UNDERSTANDING CASTE - GAIL OMVEDT

 "The 4 pillars of social democracy in India - Ambedkar, phule, shahu Maharaj of kolhapur, Periyar" 

- Kanshi ram.





சமீபத்தில் மறைந்த மேற்கத்திய ஆய்வாளர் Gail omvedt அவர்கள் எழுதிய “Understanding Caste: From Buddha to Ambedkar and Beyond” என்கிற புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது, 120 பக்க புத்தகம் தான் என்றாலும் இந்து மதம் பற்றியும் சாதி அமைப்பு பற்றியும் அதை எதிர்த்து நடந்த சமூக நீதி போராட்டங்கள் மற்றும் அதில் பங்கெடுத்த முக்கிய ஆளுமைகள் பற்றி எல்லாம் சுருக்கமாக பேசுகிறது இந்நூல். 


இந்நூல் பார்ப்பனிய மதத்தை எதிர்த்து முதலில் சமர் செய்த புத்தரின் தொடங்கி அம்பேத்கர் வரை நீள்கிறது. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பார்ப்பனியத்தை எதிர்த்த புத்தரில் தொடங்கி பார்பனியத்தோடு எந்த ஒரு நிபந்தனையும்(without any common minimum program) அற்று கூட்டு வைத்த BSP( Bahujan samaj party) வரை பேசுகிறது. 


தமிழகத்தில் சுயமரியாதை இயக்க பங்களிப்பை பற்றியும், பெரியாரின் திராவிடநாடு கோரிக்கை எதன் அடிப்படையில் அமைத்தது என்பது பற்றியும் விரிவாக பேசுகிறது. மகாத்மா பூலே, சாவித்ரிபாய் பூலே, பண்டித ராமாபாய், தாராபாய் ஷிண்டே ஆகியோரின் சாதி ஒழிப்பு என்பது பெண்ணியதோடு எப்படி இணைந்திருந்தது என்பதையும் இந்நூல் பேசுகிறது.  கன்ஷி ராம் தொடங்கிய BSPயின் தலைமை மாற்றத்திற்கு பிறகான வாக்கரசியல் செயல்பாடுகள் தனிமனித காழ்ப்பினால் எப்படி நீர்த்து போனது என்பதையும் நூலில் இறுதி பகுதியில் பதிவு செய்துள்ளார். 


இந்து என்பது ஒரு மதத்தை குறிக்கும் சொல்லா? அல்லது ஒரு பகுதியில் வசிக்கும் மக்களை குறிக்கும் சொல்லா? என்பது அகண்ட பாரதம் பேசும் ஹிந்துத்துவவாதிகளிடம் எழுப்பப்பட வேண்டிய கேள்வி. இந்திய துணைக்கண்டத்தை புரிந்துகொள்ள ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் "இந்தியா ஒரு  மழைக்காடு(Rainforest)" என்பார். இங்கு பன்முகத்தன்மை கொண்ட அம்சங்கள் அதிகஅளவில் இடம்பெற்றுள்ளது, மொழி, மதம், இனம், பண்பாடு, வாழ்வியல், கடவுள், வழிப்பாட்டு முறை என அனைத்தும் இடத்திற்கேற்ப மாறுபடும். இந்து என்கிற இந்த அடையாளமே சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக தான் பார்க்கே வேண்டியுள்ளது. 


 சாதி ஒழிப்பு என்பது நீண்ட நாள் இலக்கு, அதை முன்னெடுத்த ஆளுமைகள் அனைவரும் இங்குள்ள தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இடையிலான ஒற்றுமையை முதன்மை படுத்தியுள்ளார்கள். உள்ளபடியே சொல்வேதென்றால் Dalit Panthers அறிக்கையின் அடிப்படையில்  தலித்(Dalit) என்கிற சொல்லலும் பார்ப்பனர் அல்லாதார்(Non-Brahmin) என்கிற சொல்லும் ஒரே அர்த்தத்தில் பொருள்படுகிறது.  ஆனால் நடைமுறையோ தலைகீழாக இருக்கிறது. அந்த ஒற்றுமை பற்றிய விவாதங்கள் ஆக்கபூர்வமானதாக நடக்க வேண்டிய காலகட்டத்தை  நோக்கி நகர்ந்துள்ளோம். 


தமிழகத்திலும் சரி இந்திய அளவிலும் சரி கம்யூனிஸ்டுகள் எப்படி அந்நியப்பட்டு(Irrelevant) போனார்கள் என்பதை இந்நூல் நிச்சயம் தெளிவு படுத்தும். அம்பேத்கர் சாதிக்கு எதிரான முன்னெடுப்பை இரண்டு வகையில் கையாண்டார் ஒன்று சித்தாந்த(Ideological) ரீதியிலானது மற்றோன்று பொருளாதார(Economical) ரீதியிலானது. புத்த மதத்தை ஏற்ப்பதன் மூலம் முதலாவதை அவர் பூர்திசெய்தார், பொருளாதார ரீதியிலான முன்னெடுப்பு எத்தகையது என்பது தெளிவாக தெரியவில்லை. அவர் தொடங்கிய Republic Party பின்னாளில் நீர்த்து போனது. Republic Party பற்றி கன்ஷி ராம் " எப்படி அரசியல் செய்யக்கூடாது என்பதை Republic Partyயை  பார்த்து கற்று கொண்டதாக” கூறுகிறார். 


இப்படி இந்திய முழவதும் நடந்த இயக்க செயல்பாடுகளை பற்றி தெரிந்துகொள்ளவும், அதிலுள்ள நிறை குறைகள் பற்றி புரிந்துகொள்ளவும் இந்த புத்தகம் அவசியம் உதவும். 


வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் வாசித்து பயனடையவும். 


புத்தகத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள புத்தகபட்டியல் அனைவரும் வாசிக்கவேண்டிய ஒன்றாகும். அவற்றையும் இங்கே பகிர்கிறேன் 


Nationalism without a nation in India - Aloysius

Annihilation of caste - Dr. Ambedkar

Philosophy of Hinduism Dr. Ambedkar

The life and times of pandita ramabai - uma chakravarti

Towards a Non-brahmin millennium - V.Geetha, S.V. Rajadurai 

Why i am not a hindu - Kancha Ilaiah 

Debrahmanising history  - Braj Ranjan Mani

Buddhism in India: Challenging Brahmanism and Caste - Gail omvedt 

Slavery - Mahatma Phule 

Dr. Ambedkar and the untouchable movement - Eleanor Zelliot 

 


Comments