GUILTY MEN OF INDIA'S PARTITION - Ram Manohar Lohia

GUILTY MEN OF INDIA'S PARTITION - Lohia




India wins freedom என்ற Maulana Abul Kalam Azad புத்தகத்திற்கு எதிர்வினை ஆற்றும் விதத்திலும், பிரிவினைக்கான முக்கிய காரணங்களை தனது அனுபவங்களின் மூலமும், பல மறைக்கப்பட்ட நிகழ்வுகளின் மூலமும் ஒரு புத்தகமாக தொகுத்து எழுதியுள்ளார் Rammanohar lohia.  காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த இளம் சுதந்திர போராட்ட வீரர் லோஹியா, தேச பிரிவினைக்கு முற்றிலும் எதிரானவர், இந்து -முஸ்லீம் ஒற்றுமையை தன் வாழ்நாள் முழுக்க கொள்கையாக கொண்டவர். இறுதி வரை இந்தியா- பாகிஸ்தான் இணைப்பு நடக்காதா என்ற ஏக்கத்தில் வாழ்ந்துள்ளார் என்பதை  தனது எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். 


தேச பிரிவினைக்கான முக்கிய காரணங்களாக லோஹியா கருதியவை 

ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி மனநிலை 

காங்கிரஸ் தலைமையின் வீழ்ச்சி

இந்து-முஸ்லீம் கலவரத்தின் வரலாற்று  புறநிலை

 மக்களிடையே  சகிப்புத்தன்மை இல்லாதது

காந்திஜியின் அகிம்சை

முஸ்லிம் லீக்கின் பிரிவினைவாதம்

நல்ல வாய்ப்புகள் வந்தும்  அவற்றை சரியான வகையில் பயன்படுத்த தவறியது. 

ஆகிய ஏழும் தான்.


இதில் நம் அனைவர்க்கும் தெரிந்தது, சொல்லப்பட்டது ஜின்னாவின் பிரிவினை கோரிக்கை, பிரிட்டிஷின் சந்தர்ப்பவாதம், இந்து முஸ்லீம் இடையிலான வரலாற்று முரண்பாடுகளும், வன்ம மனப்பான்மையும்.


நேருவையும் படேலையும் மூர்க்கமாக விமர்சனம் செய்கிறார், நேருவும் படேலும் தங்களிடம் அதிகாரம் வந்து சேரவேண்டும் என்கிற அவசரத்தில் பிரிவினையை பெரிதாக கண்டுகொள்ள வில்லை என்றும், நேருவின் மனநிலை(dull) அந்த காலகட்டத்தில் எது கிடைத்தாலும் சரி என்ற நிலைக்கு மாறி இருந்தது என்றும் பதிவு செய்கிறார், இதற்கான ஆதாரங்களை நேருவுடனான சந்திப்பில் அவருக்கு கிடைத்த அனுபவங்கள் மூலம் பதிவு செய்கிறார். 


இன்னும் ஒரு படி மேலே சென்று, நேருவுக்கு எல்லாம் அரசியல் தான், அது நட்பாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி, மனதளவில் மிகவும் நல்ல மனிதர், ஆனால் தந்திரமும் சந்தர்பவாதமும் அவரிடம் அதிகம் காணப்பட்டது என்றும் கூறுகிறார். 


பிரிவினைக்கு மற்றுமொரு காரணமாக காந்தியின் அகிம்சை முறையையும் அவர் சாதியை குறைத்து மதீப்பீட்டதும் தான் என்கிறார். காந்தி என்கிற மனிதர் இந்திய விடுதலை போராட்டத்தில் பங்குபெறாமல் இருந்திருந்தால் இந்தியாவுக்கு முன்கூட்டியே விடுதலை கிடைத்திருக்கலாம் என்றும், காந்தியின் வருகைக்கு முன்பு இருந்த Constitutanalist and revolutionist ஆகிய பிரிவுகளின் காரணத்தால், பிரிட்டிஷ் ஒரு தரப்பை(Revolutionist) கட்டுப்படுத்த மற்றோரு தரப்புக்கு(constitutionalist) சாதகமாக இருக்கும் பட்சத்தில் விடுதலை விரைவில் கிடைத்திருக்கும், பிரிவினையும் தடுக்கப்பட்டிருக்கும் என்றும் தீர்க்கமாக கூறுகிறார். மேலும் காந்தி எனக்கு தந்தை போன்றவர் அந்த உரிமையுடன் தான் அவரை விமர்சனம் செய்கிறேன் என்றும் பதிவுசெய்கிறார். 


காந்தியின் வருகையும் அவரின் கொள்கையான அகிம்சையும் பிரிவினையை ஊக்குவித்து சுதந்தரத்தை தாமதப்படுத்தியது என்றும் சொல்கிறார்.


மேலும் அம்பேத்கருக்கு பிறகு பிரிவினையிலும் தேச ஒற்றுமையிலும் சாதியின் பங்கை  சரியாக மதிப்பிட்டவர் லோஹியா மட்டும் தான்(எனக்கு தெரிந்த அளவில் ). பிரிட்டிஷ்-இந்திய(Undivided india) மக்களிடையே நிலவிய ஒற்றுமை இன்மைக்கு முக்கிய காரணம் சாதி தான், காந்தி 1942க்கு முன்பு  வரை சாதியை பெரிதாக கண்டுகொள்ளவில்லை, மேலும் இந்து-முஸ்லிம் பிரிவுகளில் இருந்த பெருபான்மை மக்கள் பெரிய அளவில் அரசியலமைய படாததும் அவர்களிடயே நிலவிய சாதிய முரண்களை கலையாயதும், சில மதவாதிகளுக்கு சாதகமாக அமைத்தது. 



காந்தி போன்ற பெரும் புகழை கொண்ட மனிதர் நினைத்திருந்தால் இந்த நிலையை மாற்றி இருக்கலாம் ஆனால் அதற்குள் காலம் ஓடி விட்டது, அவர் சாதியின் கொடூர  தன்மையை உணரும் தருணத்தில் காங்கிரஸ் அவர் கையில் இல்லை என்றும் வருத்தத்தோடு கூறுகிறார் . நேருவும் படேலும் காந்தியை முடக்கிப்போட்டு விட்டார்கள் என்றும் பதிவுசெய்கிறார்.


முழுக்க முழுக்க தனது சுய அனுபவித்தினாலான விமர்சனத்தை வைத்து ஒரு நூலை எழுதியுள்ளார்,பிரிவினை இல்லாமல் போய் இருந்தால் இந்தியா மிக மோசமான நிலையில் இருந்திருக்கும் என்ற வாதமுள்ள அறிவுஜீவிகளுக்கும்(idiocrates) லோஹியா பதில் வைத்துள்ளார். அவரின் தவிப்பை என்னால் உணர முடிந்தது. “காங்கிரஸ் இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இந்த மோசமான பிரிவினை தடுக்கப்பட்டிருக்கும், இப்பொழுதும் நான்  இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டாக ஒற்றுமையாக இருப்பதை போல் கனவு காண்கிறேன், அதை அடைவதும் அடையாமல் போவதும் மக்களாகிய உங்கள் கையிலும், அரசை நடத்துபவர்கள் கையிலும் தான் உள்ளது. சாதியை ஒழித்தால் இன்றி இந்த ஒற்றுமை சாத்தியம் இல்லை” என்று முடிக்கிறார். 


தேச பிரிவினையை நேரில் பார்த்தவர் எழுதிய நூல் என்பதால், விருப்பமுள்ள அனைவரும் தவறாமல் வாசியுங்கள். பல்வேறு அதிரிச்சி தகவல்களும், சுவாரசிய நிகழ்வுகளும் காத்திருக்கின்றன. 




Comments