பிள்ளையார் அரசியலும் இழிவும்

 "Men are mortal. So are ideas. An idea needs propagation as much as a plant needs watering. Otherwise, both will wither and die." -Dr. Babasaheb Ambedkar 



பிள்ளையார் பிறந்த கதை தெரிந்தால், மானமுள்ள, அறிவுள்ள மனிதன் எவனும் அதனை கொண்டாட மாட்டான், அதை ஏன் நீரில் கரைக்கிறார்கள் என்று தெரிந்தால் காசு செலவு செய்வதை எவனும் விரும்ப மாட்டான். நம்  முன்னோர்களை ஏமாற்றி தான் இன்றளவும் ஒரு கும்பல் பிழைப்பு நடத்தி வருகிறது. நாமும் அதை தொடர்வதால் நமக்கு இழிவை தவிர என்ன  கிடைத்து விட போகிறது.


நமது இழிவை துடைக்க முனைந்த அம்பேத்கர், பெரியார், மகாத்மா பூலே, சாஹு மஹாராஜர்,  போன்றோருக்கு  நாம் செய்யப்போகும் மரியாதை தான் என்ன?  


மனிதன் என்பவன் மதத்தின் பிடியில் சிக்கி தவித்து பல நூற்றாண்டுகள் இருளில் தவித்தான், மேற்குலகம்(Dark age) அப்படி தவித்து தான் கொஞ்சம் கூட அறிவியல் வளர்ச்சி பெறாமல் இருந்தது. அதிலிருந்த அறிவின் துணை கொண்டு மீண்டு வந்தோம். அதை எல்லாம் ஆய்ந்து பார்த்து திருந்த வேண்டாமா? 


மனிதன் யாரோ ஒருவருக்கு அடிமையாகவே இருக்கிறான், சுதந்திர உணர்வும் சுயமரியாதை உணர்வும் எங்கு சென்றது? நாம் ஏன் இந்த இழிவுகளை சுமக்கிறோம், ஏற்றத்தாழ்வுகளை வழிய வந்து ஏற்றுக்கொள்கிறோம்? இதை எல்லாம் நாம் சிந்தித்து பார்க்கவேண்டாமா?


பிள்ளையார் பிறந்த கதை என்பது ஆபாசங்கள், வக்கிரங்கள்,மற்றும்  விலங்கு வதைகள்  நிறைந்தது. பார்வதி குளிக்க செல்லும்போது காவலுக்கு தனது உடலில் இருந்த அழுக்கை பிடித்து உருண்டையாக வைத்ததாகவும், அதை பார்த்த சிவன் “நீ யாரடா காவல் காப்பதற்க்கு” என தலையை வெட்டிவிட்டதாகவும், பின்னர் அந்த அழுக்கு உருண்டையின் உயிரை காக்க யானை ஒன்றின் தலையை வெட்டி அதை இந்த பிண்டத்திற்கு தைத்ததாகவும் சொல்கிறார்கள்.(இதை விட ஆபாசமான கதைகள் எல்லாம் இருக்கிறது)


 கடவுள் என்றால் புனிதன் என்று சொல்லி விட்டு அழுக்கு உருண்டையில் செய்தவன் எப்படி கடவுளாவான்? கடவுளை உருவாக்க முடியும் என்றால் எல்லா கடவுள்களையும் உருவாக்கியது யார் ?(மனிதனின் கற்பனை சக்தி தானே!) காட்டில்  யானையை கொள்பவன் எல்லாம் ஒரு கடவுளா? மனிதர்கள் செய்தால் “குய்யோ! முயோ!” என்று கத்தும் சிலர், இந்த விலங்கு வதையை கேள்விகேட்க வேண்டாமா? 


இந்திய சுதந்திர போராட்டத்தில் மதத்தை கலந்து பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிக்கல் நாட்டிய பெருமை  திலகர் என்னும் பார்பானையே சேரும், பிள்ளையார் அரசியலை தொடங்கியது அவன் தான். பிள்ளையாரை இஸ்லாமிய வெறுப்புக்காக பயன்படுத்தியவனும் அவன் தான்.


பிள்ளையாரை கரைக்கும் நிகழ்வு ஏன் தெரியுமா? முதன்முதலில் திலகர் இந்த பிள்ளையார் சிலை வைத்த போது அதை எல்லாரும் தொட்டு பார்த்தார்கள் , எல்லாரும் என்றால் சூத்திரர்கள், தலித்துகள் என எல்லாரும். இதை கண்டு கோபமடைந்த பார்ப்பனர்கள் திலகரிடம் முறையிட பிள்ளையாரை ஆற்றில் கரைக்கும் முறை அறிமுகமானது. கும்பாபிஷேகம்/ குடமுழுக்கு  செய்வது ஒரு தீட்டு கழிக்கும் நிகழ்வு. அதை போல் தான் இந்த பிள்ளையார் கரைப்பும் தீட்டு கழிக்கும் நிகழ்வே. 


இயற்கைமீதும், நீர்நிலைகள் மீதும் அதீத அக்கறை கொண்ட எவனும் பிள்ளையாரை கரைப்பானா? அது அறிவார்ந்தோர் செய்யும் செயலா என்பதை நாம் எண்ணி பார்க்கவேண்டும்.   


அம்பேத்கர் புத்தமதத்தை தழுவிய போது அதில் மூன்றாவது உறுதிமொழியாக இருந்தது " கவுரி, கணபதி மற்றும் பிற இந்துமத கடவுள்களை நான் நம்பவோ  வணங்கவோ மாட்டேன்" என்பது தான். அம்பேத்கர் சிலை வழிபாட்டில் அறவே நம்பிக்கை அற்றிருந்தவர். 


பெரியார் நமது இழிவை போக்குவதற்காக தான் பிள்ளையார் சிலையை உடைத்தார், காசு போட்டு வாங்கி உடைத்தார். கரைப்பதை விட உடைப்பது எவ்வளவோ மேல் என்றார். பகுத்தறிவு கொண்டு சிந்திக்க சொன்னார். 


இவர்கள் சொல்லியதை எல்லாம் நினைத்து பார்க்க வேண்டும், இதை செய்வதினால் நடக்கப்போகும் லாப நட்டங்களை ஆய்ந்து பார்த்து முடிவு  செய்யவேண்டும். 


தத்துவவியலாளர் Hegel சொல்வார் “The rational alone is real” என்று, பகுத்தறிவுக்குட்பட்டவை மட்டும்  தான் உண்மைகள் என்பதை நினைவில் நிறுத்தி வாழ்க்கையை நடத்துவது தான் 21 ஆம் நூற்றாண்டில் வாழும் மனிதனின் அடிப்படை பண்பாக நான் கருதுகிறேன். 


சிந்திப்பீர்! 



Comments