Caste - the origins of our discontents /Book Review

 Caste - the origins of our discontents




  Caste - the origins of our discontents என்ற நூல் இந்தாண்டு(2020) ஏப்ரல் மாதம் வெளிவந்த நூல், isabel wilkerson  தனது “The warmth of other suns” புத்தகத்திற்கு பிரபலமானவர், பத்திரிகையாளர், Afro-american சமூக செயல்பாட்டாளர். 


அவரது பார்வையில் சாதி  ஒரு உலக பிரச்சனை, அது இந்தியாவை தாண்டி பிற நாடுகளிலும் குறிப்பாக அமெரிக்காவில் கொடூரமான நிலையில் கடைபிடிக்க படுகிறது எனவும், அந்த சாதிய தன்மை ஒரு அமெரிக்கரின் வாழ்க்கையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி  பல்வேறு நிகழ்வுகள் மூலமும், இந்தியாவின் சாதிய தன்மையோடு ஒப்பிட்டு எழுதி இருக்கிறார். மிக முக்கியமாக இந்தியாவில் தலித்துகளும், ஜெர்மனியில் யூதர்களும்[jews], அமெரிக்காவில் கறுப்பினத்தவரும் சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கும் இன்னல்களை ‘சாதி’[caste] என்ற பதத்தின் கீழ் கொண்டுவருவதால் "இந்திய சாதி" அமைப்பு உலக பார்வைக்கு கொண்டு செல்லப்படலாம் .


இந்நூல் மொத்தம் 6 பகுதிகளால் ஆனது அதில்  முதல் பகுதி வரலாற்றில் சாதியின் பெயரால் நடந்த கொடுமைகளை பற்றியும், சமகாலத்தில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது பற்றியும் 2016 அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் சாதி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது பற்றியும் விளக்குகிறது. இரண்டாவது பகுதி சாதி என்ற கருத்தாக்கம் எப்படி கட்டமைக்க பட்டது அது மானுட சமுகத்தின் ஆழ் மனதில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி பேசுகிறது. “8 pillars of caste” என்ற மூன்றாவது பகுதியில் சாதியை தூக்கி நிறுத்தும் முக்கிய 8 கூறுகளை பற்றி எழுதியுள்ளார் இவை அனைத்தும் பாபாசாஹேப் தனது “caste in india- இந்தியாவில் சாதிகள்” என்ற நூலில் எழுதியவை போலவே இருக்கிறது.


 நான்காவது பகுதியில் சாதி மக்களிடம் எப்படி கடைபிடிக்க படுகிறது, குறிப்பாக அமெரிக்காவின் அரசு எந்திரம், காவல்துறை, இன்னபிறதுறைகளிலும் சாதி ஏற்படுத்திய தாக்கத்தினால் கடைபிடிக்கப்படும் ஏற்ற தாழ்வுகள் பற்றி பேசுகிறது.  


“Consequence of caste” என்ற பகுதியில் சாதியின் இரட்டைத்தன்மையினை அதாவது உயர் சாதிக்கும் -கீழ் சாதிக்கும் இடையான சமூக வேறுபாடுகளை, பல்வேறு உண்மை சம்பவங்கள் மூலமும் தனக்கு நடந்த அனுபவங்கள் மூலமும் விளக்குகிறார். 


ஆறாவது பகுதி முழுக்க முழுக்க 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றியும் அப்போது அதை சுற்றி நடந்த மாற்றங்களும், வெற்றிபெற உதவிய உயர்சாதி மனோபாவம் பற்றி விளக்குகிறார். அதில் கடைசி கட்டுரையில் அந்த வாக்கு சதவிகிதங்கள் மக்களுக்கு ஏற்றவாறு பகுக்கப்பட்டு எந்த கட்சிக்கு எதன் அடிப்படையில் செலுத்தப்பட்டது என்றும் விளக்கி இருப்பர் அதில் பெரும்பான்மை வெள்ளை அமெரிக்கர்கள் Donald trump இன் Republic partyக்கும் ,பிற சிறுபான்மை இன மற்றும் கறுப்பின மக்கள் Hillary Rodham Clintonஇன் Democratic party க்கும் தான் வாக்களித்தனர் என்றும்  இந்த தேர்தல் முடிவு என்பதே சாதிய மனோபாவத்தின் வெளிப்பாடு என்று முடிப்பார்.


கடைசி பகுதியில் சாதியை வெறுத்து பூணூலை கழட்டி எரியும் பார்ப்பனரும், Holocaust  க்கு மன்னிப்புக்கேட்கும் Nazi ஜெர்மானியரும், கறுப்பின ஒடுக்குமுறைக்கு எதிராய் துணை நிற்கும் வெள்ளை அமெரிக்கரும் இருக்க தான் செய்கிறார்கள் என்று முடிக்கிறார்.


“A WORLD WITHOUT CASTE” என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள முடிவுரை அனைவரும் வாசிக்கவேண்டிய அவசியமான ஒன்று, குறைந்தபட்சம் இந்நூலில் முடிவுரையை மட்டும் வாசித்துவிடுங்கள். "A world without caste would set everyone free." என்று இந்நூல் முடியும்.


 அம்பேத்கர் எழுதிய “caste in inda” என்ற நூலின் US versionஆக  இதை எடுத்துக்கொள்ளலாம், சில கூடுதல் தகவல்கள் இருந்தாலும் நூலின் அடிப்படை இது தான் இந்தியாவின் சாதி அமைப்பை அவர் பெரிதாக உணராமல் போனதால், குறைத்துமதீப்பீட்டதாக தெரிகிறது, எது எப்படியோ சாதி என்ற கருத்தாக்கம் உலக வெளிச்சம் பெற்று ஏதாவது மாற்றம் நிகழ்ந்தால் மகிழ்ச்சி!


ஒரு Afro-dalit மாநாட்டில் பங்கேற்று திரும்பும் போது இவரின் suitcaseஐ விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் காவலர்  ஆராயும் போது அந்த நிகழ்ச்சியில் பரிசாக வழங்கப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கரின் உருவம் பொதிந்த ஒரு கேடயம் இருக்கும், எல்லாம் சரிப்பார்த்த பிறகு அந்த காவலர் [கறுப்பினத்தவர்] “யார் இவர்?”  என்று கேட்கும்போது isabel wilkerson சொல்லுவார் "இவர் தான் இந்தியாவின் martin luther king jr"என்று, அந்த தருணம் என்னை அறியாமலேயே என் மயிர் சிலிர்த்தது.  


அமெரிக்காவின் சாதி அமைப்பையும், பொதுவாக சாதியின் தன்மைகளையும் அதோடு கொஞ்சம் வரலாறையும் தெரிந்துகொள்ள அவசியம் வாசிக்கவும்.


“சாதி ஒழிப்பே  மானுட விடுதலை” 

ஜெய் பீம்! 

வெல்க பெரியார்! 


Book: caste: The orgins of our discontents 

Author: Isabel wilkerson 

Page:  496


#must_read

#BLM 

#caste 


Sunil khilani’s review  about the book - https://www.newyorker.com/magazine/2020/08/17/isabel-wilkersons-world-historical-theory-of-race-and-caste

   

 

 



   


 

Comments