PERIYAR IS AN INDIVIDUALIST - Perspectives
“You must primarily trust your reason. Your reason will help your emancipation, not god or religion..” - Periyar E.V.R
முன்னெப்போதையும் விட பெரியாரை இளைஞர் பட்டாளம் அதிகம் கொண்டாடுகிறது. அதற்கு காரணம் அவரின் நவீன பகுத்தறிவு சிந்தனை. “இனி வரும் உலகம்” எப்படி இருக்கும் என்பதை 60 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்தவர் அவர். கடவுள்-மதம்-சாதி-இனம் போன்ற பிற்போக்குத்தனங்களை தூக்கி எறிந்துவிட்டு அறிவு கொண்டு சிந்திக்க சொன்னவர்.
“பெரியாரிஸ்ட்” என்றாலே பகுத்தறிவுவாதி(Rationalist) தான், நவீன சிந்தனைகள் கொண்ட பகுத்தறிவுவாதி. உலக இயங்கியலுக்கேற்ப தன்னை மாற்றி கொள்ளும் பக்குவம் பெரியாரிஸ்ட் என்பவருக்கு வேண்டும்.
அ.மார்க்ஸ் தனது "பெரியார்" என்னும் நூலில், பெரியார் ஒரு தாராளவாதி என்கிறார். பெரியாரின் சிந்தனைகளை எல்லாம் தனி மனிதனை அனைத்துவிதமான ஒடுக்குமுறை அமைப்புகளில் இருந்தும் விடுவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சிந்தனைகளே.
சமூகத்தின் மீது அக்கறை இருந்தாலும் தனி மனித சுதந்திரத்தை(Individual Liberty) அதிகம் உயர்த்தி பிடித்தவர் பெரியார் . தான் தொடங்கிய இயக்கத்திற்கு சுயமரியாதை இயக்கம்(Self-respect Movement) என்று பெயர் வைத்தார் என்றால் சுயத்தை(Self) அவர் எவ்வளவு நேசித்தார் என்று உணர்ந்து கொள்ள முடியும்.
குடிஅரசு(Republic), பகுத்தறிவு(Rational), விடுதலை(Liberation), உண்மை(Truth), Revolt, The Modern Rationalist, The Justice என்ற பெயரில் எல்லாம் பத்திரிகை நடத்தினார். இந்த வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் சிந்தனை(Ideals) போக்கு அவ்வளவு ஆழமானது.
அவரை Individualistஆ இல்லை Collectivistஆ என்றால், Collectivismத்தை விட Iindividualism த்தை அதிகம் பேசினார் என்று தான் சொல்ல வேண்டும். அவரின் பெண் விடுதலை சிந்தனைகள் எல்லாம் ‘Individual-இசத்தின்’ வெளிப்பாடாக தான் பார்க்கே வேண்டிய உள்ளது.
இந்திய துணை கண்டத்தில், பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரை விட நவீனமாகவும் எளிமையாகவும் ஒரு சிந்தனையாளர் இருந்ததில்லை. இன்றைக்கும் அவர் சிந்தனைகள் பொருந்தி போவதற்கு அவரின் தொலைநோக்கு பார்வையும், கூர்மையான பகுத்தறிவும் முக்கிய காரணிகளாகும்.
அனைத்து விதமான பிற்போக்கு அமைப்புமுறைகளில் இருந்தும், அடிமைத்தன கட்டமைப்புகளில் இருந்தும் நம்மை விடுவித்து கொள்வது தான் பெரியார் கண்ட விடுதலையாக இருக்க முடியும்.
பெரியார் கனவு கண்ட உலகம் அமைய, நாம் அனைவரும் நவீன சிந்தனைகளை கொண்ட பகுத்தறிவுவாதியாக பக்குவப்பட வேண்டும். மனிதர்களை நேசிக்கவும் அதை விட சுயத்தை(Self) அதிகம் நேசிக்கவும் பழகிக்கொள்வது பெரியாரின் 143 பிறந்தநாளில் நாம் எடுத்து கொள்ளவேண்டிய உறுதிமொழியாகும்.
Comments
Post a Comment