POST-DEMOCRACY
POST-DEMOCRACY - ஒரு பார்வை
உலக ஒழுங்கு(Global Order) மாறி வரும் சூழலில், அரசியல் கட்சி ஜனநாயகம்(Party Democracy) சமகால சூழலில் எத்தகைய பொருத்தப்பாடுடையதாக இருக்கிறது என்பது பற்றி இரண்டு ஆங்கில கட்டுரைகள் படிக்க நேர்ந்தது. இரண்டும் மேற்குலக ஜனநாயக (Western democracies) நாடுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவையாக இருந்தாலும், உலகளாவிய ஜனநாயக நாடுகளின் போக்கும் அதை ஒத்துப்போவதாகவே தெரிகிறது. இந்திய சூழலிலும் தமிழ்நாடு அரசியல் சூழலோடும் அதை பொருத்தி பார்ப்பது இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
இரண்டாம் உலக போருக்கு பிறகு உலகம் முழுக்க ஜனநாயக நாடுகள் வளர தொடங்கின,சில நாடுகள் உச்சத்தை அடைந்தது. அரசியல் கட்சிகள் ஜனநாயக முறையில் ஆட்சியை பிடித்து அதன் மூலம் தங்கள் சமூக- பொருளாதார கொள்கைகளை நிறைவேத்தியும் வந்தது. பல்வேறு நிலையற்ற(unstable) சூழல் ஏற்பட்டாலும், அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்குமிடையான உறவு நெருக்கமான ஒன்றாகவே இருந்து வந்தது. ஆனால் சமகால நிகழ்வுகள் அதற்கு எதிரான ஒன்றாகவே தெரிகிறது, அரசியல் கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்படும் போக்கு அதிகரித்து வருகிறது அதிலும் குறிப்பாக இடதுசாரி தன்மைகளை(center-left) கொண்ட கட்சிகள் பொருத்தமற்ற ஒன்றாக மாறி வருகிறது.
90களுக்கு பிறகான உலகமயமாக்கல், சந்தை பொருளாதாரத்தில் இருக்கும் குறைபாடுகள் அம்பலப்பட்டாலும், அதில் வலதுசாரிகள் பெரியளவிலான பாதிப்பை சந்திக்க வில்லை. இடதுசாரி தன்மை(center-left) கொண்ட கட்சிகள் தான் மக்களிடையே உள்ள உறவுகளை/ பொறுத்தப்படுகளை(Losing their relevance) இழந்து வருகிறார்கள். இதற்கான காரணம் தான் என்ன?
“Post-Democracy” என்னும் புத்தகத்தில் பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளர் Colin Crouch’s இவ்வாறு குறிப்பிடுகிறார் “வரலாற்று பார்வையில் ஜனநாயகம் என்பது ஒரு வளைவை(Arc) போன்றது, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குறைந்த அளவிலான மக்களே தேர்தல் அரசியலில் ஈடுபட்டார்கள். சந்தையை(Market) ஒப்பிடும்போது மக்களிடையே அரசியல்(Politics) முதன்மைப்படுத்தப்பட்டு பரவிய காலகட்டம் அது. அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஜனநாயகம் உச்சத்தை அடைந்தது, அதன் பிறகு அந்தந்த நாடுகளில் கட்சி ஜனநாயகம் வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது. மக்கள் தவறாமல் வாக்களித்து வந்தாலும், அரசியல் கட்சிகளுக்கிடையான மோதல் போக்கு அதிகரித்து வந்தாலும், முக்கியமான பல முடிவுகளை வேறு யாரோ தீர்மானித்து வருகிறார்கள். மக்கள் அதை பழைய ஜனநாயக அமைப்புகளின் கூறுகளை கொண்டது என்று நம்பினாலும் அது அவ்வாறாக இருப்பதில்லை என்பதே நிதர்சனம்.”
இந்திய அளவில் பார்த்தல் 150 ஆண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம், கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு மேல் தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சி, ஒரு காலத்தில் நாடு முழுக்க காங்கிரஸ் கட்சி தான் அரசாங்கத்தை நடத்தி வந்தது. இன்றைக்கு மக்களிடையே மதிப்பிளந்தும், அந்நியப்படும் வருகிறது. மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்டுகள் இத்தகைய விளைவையே சந்தித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல், இடதுசாரி தன்மைகொண்ட திமுக போன்ற கட்சிகளும் மாறி வரும் அரசியல் சூழலில் தங்களது செல்வாக்கை இழக்க கூடும். I-PAC போன்ற தனியார் அரசியல் ஆலோசகர்களின் வருகையை அப்படி தான் புரிந்துகொள்ளவேண்டி இருக்கிறது. அரசியல் கட்சிகள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு போவதன் விளைவு தான் அரசியல் ஆலோசகர்களின் வருகை என்றே சொல்லலாம்.
இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுக்க இதே போக்கு தான் நிலவி வருகிறது. இதற்கான பழியை உலகமயமாக்கலும், நவதாராளமய கொள்கையும் சுமந்தாக வேண்டும் என்றாலும். இதை தாண்டி இந்த நவதாராளமய கொள்கை ஏற்படுத்திய விளைவு என்பது அரசு எந்திரத்தை பெருநிறுவனங்களோடு முடுச்சுப்போட்டது தான். அம்பானி மற்றும் அதானி போன்றவர்களின் வருகைக்கு அரசின் பங்களிப்பு அதிகம் என்று தான் சொல்லவேண்டும்.Electoral Bonds எல்லாம் இதற்காக அறிமுக படுத்தப்பட்டதாக தான் தெரிகிறது. ஒரு பக்கம் தேர்தலுக்கு நிதி வாங்கிக்கொண்டு மற்றொருபுறம் அவர்களுக்கான சலுகைகளை வழங்குவது தான் நடந்து வருகிறது.மேலும் அரசியல்க்கட்சிகளில் தலைமை பொறுப்பில் இருக்கும் அரசியவாதிகள் எல்லாம் அரசியலை எதோ தொழிலை போல் அணுகி வருகிறார்கள்.மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையான உறவு மேலும் மேலும் சுருங்கி வருவதன் காரணமும் இது தான்.
ஒரு கட்டத்துக்கு மேல் நீண்ட நெடிய வரலாறு கொண்ட அரசியல் கட்சிகள் மக்களை ஈர்க்க தவறி விடுகின்றன, இதன் விளைவு தான், "அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம்" என்று சினிமா நடிகர்கள் கூவுவதும், ஊழல் அற்ற இந்தியா என்று Ex- bureaucrats ஊழலை முதன்மை படுத்தி அரசியலுக்கு வருவதும், மேலும் பிற்போக்கு மத/ சமய மரபுகளை அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சிகள் (Cultist attitude) எல்லாம் இந்த பெரும் அரசியல் கட்சிகளின் பொருத்தமற்று போதலின் விளைவு தான்(irrelevance of political parties with historical legacy).
இடதுசாரி தன்மை கொண்ட கட்சிகளுக்கு இது பேரிடியாக தான் இருக்கும், அவர்களின் வீழ்ச்சி என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். மேலும் இந்த ஜனநாயகத்துக்கு பின்னான(Post-Democratic) நிகழ்வு என்பது சிறு சிறு அமைப்புகளை,மத மற்றும் சாதியவாதிகளை, பிற குறுங்குழுவாதிகளை உருவாக்குவதிலும் வீரியத்தன்மையை கூடியுள்ளது.
ஒருபக்கம் அரசியலில் மதிப்பிழக்கும்(Political Irrelevance) போக்கையும் மற்றோருபுரம் அரசியலற்ற(Apolitical) தலைமுறையின் வருகையையும் இடதுசாரிகளை ஒரு சிறையில் அடைந்துள்ளது. இத்தகைய சூழலில் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடர போகிறோம் என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.
//
I thank Jeyannathann Karunanidhi அண்ணா for his invaluable inputs and insights. //
To know more check this links :
https://amp.theguardian.com/commentisfree/2015/dec/14/british-party-democracy-long-slow-death-elites-cults
https://aeon.co/amp/essays/the-left-is-now-too-weak-for-democracy-to-survive#click=https://t.co/4sPccVmhvU
https://www.nytimes.com/2017/10/02/opinion/europe-center-left-.html
Comments
Post a Comment