தமிழ்நாட்டின் Brand Ambassidor - பேரறிஞர் அண்ணா

தமிழ்நாட்டின் Brand Ambassador -  பேரறிஞர் அண்ணா 



தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை, மொழி உரிமையில் தொடங்கி, நீர் பங்கீடு, இடஒதுக்கீடு, நிதி பங்கீடு, சுயமரியாதை  என எல்லாவற்றிற்கும் நாம்  போராட வேண்டி இருந்தது. தமிழகத்தின் வரலாறு என்பது போராட்டத்தின் வரலாறு. 


சுயமரியாதைக்கு போராட்டம் நடத்தினோம் , சமூகநீதிக்கு போராட்டம் நடத்தினோம், மொழி உரிமைக்கு போராட்ட்டம் நடத்தினோம், கலாச்சார திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தினோம் இப்படி எத்தனை எத்தனை போராட்டங்கள் எத்தனை எத்தனை கள பலிகள். 


திராவிட இயக்கம் தேர்தல் அரசியலில் நுழையாமல் இருந்திருந்தால் இன்று  போராட நம்மை இந்திய ஒன்றியம் அனுமதித்திருக்குமா என்பது கேள்வி குறி தான். தமிழ்நாடு கிடைத்திருக்குமா ? இருமொழி கொள்கை கிடைத்திருக்குமா? 69 % இடஒதுக்கீட்டுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்குமா?, பெண்களுக்கு சொத்துரிமை கிடைத்திருக்குமா? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகி இருப்பார்களா என்பதை எல்லாம் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். 


இன்று நாம் அடைத்திருக்கும் ஒருவொன்றிக்கு பின்னரும் ஒரு இயக்கத்தின் வரலாறும் போராட்டமும் நிரம்ப இருக்கிறது. போகிறபோக்கில் இந்த இயக்க பங்களிப்பை யாரேனும் உதாசீனப்படுத்தினால், நியாயமாக காரி உமிழ தான் தோன்ற வேண்டும். 


அண்ணா எடுத்ததிலேயே சிறந்த முடிவு என்றால் இரண்டை சொல்வேன் 

1.  பெரியாரை விட்டு விலகி தனி கட்சி தொடங்கியது 

2.  தேர்தல் அரசியலில் திமுகழகம் பங்கேற்கும் என்றது


அண்ணா தமிழ் மக்களின் அபிலாசைகளை உணர்ந்து தான் இந்த முடிவுகளை எடுத்தார் என்றால் அது மிகையல்ல. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் எழுதிய போது அதில் இருந்த பெரும்பாலானவர்கள் காங்கிரஸ்காரர்கள். மேலும் அவர்கள் அனைத்து மக்களாலும் தேடந்தெடுத்து அனுப்பப்பட்ட உறுப்பினர்களும் அல்ல, திராவிட இயக்க பிரதிநிதிகள் ஒருவர் கூட இல்லை, நமது பிரதிநிதித்துவம் இல்லாத இடத்தில் நம்முடைய கோரிக்கைகளுக்கு எப்படி செவி சாய்ப்பார்கள். திராவிட நாடு கேட்டால் மட்டும் போதுமா அதை அடையும் முயற்சிகளில் இறங்க வேண்டாமா? என்ற கேள்விகளை  கேட்டபின் தான் அண்ணா இந்த இரண்டு முடிவுகளையும் எடுத்திருப்பார். எந்த ஒரு முடிவையும் ஆழ்ந்து சிந்தித்து அதன் பின்னர் எடுக்க கூடியவர் அவர். 


காங்கிரஸில் பெரிய தலைவர்களுக்குள் பிரச்சனைகள் எழுந்து கட்சி உடைந்த  சமயத்தில், திமு கழகம் நெடுஞ்செழியன் போன்ற அடுத்தகட்ட தலைமைக்கு பொறுப்பு வழங்கி கௌரவித்தது. “பத்து பதினொன்று ஆவதை” விரும்பியவர் அண்ணா. அவருக்கு எல்லாரும் முக்கியம், சம்பத் பிரிவை தடுக்க எவ்வளவோ முயற்சிகளை  எடுத்திருப்பார். அவரிடம் இருந்த ஜனநாயகம் தான் திராவிட இயக்கத்தின் அடிநாதமாக இன்றளவும் இருக்கிறது. 


தம்பிகளின் பிரிவுக்காக கண்ணீர் வடித்தவர் அண்ணா, கழக குடும்பங்களை தன குடும்பங்கள்போல் எண்ணி கடிதம் எழுத அவர்  ஒருவரால் தான் முடிந்திருக்கும் . 


நாடாளுமன்றத்தில் அதுவாரை யாரம் பேச துணியாத பேச்சை அண்ணா பேசினார், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றம் செய்யுங்கள். மாநிலங்களுக்கு உரிமை வழங்குங்கள் என்று காங்கிரஸை கேட்டு கொண்டார். இன்று காங்கிரஸ் கட்சி  “மாநில சுயாட்சி” கேட்கும் நிலை வந்திருக்கிறது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 


ஒரு காலத்தில் (1960) உத்தரப்பிரேதேசும், தமிழ்நாடும்(அன்றைய மெட்ராஸ் ஸ்டேட்)  வறுமையிலும், GDPயிலும் கிட்டத்தட்ட ஒரே நிலையில் இருந்தவை. அவர்களுக்கு கூட வருடம் முழுக்க ஓடும் நதிகள்(Perennial Rivers) இருந்தது, இங்கோ வானம் பார்த்த பூமி தான்,  மழை இல்லை என்றால் பஞ்சம், பட்டினி தான். "3 படி அரிசியை லட்சியமாக" வைத்து ஆட்சிக்கு வந்தோம் என்பதை நாம் மறந்து விட கூடாது. இன்று நாம் படித்து அறிவை காசாக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளோம் என்றால் அதற்கு ஒரு இயக்கம் தான் காரணம், அதை இயங்க வைத்தவர்களுள் அண்ணா முதன்மையானவர். 


இன்றும் போராட்டம் தேவை படுகிறது, அண்ணாவும் தேவை படுகிறார். "தமிழ்நாடு" என்பது ஒரு தொலைநோக்கு செயல்திட்டம், நம் தலைமுறை அதை அடையும் என்கிற நம்பிக்கை எனக்கு நிரம்ப உள்ளது. 


அண்ணாவை வாசிப்போம்! அண்ணாவை உள்வாங்குவோம்! அவர் வழி அறிவாயுதம் ஏந்தி சமர் செய்வோம்!



Comments