The Dravidian Model - Book Review
கடந்த 50 ஆண்டு கால திராவிட ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்ற கட்டுக்கதைகள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது, 2016 இல் அதை அடிப்படையாக வைத்து ஒரு கூட்டணியே அமைந்தது, ஆனால் எது உண்மை? கடந்த 50 ஆண்டுகளில் நாம் என்னென்ன மாற்றங்களை சந்தித்தோம்? அதற்கு அரசு இயற்றிய சட்டங்கள்/திட்டங்கள் எவை? என்பன பற்றி எல்லாம் விரிவாக பேசும் புத்தகம் தான் “The Dravidian Model”. பேராசிரியர்கள் Kalaiyarasan A, Vijayabaskar M ஆகியோர் இணைந்து எழுதியுள்ளார்கள், இதில் திரு Kalaiyarasan அவர்கள் மாநிலத்தின் திட்ட குழு உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் “Mode” என்றால் என்னவென்றே விளக்கத்தை இவர்கள் கொடுத்து விடுகிறார்கள், ‘ஒரு அமைப்பு அல்லது செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது தான் Model’. இதில் குறைகளே இல்லை, எல்லாம் அப்பழுக்கற்ற விசியம் என்றெல்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை, இன்னும் சொல்லவேண்டுமானால் கடைசி பகுதியை இதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியும், அடுத்து இந்த Model சந்திக்கவிருக்கும் சிக்கல்களை குறிப்பிட்டும் விரிவாக எழுதியுள்ளார்கள்.
இந்திய அளவில்ஆய்வு தளத்தில் பெரிதாக பேசுபொருளாக இருக்கும் பொருளாதார Model இரண்டு தான் ஒன்று மனிதவள குறியீடுகளில்(Human Development Indicators) முன்னணியில் இருக்கும் கேரளா Model , மற்றொன்று பொருளாதார வளங்கள் மற்றும் தொழில்துறையில்(Industrial Developments) முன்னேற்றமடைந்த மாநிலமான குஜராத் Model. கேரளா Model பெரியளவில் பேசப்படுவதற்கு ஆய்வு தளத்தில் இருக்கும் இடதுசாரி ஆய்வாளர்கள் முக்கியமான பங்கு வகித்தார்கள், குஜராத் மாடல் என்பது மோடியை பிரதமராக வேண்டும் என்று ஊதி பெருக்கப்பட்ட பிம்பம் தான். இதை தவிர்த்து இன்னொரு மாடல் இருக்கிறது அது தான் இதுவரை யாரும் பெரிதாக பேசாத திராவிட Model . பொருளாதார வளர்ச்சி மற்றும் மனித வள குறியீடு ஆகிய இரண்டிலும் சரியான சமநிலையை கொண்டு இயங்கும் Modelஆக இதை குறிப்பிடலாம்.
இந்த புத்தகத்தில் நடக்கும் ஒப்பீடுகள் எல்லாம் மகாராஷ்டிரா, குஜராத், இந்தியா ஆகிய பொருளாதாரங்களிலிருந்து தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி வேறுபடுகிறது, அது எவ்வித மாற்றங்களை சந்தித்துள்ளது, அந்த முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் அரசின் பங்கு என்ன என்பன பற்றி எல்லாம் தரவுகளுடன் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஏற்றத்தாழ்வு மிகுந்த ஒரு மாநிலம் அனைத்து தரப்பு மக்களின் அபிலாசைகளை(Aspirations) எல்லாம் எப்படி நிறைவேற்றியது, அதற்கு எத்தகைய திட்டங்களை எல்லாம் வகுத்தது, அது எவ்வாறு சாத்தியப்பட்டது என்பன பற்றியும் பேசபட்டுள்ளது. கல்வி, மருத்துவம், கிராம மற்றும் நகர முன்னேற்றம், வளர்ச்சின் & மூலதனங்களில் ஜனநாயக போக்கு போன்றவை நூலின் மைய கருக்கள்.
sub - national அடையாளங்களை ஆதாரமாக கொண்டு இயங்கும் ஒரு அரசு தன்னால் சாத்தியப்பட்ட எல்லைகளில் வரை சென்று முடிந்தளவிலான முன்னேற்றங்களை எப்படி மேற்கொள்ளும்/கொள்ளலாம் என்பதற்கு இந்த Model ஒரு எடுத்துக்காட்டு.
இந்த மாற்றங்களை எல்லாம் Antonio Gramsci கோட்பாடான “Building a national popular will by a political force so as to forge a common vision of social change by incorporating subaltern sections into political process ” என்பதனை அடிப்படையாக வைத்து விளக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் சாதாரணமாக நிகழவில்லை என்பது தான் தமிழ்நாட்டை ஆய்வுசெய்தவர்கள் கூறும் கருத்து, இதற்கான காரணங்களாக சிலர் திராவிட இயக்க நடவடிக்கைகளால் விளைந்த “Dravidian common-sense” என்கிறார்கள். Marguerite Ross Barnett தமிழகத்தின் அரசியல் கலாச்சாரமே(political-culture) இப்படிப்பட்டது தான் என்கிறார். Samuel paul போன்றவர்கள் இந்த அரசுகள்(Dravidian parties) கல்வி மற்றும் மருத்துவம் போன்ற மக்களின் அடிப்படை தேவைகளில் காட்டிய அக்கறையின் விளைவு தான் இந்த மாற்றங்கள் என்கிறார். S. Narayanan போன்றவர்கள் இது அதிகாரவர்க்கத்தின் ஜனநாயகப்படுத்தல்(Democratisation of bureaucracy ) மற்றும் அரசு எந்திரத்தில் அரசியல் கட்சியின் தலையீடுகளால் நடந்தது என்கிறார்கள்.
புத்தகத்தின் உள்ளடக்கம் மிக ஆழமானது அதை இரண்டு பக்கங்களில் எல்லாம் சொல்லி முடிக்க இயலாதது, அதனால் வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாங்கி வாசிக்கவும். நீண்ட கட்டுரை ஒன்றினை எழுதும் எண்ணம் இருக்கிறது, விரைவில் எழுதுகிறேன்.
Book : The Dravidian Model
Author: Kalaiyarasan A, Vijayabaskar M
Comments
Post a Comment