"வாழ்வில்" - அண்ணா எனும் இலக்கியவாதி



 "அண்ணா"வில் இருக்கும் "அ" - அதிசயம் என்ற பொருள்படும் போல், ஒரு அரசியல்வாதியாக , முதலமைச்சராக தான் அண்ணாவை பலருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் அண்ணா ஒரு பல்துறை வித்தகர்(Jack of all trades) என்றால் மிகையல்ல, இப்போது இருக்கும் சுமந்த ராமன் போல் எல்லாம் இல்லை, தான் பணியாற்றிய துறையில் அவர் கைதேர்ந்தவராகவும் நிபுணத்துவம்(Expert) பெற்றவராகவும் இருந்தார்.

 

அண்ணாவின் இலக்கிய புத்தகங்களை படிக்கும் போதெல்லாம் ஒரு ஆச்சரியம் தொற்றிக்கொள்ளும், இவரா இப்படி எழுதி இருக்கிறார்? ஒரு  பக்கம் அரசியல், இன்னொருபக்கம் சினிமா கதை-வசனம். எப்படி இவரால் முடிகிறது.

 

முதல் முதலில் அண்ணாவின் “செவ்வாழை” சிறுகதை படிக்கும் போது தோன்றியது, ஒரு கம்யூனிஸ்ட்டால் கூட அப்படி ஒரு சிறுகதையை எழுதி இருக்க முடியாது. உழைப்பு சுரண்டலை(Wage-labour-value theory) அவ்வளவு எளிமையாக கதையாக்கி இருப்பார்.

 

அண்ணாவை தமிழகத்தின் George Bernard Shaw என்பார்கள். அவர் எழுத்துக்களில் ஒரு பிரச்சார(Propaganda) தொனி இருக்கும், திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கே உரிய தொனி அது.

 

திராவிட நாடு இதழில் வெளிவந்த "
வாழ்வில்" என்கிற சிறுகதையும் அப்படி பட்ட ஒன்று தான், பகுத்தறிவு பிரச்சாரம் செய்தது. திமுக தொடங்கி தேர்தல் அரசியலில் ஈடுபடாத காலம் அது(1955). மக்களிடையே உள்ள பிற்போக்குதனங்களால் அவர்கள் அடையும் ஏமாற்றங்களையும், மூடத்தனங்களையும் கேள்விக்குட்படுத்தி இருப்பார்.

 

அந்த இலக்கிய நடை இருக்கிறதே, சாமானினியக்கு புரியும் எளிய  நடை, இந்த கதையில் வரும் ஒரு கிழவியின் கதாபாத்திரம் பற்றி அண்ணா  "ஆயிரம் தெய்வங்களை மறுபடியும் மறுபடியும்  வேண்டிக்கொண்டாள். தெய்வங்களுக்கு இது தானா வேலை? ஒரு திருவிழா முடிந்ததும், மற்றோர் திருவிழாவுக்குத் தங்களை தயாராக்கி கொள்வதற்கே காலம் போதவில்லை." என்று பகடி செய்திருப்பார்.

 

//

“சுவரில் இருக்கும் சித்திரதோடு யார் பேசுகிறார்கள்?”

 

“எண்ணம் வினாடியில் எதையும் தாண்டும்.”

 

“சரிந்து போன சுவர், பிய்ந்துபோன கூரை, அதன் நிலைமையும் கிழவியின் கோலமும் ஒரே விதம்.”

 

“ஆக்ஸ்போர்டும் கேம்பிரிட்ஜும் படித்து விட்டு, மனைவிமார்களை அரசமரம் சுற்றிவர செய்வதற்கு,  அமெரிக்கன் மாடல் மோட்டாரில் அனுப்பி வைக்கிறார்கள்.”

 

//

 

இவை எல்லாம் சிறுகதையில் நான் ரசித்த இடங்கள்.

 

அண்ணாவின் இலக்கிய துறை பங்களிப்பை ஒரு  தனி முனைவர்பட்ட  ஆய்வாகவே செய்யலாம்(தமிழ் ஆய்வு மாணவர்கள் யாரவது முன்னெடுத்து செய்தால் சிறப்பாக இருக்கும்). அவ்வளவு பரந்துபட்ட பார்வை, பகுத்தறிவு கருத்து, இலக்கிய செறிவு, பகடி, நகைச்சுவை என எல்லாம் கலந்து இருக்கும்.

 

 

BYNGE என்னும் செயலியில் இந்த சிறுகதை கிடைக்கிறது, நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.(Link)

 

 

 



Comments