Periyar and Ambedkar - Aasiriyar K Veeramani //நூல் அறிமுகம்//
“The emancipator, The Philosopher, The Law-giver, The orator, The Samson of Intellect, The Nation’s Architect, Lincoln, Lenin and Periyar of the North” - பாபாசாஹேப் அம்பேத்கர் பற்றி ஆசிரியர் கீ. வீரமணி.
அம்பேத்கரை திராவிட இயக்கம் புறக்கணித்துவிட்டது என்று தொடர்ந்து ஒரு சாராரால் அவதூறு பரப்ப பட்டு வருகிறது. பெரியார் காலம் தொட்டே அம்பேத்கரின் அனைத்து முயற்சிகளிலும் துணை நின்றது திராவிட இயக்கம். அதன் சான்றாக தான் இந்நூலை புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
அம்பேத்கரின் நூற்றாண்டுக்கு முன்பே(April 1986) "நாக்பூர் பல்கலைக்கழகத்தில்" நடந்த ஒரு ஆய்வு கருத்தரங்கில் (Seminar) ஆசிரியர் அவர்கள் மூன்று நாள் சொற்பொழிவாக அம்பேத்கரை பற்றி பேசியுள்ளார்.அதன் எழுத்து வடிவம் தான் இந்நூல். நல்ல வேலை அந்த பேச்சு ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஆவணம் செய்யப்பட்டது. இல்லை என்றால் ஆதாரமற்ற அவதூறுகளை அல்லி வீசி இருப்பார்கள் குறுங்குழுவாதிகள்.
“நாகபூர்” இந்திய அரசியல் வரலாற்றில் வரலாற்றில் முக்கியமான இடம். அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற இடம் நாக்பூர் தான். மேலும் தனது “The Untouchables: Who Were They? and why They Became Untouchables” புத்தகத்தில் நாகர்கள் பற்றிய குறிப்ப்பில் நாக்பூரை பற்றிய செய்திகள் வரும். நாகர்களும் திராவிடர்களும் ஒன்றே என்பது அம்பேத்கரின் கூற்று. இந்நூலில் தான் இந்தியா முழுமைக்கும் தமிழ் பேசும் மக்கள் இருந்தார்கள் எனவும் அவர்கள் தான் திராவிடர்கள் எனவும் அம்பேத்கர் எடுத்து கூறி இருப்பார்.
இந்நூலில் அம்பேத்கரின் சுருக்கமான வாழ்கை வரலாறு இடம்பெற்றுள்ளது, இளம் வயது முதல் கடைசி காலம் வரை விசாவுக்காக அவர் காத்திருந்தார். இங்கு “விசா” என்பதை இந்திய ஜனநாயகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை/சுயமரியாதை என்று எடுத்துக்கொள்ளலாம். அவர் சந்தித்த ஒடுக்குமுறைகளை ஆசிரியர் இந்த உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அரசியலை அமைப்பு சட்டத்தை இயற்றுவதில் தொடங்கி, இந்திய பொருளாதாரத்தின் மீது அவர் கொண்டிருந்த அக்கறை, அரசியல் விடுதலையை(Political freedom) விட சமூக விடுதலையில்(Social Liberty) அவர் கொண்ட நாட்டம் போன்றவற்றை சுருக்கமான வாழ்க்கை வரலாறாக விவரிக்கிறார்.
"புத்த காதலும் புத்தக காதலும்" என்று டாக்டர் அம்பேத்கர் பற்றி புத்தகத்தில், ஆசிரியர் அவர்கள், பௌத்த மதத்தின் மீதும் புத்தகங்கள் மீது அம்பேத்கர் கொண்டிருந்த பற்றினை விளக்கி எழுதி இருப்பார். பௌத்தம் ஏற்ற குறிப்புக்கள் பற்றியும், ரங்கூன் பௌத்த மாநாட்டில் பெரியாருக்கும் அண்ணலுக்கும் நடந்த சந்திப்பின் சாரத்தை இந்நூலில் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.
சமூக விடுதலையை பெரியாரும் அண்ணலும் முதன்மையாக கொண்டதில் தொடங்கி சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு, சமூக நீதி, பூனா ஒப்பந்தம், காங்கிரஸ் மற்றும் காந்தி எதிர்ப்பு போன்றவற்றில் இருவரும் கொண்டிருந்த ஒற்றுமைகள் ஒரு தனி பகுதியாக இடம்பெற்றுள்ளது.
அம்பேத்கரின் ”Annihilation of Caste” என்கிற ஆற்றப்படாத உரையை தனது “குடிஅரசு” பத்திரிக்கையில் பெரியார் மொழிபெயர்த்து வெளியிட்டிருப்பார்.
“சாதீ” என்கிற நோயில் தன்மைகளை சரியாக உணர்ந்து அதற்கான மருந்துகளை பரிந்துரைத்த சமூக மருத்துவர்களில் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள் . சில இடங்களில் முரண்பட்டாலும் பெரும்பாலான கருத்துக்களில் இவர்களுக்கிடையில் ஒற்றுமை இருந்தே வந்துள்ளது.
சமகால அரசியல் சூழலில் இருவரின் இருப்பும் அவசிய தேவையாக அமைந்துள்ளது. பெரியார் மற்றும் அம்பேத்கர் இருவரின் கருத்துக்களில் இருக்கும் ஒற்றுமைகளை வாழ்க்கை நிகழ்வுகளையும் அவர்களின் தேவையையும் உணர அனைவரும் இந்நூலை வாசிக்கவேண்டும்.
திராவிட இயக்கத்திடமிருந்து அம்பேத்கரை பிரிக்க வேண்டும் என்கிற RSS projectஐ 90களில் தொடங்கியவர்கள் எல்லாம் இன்றைக்கு யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு இந்த கட்டுரையை முடிக்கிறேன்.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசித்து பயனடையவும்.
Comments
Post a Comment