இயற்கையோ! இயற்கையோ! - சில புரிதல்கள்

 தற்போது தான் திரு. நக்கீரன் எழுதிய "நீர் எழுத்து" நூலை வாசித்து முடித்தேன்(மாலை நூல் அறிமுகத்தை பகிர்கிறேன்).





சில புரிதலுக்காக இந்த பதிவு.
தமிழகத்தில் இருக்கும் நிலஅமைப்பில் 27 % நிலப்பகுதி தான் நீர் ஊடுருவும் திறன்கொண்டவை. பிற பகுதிகளால் நீரை சேமிக்க முடியாது. காரணம் அடியில் இடம்பெற்றிருக்கும் பாறைகள்.
சென்னையில் கட்டிடங்கள் மிகுதியாக இருப்பதால் 4 % தான் ஊடுருவும் திறன். இதில் குறைந்த அளவிலான TMC தண்ணீரை மட்டும் சேமிக்க முடியும்.
கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் தான் சென்னை இருக்கிறது. வடிகால் அமைப்பு சிறப்பாக இருந்தாலும் சரியான திட்டமிடல் இருந்தால் தான் நீர் வடியும்.
விவசாய நிலங்கள் இல்லாத நகரில் ஏரிகளும், குளம், குட்டைகளும் இருந்து என்ன பயன். அதற்கு பதில் தண்ணீரை சேமிக்க நவீன சேமிப்பு முறையை கையாள வேண்டும். வடிகால் வசதிகளோடு கூடிய நவீன கட்டிடங்களை ஏற்படுத்த வேண்டும். கட்டிடங்களை இடித்துவிட்டு ஏரிகளை தோண்டுவோம் என்று யாரவது சொன்னால் "பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா" என்று தான் கேட்க தோன்றும்.
இன்னும் "ஐயோ இயற்கை அழிந்தது! சென்னை முழுகி எல்லாரும் சாக போகிறோம் என்றால்!", அறிவியல் ஆற்றலை வைத்து கொண்டு கோமாளிகளாக சுற்றி கொண்டிருக்கிறோம் என்றே அர்த்தம்.
இயற்கைக்கு எதிராக செயல்பட முடியாது என்றால் அணை கூட கட்டி இருக்க முடியாது. இயற்கையின் அழிவில் இருந்து மீள தான் நவீன அறிவியல் பயன்படுகிறது.
தமிழகத்தின் நகர அமைப்பு முறை தான் நம் பொருளியல் வளர்ச்சியின் அடிநாதம். சூழலியல் பேசும் நண்பர்கள் இயற்கையை காரணம் காட்டி வளர்ச்சியை தடுக்கிறார்கள் என்றே சொல்வேன்.
Global North உடன் ஒப்பிட்டால் Global South சூழிலியல் மாற்றத்திற்கு குறைந்த அளவே காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் சூழலியல் சீர்கேடுகளுக்கு வளர்ந்து வரும் தமிழக நகரங்கள் தான் காரணம் என்றால் என அர்த்தம்.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் சந்திக்கிறோம் என்பதற்காக அதற்கு நாம் தான் காரணம் என்பதை ஏற்க முடியாது. மேலும் பழியை எல்லாம் மக்கள் மீது போடுவதன் மூலம் இவர்கள் என்ன சாதிக்க போகிறார்கள்? வளர்ந்து வரும் நாடுகள் இதற்கு எப்படி பொறுப்பேற்க முடியும் ?
சாதியை நீர்த்துப்போக செய்வதில் நகரங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மேலும் விவசாய துறையில் தேவைக்கு அதிகமாக இருக்கும் மக்கள் கூட்டத்தை நகரங்கள் நோக்கி தொழில் செய்ய அழைத்து வருவதே ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாக நான் பார்க்கிறேன். அவர்களின் வாழ்க்கை முறையிலும் மனிதவள குறியீட்டிலும்(HDI) நகரமயமாதல் நல்ல விளைவுகளையே ஏற்படுத்தும்.
சூழல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது வேறு, பயத்தை உண்டு செய்து மனிதனை குற்றஉணர்ச்சிக்கு நகர்த்துவது என்பது வேறு. சூழலியல் சார்ந்து இயங்கும் அமைப்போ தனிநபரோ இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மரபு, பழமை, இயற்கை வழி என்பதில் எல்லாம் தனிப்பட்ட முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை !
இயற்கையை வெல்ல முடியாது என்று சொல்வார்கள் பின் இவர்களே சமத்துவம் பேசுவார்கள்.
இயற்கையை வெல்ல முடியும்! அது முட்டாள் தனம் அல்ல! அதுவே அறிவியல்.

Comments