந்துள்ள திரைப்படம், தேசிய அவசரநிலை நிலை பிரகடன காலகட்டத்தில் நடந்த அரசியலையும் தெளிவாக பேசுகிறது. திமுகவின் அரசியல் நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. இது திராவிட இயக்க அரசியலை தாண்டி அந்த சமயத்தில் நடந்த தலித்திய அரசியல் மாற்றங்களையும், தலித் மக்களிடையே நிலவிய Afro-American கலாச்சாரத்தின் தாக்கத்தையும் காட்சிப்படுத்தியுள்ளார். தமிழ்ப்பிரபா அவர்களின் எழுத்து படத்திற்கு கூடுதல் பலம் தான், "பேட்டை" நாவலில் அவர் எழுதிய "டாடி" கேரக்டர் திரையில் அழகாக காட்சிப்படுத்த பட்டிருந்தார், சென்னை தமிழுக்கே உரிய அழகில் படம் அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
மேலும் அஇஅதிமுக அவசர நிலை பிரகடனத்தை எப்படி பயன்படுத்திக்கொண்டது, அது மெட்ராஸில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்னென்ன, கொள்கை அரசியல் நீர்த்துபோய் தனிமனித வழிபாடு தலைதூக்கியது வரை ஒரு கட்சி தொண்டனின் நடவடிக்கைகளை வைத்து வெற்றிச்செல்வனின்(கலையரசன்) கதாபாத்திரம் மூலம் சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பார், இதை எல்லாம் வெளிப்படையாக சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது.
சுயமுன்னேற்றம்(Self-empowerment) தான் படத்தின் கரு, அதிலும் அம்பேத்கரின் எழுத்துக்களும் புத்தரின் கோட்பாடுகளும் ஆங்காங்கே வசனங்களாக வைக்கப்பட்டுள்ளது. Climaxக்கு முன் வரும் அந்த மீனவர் தாத்தா புத்தரின் மேற்கோள்களை தான் கபிலனை ஊக்கப்படுத்த அடிக்கடி கூறுவார்.
மேலும் 70 களில் திமுகவில் இருந்து சத்யவானி முத்து அம்மையார் பிரிந்து "தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம்" என்று ஒரு கட்சியை தொடங்கி இருப்பார், மற்றும் "இந்திய குடிஅரசு கட்சி" அரசியலும் தலித் மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும், அந்த காலகட்டத்தின் நடந்த தலித் அரசியலை Climax பகுதியில் வரும் நீல நிற Boxing jacketயின் மூலம் காட்சி படுத்தி இருப்பார், அதை தரும் நபர் தோளில் நீல நிற துண்டை அணிந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது, பின்னாட்களில் சத்யவானி முத்து அம்மையார் அவர்கள் எம்ஜியார் வேண்டுகோளுக்கு இணங்க அஇஅதிமுக ஐயிக்கியமானார் இந்திய குடிஅரசு கட்சி நீர்த்து(diluted) போனது என்பது கூடுதல் செய்தி.
பெண்களை இயல்பாகவும், எளிமையாகவும், அதிகார பண்புடனும் காட்சிப்படுத்துவதில் இயக்குனர் பா.ரஞ்சித் எந்த சமரசமும் செய்துகொள்வதில்லை, தமிழ் திரை சூழலில் இந்த விழிப்புணர்வு அவசிய தேவை தான், பிற இயக்குனர்களும் இதை தொடர்ந்து செய்யவேண்டும்.
ரங்கன் வாத்தியார், டாடி கெவின் , கபிலன், மாரியம்மாள், டான்சிங் ரோஸ், பாக்கியம் என படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாம் ஆழமாக எழுதப்பட்ட கதாபாத்திரங்களாகவே தெரிகிறது.
படத்தின் நீளம் எல்லாம் ஒரு குறையாக தெரியவில்லை, எனக்கு எந்த சலிப்பும் ஏற்படவில்லை. இசையும் சில இடங்களில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்றே தோன்றியது. ஆங்கில சினிமாவின் தாக்கம் இருந்தாலும் தமிழில் இதுவரை வந்த குத்துசண்டை படங்களில் அரசியல் படங்களிலும் சார்பட்டா பரம்பரை தனி முத்திரை பாதிக்கும்.
இது Subaltern சினிமாக்களின் காலம் என்பதை இந்த படத்திற்கு வரும் வரவேற்பு உறுதிப்படுத்தும். இது போன்ற திரைப்படங்கள் மூலம் எழும் உரையாடல்கள் மற்றும் விமர்சனங்களை எல்லாம் வரலாற்றை மீளாய்வு செய்ய உதவும் என்று நம்புகிறேன்.
மெட்ராஸ் தான் நேற்று வரை இயக்குனர் ரஞ்சித் அவர்கள் இயக்கியதில் எனக்கு பிடித்த படம், இன்று முதல் சார்பட்டா பரம்பரை.
#Must_watch
Comments
Post a Comment