"சூழலியல்" - சில கேள்விகள்

 சூழலியல் சில கேள்விகள்




காலநிலை மாற்றத்தின் அறிவியல் பின்னணி பற்றிய கேள்விகள் அல்ல இவை.
தொழில்துறை புரட்சிக்கு பின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவுகளுக்கு வரலாற்று ரீதியாக யார் பொறுப்பு என்பதே கேள்வி?
வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சியடையாத நாடுகள், குறைந்த கார்பன் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கான நிதியை யார் பொறுப்பேற்று வழங்க வேண்டும் என்பதே கேள்வி.



வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளில் குறைந்த மாசை வெளியிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பங்களையும் உற்பத்தி சாதனங்களையும் கிடைக்கச்செய்யும் பொறுப்பை யார் ஏற்ப்பது என்பதே கேள்வி.
வளர்ந்த நாடுகளிடம் உண்மையை பேச/ கேள்வி கேட்க திராணி அற்ற அமைப்புகள், வளர்ந்து வரும் நாடுகளின் அரசாங்கங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதும் , இரண்டாம் தலைமுறையாக பொருளியல் வளர்ச்சி பெற்று வாழ்கை தரத்தை உயர்திக்கொள்ளும் சமூகத்திடம் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதும் ஏன் என்பதே கேள்வி.






வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் ஏன் தங்கள் சொந்த மக்களை கஷ்டங்களுக்கு ஆளாக்க வேண்டும் என்பதை கேள்விக்குட்படுத்தாமல், வளர்ந்த நாடுகளின் ஊதுகுழலாக செயல்படும் அமைப்புகள் எவ்வாறு சூழலியல் சார்ந்த கதையாடல்களை தேர்வு செய்கின்றன என்பதுதான் கேள்வி.



கால நிலை மாற்றத்தின் அரசியலையும் பொருளாதாரத்தையும் வெளிப்படையாக பேசுவது ஏன் (சிலருக்கு ) ஆதரமூட்டுவதாக இருக்கிறது. மேலும் அது ஏன் அறிவியலுக்கு எதிரான நிலைப்பாடாக பார்க்கப்படுகிறது என்பதே கேள்வி.
வளர்ந்த நாடுகள்(Developed Nations) தங்களின் உற்பத்தி நிறுவனங்களையும் procurement chainsயும் வளரும் நாடுகளுக்கு மாற்றிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், வளரும் நாடுகள் மட்டும் எதற்காக கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்பதே கேள்வி.



எடுத்துக்காட்டாக: சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய பகுதிகளில் கனடா எவ்வாறு அதிக மாசுபடுத்தும் தார் மணலைத் தோண்டுகிறது என்பதற்கு எதிராக ஒரு ஒற்றைக் குரல் எழுப்புவதைக் நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா? இந்தியாவில் நிலக்கரிச் சுரங்கத்தைப் பற்றி ஒருவர் கொள்ளும் சீற்றத்தின் அளவைக் காட்டிலும் கனடாவில் எதிர்வினை மிக குறைவு.



வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் அளிக்கும் சேவைக்கும்/ உற்பத்திக்கும் சரியான விலை கொடுக்கப்படுகிறதா? அந்த விலையின் அடிப்படையில் தான் வளர்ந்து வரும் நாடுகள் மாசு கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை அமல்படுத்தமுடியும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
கால நிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்படைய போகும் நாடுகளில் தொழில் துறை வளர்ச்சியை முடக்குவது தான் சூழலியல் நீதியா என்பதே கேள்வி.



தொழில்துறையை வளர்ச்சியை முடக்கும் கதையாடலை தலைமுறைச் சலுகைகளைக் கொண்ட தனிநபர்களின் கற்பனாவாதக் கனவாக ஏன் நினைக்க கூடாது?
தொழில்துறை இயந்திரம் நின்றுவிடும் தருணத்தில் சமூகங்கள் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைப் பற்றி கவலைப்படாத நபர்களின் கற்பனாவாதக் கனவை ஏன் கேள்விக்குட்படுத்தப்படக்கூடாது.
அரசியல் மற்றும் இயற்கை நிகழ்வுகளுக்கு உட்பட்ட சமூகங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் உலகளாவிய பரிணாமத்தின் ஒரு பகுதியாக நாம் இருந்தால், தற்போதுள்ள உலகளாவிய ஒழுங்கை மறுசீரமைக்க உதவும் முடிவுகளை சமூகங்கள் ஏன் எடுக்கக்கூடாது என்பதே கேள்வி.
எடுத்துக்காட்டாக: புவி வெப்பமயமாதலால் ஆர்க்டிக் கடல் வழி திறக்கப்படுமானால், அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய நிலையில் உள்ள நாடுகள் வளர்ந்து வரும் யதார்த்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு துறைமுகங்களை உருவாக்கி கொள்ளலாமே!
புவி மாசு கட்டுப்பாடு சார்ந்த சரியான திட்டமிடலை மேற்கொள்ளாமல் வெறுமனே மாடு மேய்க்க சொல்வதும், இயற்கை விவசாயம் செய்ய சொல்வதும் தொழில் துறையை முடக்க சொல்வதும், எந்த வகை தீர்வை கொடுக்கும் என்பதே கேள்வி.
பருவநிலை மாற்றம் குறித்த அறிவியலில் நம்பிக்கை வைத்துள்ள நிறுவனங்கள், ஆற்றல் உற்பத்தி மற்றும் உற்பத்தியுடன் தொடர்புடைய மாசுக் குறைப்பு அறிவியலில் போதுமான நம்பிக்கை வைத்திருக்கவில்லையா என்பதே கேள்வி.
நாட்டுப்புறக் கதைகளிலும் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றிலும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டது போல் மனித சமூகங்கள் தனது தேவைக்கேற்ப நிலப்பரப்புகளை வடிவமைக்கும் திறன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அமைப்புகள் , நிலப்பரப்புகளை மேன்மையாக கண்காணித்து வடிவமைக்கும் திறன்கள் மிக்க மனித சமூகத்தின் மீதான நம்பிக்கையை இந்த அமைப்புகள் திடீரென இழந்து விட்டனவா என்பதே கேள்வி.
Jeyannathann Karunanithi அண்ணனுடைய பதிவின் தமிழாக்கம் !

Comments