காதலின் தத்துவம்.(Philosophy of Love) ❤️

LOVE - A Very Short Introduction




The dance of mind and heart is a disordered reel

Where they pursue each other round and round

Ever searching for reasons of whatever they feel

Yet lacking the love when the reasons are found.


~Anon


காதல் பற்றி ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது, ஒருவொருவருக்கும் காதலை பற்றி சில அபிப்ராயங்கள் அல்லது கருத்துக்கள் இருக்கும், ஆனால் தத்துவார்த்த ரீதியாக காதலின் அடிப்படை தான் என்ன? காதல் வருவதற்கு காரணங்கள் தேவையா? எத்தனை காதல் இருக்கலாம்? காதலிக்கப்படுபவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? ஒரு காதல் எப்படி நிகழ்கிறது? அதில் உள்ள வகைகள் என்னென்ன? போன்றவை பற்றி எல்லாம் விரிவாக பேசுகிறது இந்த “LOVE A Short Introduction” புத்தகம், 140 பக்கங்களில் முடிந்தளவில் முக்கியமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார் Ronald de Sousa. 


ஒரு காதல் நிகழ்வதற்கு அடிப்படை ஒரு பொருள்(Object), அது எதுவாக வேண்டுமானால் இருக்கலாம் மனிதர்களாக இருக்கலாம், விலங்குகள் அல்லது உயிரற்ற பண்டம் என எதுவானாலும் காதல் மலரும். பயம், வலி, ஆசை, தேவை போலவே காதலும் ஒரு வகையிலான வேண்டுமென்றே நிலை(Intentional State) தான். சுருக்கமாக சொல்வதென்றால் காதலை ஒரு வித மனப்பான்மை(Attitude) என்றும் சொல்லலாம். 


காதல் நிகழ்வதை ஒரு சுழற்சியாக(cycle) கொண்டால் ஆசை- தேடல் -இன்பம்(Desire-pursuit-pleasure) எல்லாம் அதன் தொடர் நிகழ்வுகள் என்று சொல்லலாம். 




காதல் வருவதற்கு எந்த வித காரணமும் இருக்க தேவை இல்ல, தாகம் எடுப்பது போல், வலி ஏற்படுவது போல் காதலும் எந்த காரணமும் இன்றி(Reason-free) நிகழ்வது தான். ஒரு காரணம்(Reason) என்பது அனைவர்க்கும் பொதுவானதாகவும் உலகளாவிய பொதுமை பணப்பை(Universal) கொண்டதாகவும் இருக்கவேண்டும். அனைத்து காதலுக்கும் ஒரே வகை காரணங்கள் இருப்பது இயலாத காரியம் எனவே காதல் காரணங்கள் இன்றி உருவாகிறது. 


 காரணமும் இல்லை என்றால் பிறகு எப்படி காதல் வருகிறது? காதல் வருவதற்கு ஒரு பொருளோ அல்லது நபரோ தேவை, அவற்றை காதலிப்பவரின் இலக்கு அல்லது குறிக்கோள்(Target) என்று சொல்லலாம், அந்த நபரையோ அல்லது பொருளையோ எதனால் பிடிக்கிறது, எந்த அம்சம் உங்களை காதலிக்க  வைத்துள்ளது என்பதை Focal property என்று சொல்லலாம். சிலருக்கு ஒருவரின் புற அழகு(Beauty) பிடித்திருக்கலாம், சிலருக்கு அவர்களின் அறிவுத்திறன்(Intellect) பிடித்திருக்கலாம். எந்த அம்சம் கவனம் ஈர்க்கிறது என்பதே காதல் நிகழ்வதற்கு முக்கிய புள்ளி எனலாம். இவற்றோடு சேர்த்து transference, unconscious memory,pheromones போன்ற  சில காரண செயல்திறன்களும்(Causal efficacy) காதலை ஊக்குவிக்கலாம். 


ஒரே சமயத்திலோ அல்லது வெவ்வேறு சமயங்களிலோ எத்தனை பேர் மீது வேண்டுமானாலும் காதல் வரலாம் ஒருவொரு காதலும் ஒருவொரு வகையில் ஈடுசெய்ய முடியாததாக அல்லது தனித்துவமானதாக இருக்கும்


கவனிப்பு மற்றும் கவனத்தின் பழக்கங்களை வளர்ப்பதன் மூலமும், பிரச்சனைகளின் போது பரஸ்பர (Compromise or convince) தன்மையினாலும், பொதுவான திட்டமிடல் மற்றும் விளையாட்டில் ஈடுபடுவதன் மூலமும் அன்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.இதை வரலாற்றுத்தன்மையில் உருவாகும் காதல் எனலாம்.(historicity of love). ஒரு வகையில் காதல்  இப்படி இருக்கும் பட்சத்தில், கண்டதும் காதல்(Love at first sight) என்கிற பதம் பல்வேறு புற காரணிகளாலும், வேறு சில அக(intrinsic causal effacacy) செயல்பாடுகளிலும் உருவாவதாகும். 


அறிவியல் ரீதியாக பார்த்தல்  காதல் என்பது இனச்சேர்க்கை(Mating) பற்றியது, இனச்சேர்க்கை என்பது மரபணுவை(Gene) அடுத்த தலைமுறைக்கு வெற்றிகரமாக கடத்துவதாகும்(Transfer). 


அறிவியல் பார்வையில் பல வகை காதல் இருக்கிறது, காதலின் நிறங்கள்(Colours of love) என்று இவற்றை  வகை படுத்தலாம், இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தும் பல்வேறு வேறுபாடுகளுடனும் இருக்கலாம்.

john alan lee கோட்பாட்டின் அடிப்படையில் இவை வகை படுத்த படுகிறது


  1. Agape-  பிறர்மீதான அக்கறை அதிகமாகவும் பாலுணர்வு அற்றும் வரும் காதல்.(96 பட ராமை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்)



  1. Pragma- உணர்ச்சி பிணைப்புகளைக் காட்டிலும் ஒரு உறவின் நன்மைகளை கணக்கிடுவதாகும்.(Kumbalangi Nights, saji கதாபாத்திரம்  )


  1. Storge-  இது சிற்றின்ப அன்பின்(Erotic love) ஒரு பகுதியாக இருக்கலாம், பாலுணர்வுக்கு வெளியேயும் இருக்கலாம்.துணை மீதான பாசம் அதிகமாகவும் காமம் குறிப்பிட அளவிலும் இருக்கும். (காதல் கொண்டேன் தனுஷ்)


  1. Eros- இது Love at first sight வகையை சேர்ந்தது, ஏற்கனவே இருக்கும் ஒரு அச்சின்(Mould) வெளிப்பாடாக இந்த காதல் இருக்கும். (பெரும்பாலன தமிழ் சினிமா காதல் கதைகள் இந்த வகையை சேர்ந்தது தான்.)(more about sex)


  1. Mania- உண்மையான காதல் அல்லது காதலில் இருப்பது என்று நினைக்கும் மன நிலை(limerence). Stalking எல்லாம் இந்த வகை காதலின் வெளிப்பாடு தான். (e.g: மன்மதன் திரைப்பட சிம்பு )


  1. Ludus- இந்த வகை காதலர்களுக்கு காதல்  என்பது ஒரு விளையாட்டு. (தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படம் சிறந்த எடுத்துக்காட்டு.) 


காதலித்து தோல்வி அடைந்தவர்களுக்கு அல்லது காதலித்து கொண்டிருப்பவர்களுக்கும் இதில் எந்த வகையை சேர்வோம் என்று கணிக்க முடிந்திருக்கும். இவை பற்றி  எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்வது சிறந்தது. 


புத்தகத்தின் இறுதி பகுதி காதலின் நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கங்கள்(Ethics and morals) பற்றிய  கோட்பாடுகளை விளக்குகிறது. ஒருவரை மற்றும் தான் காதலிக்க வேண்டுமா? ஒரே பாலின காதல் சரியா? பால் புதுமையினர்(LGBTQ+) பற்றிய புரிதல் எவ்வளவு முக்கியம்? என்பன  பற்றியெல்லாம் விளக்கியுள்ளார். இவை பற்றிய தெளிவு நம்மிடையே நடக்கும் உரையாடல்களில் ஒருவித ஆக்கபூர்வ புரிதல்களை உண்டாக்கும்.


மாறிவரும் சமூக சூழலில், உறவுகளில் ஏற்படும் மாற்றங்களையும் கருத்தில்கொண்டு அதற்கேற்ப நம்மை நாமே புதிப்பித்து கொள்ள வேண்டும்.


 ஒரு காலத்தில் அடிமைத்தனத்தை கடவுள் தான் அனுமதித்தார், இயற்கையாகவே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற கட்டுக்கதைகள் நிறுவப்பட்டு வந்தன. அதை போலவே காதலிலும் நிறைய பிற்போக்கு சம்பரதாயங்களும் கருத்துக்களும் வழக்கத்தில் இருக்கிறது. அத்தகைய புனிதப்படுத்தப்பட்ட கருத்துக்களை உடைத்து, கால சூழலுக்கேற்ப மாறி கொள்வது பகுத்தறிவாகும். 

 

நேசிப்போம் !

மாறிக்கொள்வோம்!

காலமெல்லாம் காதல் வாழ்க!


🏳️‍🌈


                        Ronald de Sousa. 




 

Comments

  1. Last para is on point! ❤😇 beautifully written with relevant cinema examples!👌🏽👌🏽

    ReplyDelete

Post a Comment