அறிவு AkA Bob marley

“All I want to say is that they don't really care about us” -Michael Jackson


வாய்ப்பு நமக்கு எல்லாம் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. - சார்பட்ட பரம்பரை






பாடகர் அறிவை வெகுமக்கள் அறிந்துகொண்டது அவரின் சினிமா பாடல்களுக்கு பிறகாக தான் இருக்க முடியும். குறிப்பாக மாஸ்டர் திரைப்படத்தில் வரும் "vaathi raidu", வடசென்னை படத்தில் வரும் "பட்டாபட்டி" மற்றும் சமீபத்தில் வெளியான “Enjoyi enjaami” போன்ற பாடல்கள் வெகுஜன மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. 


ஆனால் ஒரு கலகக்காரனாக, அரசியல் தத்துவங்களுக்கு RAP வடிவம் கொடுத்த அறிவை வெகு சிலரே அறிந்திருக்க வாய்ப்புண்டு. குறிப்பாக "Casteless Collective" மற்றும் "Therukural" போன்ற Bannerகளில் அறிவு எழுதி-பாடிய பாடல்களை எல்லாம் கேட்டால் இப்போதும் மெய் சிலிர்க்கும். 


அறிவை தமிழ்நாட்டின் Bob marley என்று சொன்னால் அது மிகையல்ல. 


அம்பேத்கரை வாசிக்க தொடங்கிய சமயத்தில், அறிவு எழுதிய "பாபாசாகேப் என்றொருவர் பாரத நாட்டின் தந்தை அவர்" என்ற பாடலை தினமும் கேட்பது வழக்கம். இந்த ஆல்பத்தில் இருக்கும் பிற பாடல்களும் சாதி ஒழிப்புக் எதிராக எழுப்பப்பட்ட சமரசமற்ற முழக்கங்கள். 


“Quota” என்று Casteless collectiveல் வரும் பாடல் ஒன்றில் " ஆயிரம் வருசமாச்சு நிலமைய மாத்த நீ இலவசம்னு சொல்லாதடா தகாத வார்த்தை" என்று இட ஒதுக்கீட்டின் வரலாற்றை ஒரு வரியில் சொல்லி இருப்பான் அறிவு. 


சென்னை என்றால் ‘பில்டர் காபி’  என்றும் ‘மைலாப்பூர்’ என்றும் பாடல்கள்  வெளிவந்த சமயத்தில்"வடசென்னை எப்படி இருக்கும் யாருகாச்சும் தெரியுமா" என்று இழந்த உரிமைகளுக்கு நியாயம் கேட்டவன். 


அரசியல் என்றால் என்னவென்று தெரியாதா ஒரு தலைமுறை உருவாகி கொண்டிருந்த காலத்தில் "கள்ள மௌனி" எங்கிற பாடல் இளம் தலைமுறையின் மனசாட்சியை கேள்விகேட்டது . 


"Anti-Indian" எங்கிற பாடல் மூலம் பாசிசத்தின் முகத்தில் அடித்து மனிதம் பேசியது அவன் குரல். 


தூத்துக்குடி Sterlite போராட்டம் நடந்த போது, அஇஅதிமுக அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான swolinனின் "நான் Snowlin பேசுறேன் காதில் விழுதா" என்கிற உணர்வு பூர்வமான வரிகளுக்கு சொந்தகாரன் அவன். 


"Clubbula mabbula" என்று பெண்களை கொச்சை படுத்தி Hiphop பாடல்கள் வெளிவந்த சமயத்தில் “திமிரான தமிழச்சி” என்னும் பாடலில் "Right-o thapp-o நீ பிடிச்சத செய்யடி club-o mubb-o" என்று பாலின சமத்துவம் பேசியது அறிவின் குரல். 


CAA போராட்டம் நடந்த சமயத்தில் அடக்குமுறைக்கு எதிராக  "சண்டை செய்வோம்" என்ற குமுறி எழுந்தது அறிவின் குரல். 


வாத்தி ரெய்டு பாடலை உற்று கவனித்தால் அதில் "கற்ப்பி-ஒன்று சேர்" என்று அம்பேத்கரின் சிந்தனை இருப்பதும் "பேதங்கள் இல்லாதிருக்கும் நாடெங்கள் கண்ணாய் இருக்கும்" எங்கிற சமத்துவ சிந்தனையும், commercial சினிமா பாடலில் இருப்பது புரியும். 


"Enjoyi enjami" என்னும் அறிவின் வெற்றி பாடல் நாய்-நரி-பூனை என அனைத்து உயிர்களுக்கும் நியாயம் கேட்டது. 


அவன் சினிமா பாடகன் என்பதை தாண்டி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, சாதி ஒழிப்பு என்று மக்களின் விடுதலைக்காக பாடியவன் - எழுதியவன். 


Rolling stone செய்திருப்பது ஒரு பெரும் கலைஞனுடைய திறமையின் இருட்டடிப்பு. 


மீண்டும் தொடக்கத்தில் இருக்கும் Michael Jackson வரிகளை படித்து பார்க்கவும். 


Comments

Post a Comment