The Practice and Theory of Bolshevism- Bertrand Russell // Book Review


The Practice and Theory of Bolshevism - Bertrand Russell




1917 இல் நடந்த ரஷ்ய புரட்சி தான் பல நாடுகள் சோசியலிச பாதையை தேர்ந்தெடுக்க முக்கிய காரணியாக இருந்தது, போல்ஷிவிக்குகளால்(Bolshevik) நடத்த பட்ட இந்த புரட்சி வெற்றிபெற்ற பின்னர்ரஷ்யா எத்தகைய மாற்றங்களை அடைந்தது? அவர்களின் லட்சியங்களை செயல்படுத்த முடிந்ததா? மக்கள் எத்தகைய நன்மைகளை அடைந்தார்கள்? கலை, அறிவியல், கல்வி, தொழில் துறை போன்றவை எல்லாம் எத்தகைய மாற்றத்தை சந்தித்தன? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் Bertrand Russell எழுதிய புத்தகம் தான்”The Practice and Theory of Bolshevism”



1920 களில் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட Russell அங்கு நடந்த அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களை பதிவுசெய்துள்ளார், மேலும் Lenin, Trotsky, gorky போன்ற மார்க்சிய சிந்தனையாளர்களுடனும் தலைவர்களுடன் இவர் நிகழ்த்திய உரையாடலையும் அது சார்ந்த அனுபவங்களையும் பதிவு செய்துள்ளார். போர், வெறுப்பு, வன்மம் போன்ற மனிதகுல விரோத செயல்களுக்கு எதிரானவர் Russell, முதல் உலக போரை எதிர்த்தமைக்காக(arrested for being a pacifist) பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டார், இவரின் அணுகுமுறைகள் தத்துவம் எல்லாம் அதை அடிப்படையாக கொண்டவையாக தான் இருக்கும். 


புரட்சி முடிந்து ரஷ்யா எப்படி இருந்தது? வறுமை ,பசி எல்லாம் பெரிய அளவில் சரிசெய்யபடவில்லை, அங்குள்ள விவாசியிகள் எல்லாம் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானவர்களாக தான் இருந்தார்கள், காரணம் அவர்கள் சுதந்திர வர்த்தகம்(free-trade) முறையை விரும்பினார்கள். ஆனால் எல்லாம் மையப்படுத்தப்பட்டதால் (centralized system) அரசே அனைத்தையும்  கொள்முதல் செய்துகொள்ளும், மேலும் இவர்களுக்கு பெரியளவில் வாழ்வாதார முன்னேற்றமும் இல்லை. 1920 களில் ரஷ்யா ஒரு விவசாய நாடு தான், 17% தான் தொழில் துறை சார்ந்து இயங்கியது, அதிலும் பொருளாதார தடையால் தொழில்துறையும் முடங்கி போய் தான் கிடந்தது.


 மேலும் அனைத்து தரப்பு மக்களும் கம்யூனிசத்தை விரும்பி ஏற்றுக்கொள்ள வில்லை, ஜார்(Tsar  Nicholas) மன்னர்  ஆட்சி,முதலாம்  உலக போர் , வறுமை என மக்கள் தொடர் இன்னல்களால் தவித்த போது ரஷ்ய புரட்சி ஒரு வித ஆசுவாசத்தை கொடுத்தது, ஆனால் அதற்கு பின்னாலும் மக்களின் வாழ்வாதாரத்தில் பெரிய அளவிலான முன்னேற்ற்றங்கள் ஏற்படவில்லை. மேலும் கம்யூனிசத்திற்கு எதிரான புரட்சி மனோநிலையை தடுக்கும் வகையில் அடக்குமுறை மற்றும்  ராணுவ சர்வாதிகாரம் பெரியளவில் இருந்தது. கலை ஒரு தேக்க நிலையை சந்தித்தது, அல்லது பழமையை நோக்கி உழன்று கொன்றிருந்தது, கல்வி பாடத்திட்டமும் பெரியளவில் தணிக்கை செய்யப்பட்டு தான் கற்பிக்கப்பட்டது. 


நகரம்-கிராமங்களிடையே வேறுபாடுகள் அதிக அளவில் இருந்தன, வெளியுறவு கொள்கையில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்காமல் நிலையற்ற(unstable) தன்மை தான் நிலவியது.வெளி வர்த்தக போக்குவரத்திற்கு(External Trade relations) இவர்களின் கம்யூனிச கொள்கை பெரும்தடையாக இருந்தது. பிற நாடுகளிலும் கம்யூனிச அரசை ஏற்படுத்தவேண்டும் என்ற நிர்பந்தமும் இவர்களுக்கு அதிகமாக இருந்தது.  இந்த விசயங்களை பற்றி எல்லாம் விரிவாக பேசியுள்ளார். 


புத்தகத்தில் இரண்டாம் பகுதி போல்ஷிவிசம்(Bolshevism) பற்றியும் அதன் கொள்கைகள் கோட்பாடுகள் பற்றியும் அதில் உள்ள நிறை குறைகள் பற்றியும் கம்யூனிசத்தின்  போதாமைகள் பற்றியும் விரிவாக பேசியுள்ளார். 


மார்க்சியத்தின் தத்துவத்திலே பெரிய பிழை இருக்கத்தான் செய்கிறது, அது வரலாறை வெறும் வர்க்க மோதல்களாக தான் அணுகுகிறது, இதற்கு அவர்கள் கொண்ட இயங்கியல்  பொருள்முதல்வாத(Dialectical materialism ) தத்துவம் ஒரு காரணம், இந்த தத்துவத்தில் உள்ள குறைபாடுகள் பற்றியும் விளக்கமாக பேசியுள்ளார்.


 பொருளாதார சுரண்டலுக்கும்(economic inequalities) சமத்துவமின்மைக்கும் எதிராக பேசும் கம்யூனிஸ்டுகள், அதிகார ஏற்றத்தாழ்வுகளை(power inequalities) பெரியளவில் கண்டுகொள்வதில்லை, அந்த மையப்படுத்தப்பட்ட அதிகாரம்(centralized organisation)  அனைத்துவகையான செயல்பாடுகளையும் முடக்கிப்போட்டதுடன் அவர்களின் லட்சியத்திற்க்கே எதிரான ஒன்றாக இருக்கிறது. 


முதலாளித்துவத்திற்கு எதிரான உலகளவிலான ஒரு கம்யூனிச அரசை நிறுவுவதென்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதை அந்த சமயத்தில் நிலவிய அரசியல் சூழலை வைத்து விளக்கியுள்ளார், மேலும் கம்யூனிசம் வெற்றியடைய தேவைப்படும் சில பரிந்துரைகளை(conditions & recommendations) வழங்கியும்யுள்ளார். ரஸ்சியாவில் கம்யூனிட்டுகள் நிகழ்த்தி காட்டியது அசாத்தியமான ஒன்று தான்,ஆனால் அந்த முறையே பிற நாடுகளில் கடைபிடிக்கப்பட்டால் அதனால் வரும் விளைவு மோசமானதாக(chaos) தான் இருக்கும் என்று கூறி நிறைவு செய்கிறார் . 


Russell முதலாளித்துவத்திற்கு ஆதரவானவர் எல்லாம் இல்லை, அவரின் பொருளாதாரம் பற்றிய பார்வை வேறானது, சுரண்டலுக்கு எதிரானவர் தான், அதனால் அவரின் அடையாளத்தை ஆராய்வதை விடுத்தது அவர் கூற வரும் கருத்துக்களை விவாதிப்போம்.


அனைவரும் அவசியம் வாசிக்கவும்.


BOOK: The Practice and Theory of Bolshevism


AUTHOR: Bertrand Russell

Comments

Post a Comment