Ambedkar - Towards an enlightened india




அண்ணலின் வாழ்கை வரலாற்றை மிக சுருக்கமாக, அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த புற நிகழ்வுகள் மூலம் நம் முன் விவரிக்கிறார்” Gail omvedt”. ஒரு அமெரிக்கரான இவர் இந்தியாவில் உள்ள சாதி வேற்றுமை பற்றியும், அம்பேத்கரின் வாழ்க்கையை பற்றியுமான ஆய்வு நூல்களை எழுதி வருகிறார் அப்படி எழுதியது தான் “Ambedkar: Towards an enlightned india”. 

அனைவரும் வாசிக்கவேண்டிய அவசியமான நூல். சுருக்கமாக சில செய்திகளை மட்டும் இங்கே பகிர்கிறேன். 

1918இல் Journal of an indian economic society என்ற இதழில் Bertrand russell எழுதிய புத்தகத்திற்கு நூல் அறிமுகம் எழுதி வெளியிட்டு இருப்பார். தொடக்க காலங்களில் அம்பேத்கர் தனியுடைமைக்கு எதிரானவர் எல்லாம் இல்லை(இறுதி காலகட்டங்களிலும் அப்படிதான்), பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிக அளவில் இருக்க கூடாது என்று தான் நினைத்தார். விவசாயம் பற்றி வெளியிட்ட கட்டுரை ஒன்றில் விவசாயம் அல்லாத தொழில்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தான் இந்தியாவில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய துறையின் இன்னல்களுக்கு பெரும் தீர்வாக அமையும் என்று பதிவு செய்கிறார்.  

இந்திய கம்யூனிஸ்ட்களில் வாக்கு வங்கி அரசியல் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், இந்தியா போன்ற சாதிய சமுகத்தில் வர்க்க முரண்களை முதன்மை படுத்தி சாதியை கண்டு கொள்ளாமல் விட்டது தான். அவர்கள் அம்பேத்கருடனும், பெரியருடனும் (சாதி ஒழிப்பு அரசியலில்) சேர்ந்து பயணிக்காமல் விட்டது தான் அவர்களின் பெருத்த பின்னடைவுக்கு காரணம் என்றும் ஆசிரியர் பதிவு செய்கிறார். 

அம்பேத்கரின் இறுதி காலத்தில் எவர் எழுதிய "பௌத்தமும் அவர் தம்மமும்(Buddha and his dhamma)" என்ற நூலை வெளியிட அரசிடம் உதவு கேட்டு நேருவுக்கு கடிதம் எழுதியுள்ளார், அதில் "நூலை வெளியிட ரூபாய் 20,000 அளித்து அரசு உதவி செய்ய வேண்டும்" என்று எழுதியுள்ளார், அதை படித்த நேரு தன்னால் அந்த தொகையை நிர்வகிக்க முடியாது என்றும் அதை எஸ். ராதாகிருஷ்ணனுக்கு(ஆமா! அவரே தான் ) அனுப்பியுள்ளேன் அவர் உதவுவார் என்றும் பதில் எழுதியுள்ளார். ஆனால் ராதாகிருஷ்ணனோ வேதாந்தா தத்துவமும் பௌத்த தத்துவமும் ஒன்று தான் என்றும் இதை அரசு வெளியிட எந்த அவசியமும் இல்லை என்றும் கூறி நிராகரித்துள்ளார். 

இது போன்ற பல அறியப்படா செய்திகள் நூல் முழுவதும் இடம்பெற்றுள்ளன, அம்பேத்கரின் நோக்கம் எல்லாம் இந்த இந்திய சமூகத்தை சாதியின் பிடியில் இருந்து விடுவித்து ஒரு அறிவார்ந்த சமூகமாக சீரமைக்க வேண்டும் என்பது தான். அதற்கான பாதையை முன்னிலை படுத்தி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும், அடுத்த தலைமுறை அவர் கண்ட கனவில் வாழ வழிவகுப்போம். 

தோழர்கள் அனைவரும் அவசியம் வாசியுங்கள். 

BOOK: Ambedkar: towards an enlightened india
AUTHOR: Gail Omvedt

#Do_read


             Remembering Gail omvedit 

Comments

Post a Comment