NATIONALISM WITHOUT A NATION





 “It is entirely wrong to concentrate all our attention on the political independence of our country and to forget the foremost significant issue of social and economic independence. It’s disastrous to imagine that political independence necessarily means real all-sided freedom”.  - Dr. BR Ambedkar






 இந்தியா அடிப்படையில் ஒரு தேசமே(Nation) இல்லை என்பது தெளிவு. ஆனால் இந்தியா என்கிற அரசியல் அடையாளத்தை(Political Identity)  சுற்றி ஒரு தேசியம் உருவாகிக்கொண்டே(Nation in the making) இருக்கிறது அந்த செயல்பாடு இன்னும் முடிவடையவில்லை. ஒரு தேசியம் உருவாகிக்கொண்டிரும் அதே சமயத்தில் அதை அழிக்கும்(Anti_nation) கூறுகளும் அதனூடேயே இயங்கி கொண்டிருக்கிறது(Eg: இந்துத்துவம்).  இப்படி இருக்கையில் இந்தியாவில் தேசியம் பற்றியும் தேசிய இயக்கம் பற்றியும் இந்த Anti-nation கருத்தாக்கம்  பற்றியும்  மிக தெளிவாக ஒரு கதையாடலை(Narrative) முன்வைக்கிறார் G.Aloysius அவர்கள்.  


காலனியாட்சிக்காலத்திற்கு முன்பிருந்த சமூகவியல் கூறுகள்  அதன் பின் நடந்த மாற்றங்களுக்கேற்ப அதிகாரத்தையும்(Power) கலாச்சாரத்தையும்(Culture) எப்படி தக்கவைத்து கொண்டன என்பதை 8  பகுதிகளில் விளக்கியுள்ளார். நவீன சிந்தனைகளை புகுத்திய பிரிட்டிஸ்காரர்களால் கூட சாதியை மட்டுப்படுத்த முடியாமல் போனதற்கும் இங்கு நடந்த தேசிய இயக்க நடவடிக்கைகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கவே செய்கிறது. 


இந்திய துணைக்கண்டத்தில் தேசியவாதம் என்பது சமமான அதிகாரப்பகிர்வையும், சமூக-அரசியல் சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டதாக அமையவில்லை மாறாக அது நவீன காலனிய ஆட்சியால் நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தில் ஏற்பட்ட அதிகார பின்னடைவுகளை அரசியல் அதிகாரத்தின் மூலம் தக்கவைத்து கொள்ள நினைத்தது .  இது ஒரு சிறு உயர் சாதி குழுக்களால் முன்னெடுக்க பட்டது. அவர்கள் அனைவரும் காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். தேசியவாதத்தின் மொத்த பிரதிநிதியாக காங்கிரஸ் தன்னை கருதியது, இதன் காரணமாக பிற இயக்கங்களை ஆங்கிலேயர்களின் B - டீம் என்றே வசைபாடியது. அரசியல் விடுதலை(Political Liberty) பேசாமல் சமூக விடுதலை(Social Liberty) பேசிய இயக்கங்களை(E.g: திராவிட இயக்கம் )இவர்கள் இந்திய தேசியவாதத்திற்கு எதிரானவர்களாக சித்தரித்தார்கள், இதற்கு காரணம் அந்த இயக்கங்கள் சமூக சமத்துவத்தை பேசியதே. 


விடுதலை போராட்டத்தில் காந்தியின் காலகட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக தேசியவாதிகள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம், மேலும் இந்திய தேசியத்தின் முகமாக ஒரு சர்வாதிகாரத்தனம் கொண்ட ஆளுமையாக அவர் உருவெடுத்தார். தேசியவாதத்தை மதத்தின் மீதும் நீதிநெறிகள் மீதும் அவர் கட்டமைத்தார். இதன் காரணமாக பிற தேசிய இயக்கங்களில் காணப்படும் “National Popular” & “Hegemony” போன்ற Gramsicன் விளக்கங்கள் இங்கு பொருளாதாரம்(Economics) மற்றும் அரசியல்(Political) ரீதியில் அமையாமல் மதத்தின்(Religion) அடிப்படையில் அமைந்ததற்கு காந்தியின் வருகை முக்கிய பங்காற்றியுள்ளது. 


இத்தகைய மாற்றம் மதத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துவிட்டு,  அரசியல் அதிகாரத்தை உயர்சாதி தேசியவாதிகள் அடைய வழி அமைத்து கொடுத்தது . காந்தி  தலித்துகளை “ஹரிஜன்”(கடவுளின் குழந்தைகள் ) என்று அழைத்தார், தன்னை முதலில் “ஒரு ஹிந்து என்றும் பின்னர் தான் தேசியவாதி என்றும்” பறைசாற்றி கொண்டார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய முன்னெடுப்புகளான 

1. Khilafat Movement

2. தீண்டாமை ஒழிப்பு 

3. கதர் ஆடை பரப்புரை   

இதில் ராட்டையை மட்டும் தான் கடைசி வரையில் அவர் விடாமல் சுற்றி கொண்டிருந்தார். மற்ற இரண்டு கொள்கைகளையும்  அவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை.  


 பூனா ஒப்பந்தத்தை “‘Untouchable hooligans will make common cause with Muslim hooligans and kill caste Hindus”  என்று சொல்லி தான் நிராகரித்தார் காந்தி. அம்பேத்கரின் வார்த்தையில் சொல்வதென்றால் காந்தியின் நோக்கம் என்பது “Saving them againts themselves”(Dalits) என்பதாக தான் இருந்தது. சமூக மாற்றங்கள்(Social change) எதுவம் இல்லாத கிராமங்களையும், வர்ண அமைப்பை அடிப்படையாக கொண்ட ஒரு தேசியத்தை தான் காந்திய பேசிய தேசியவாதம் முன்னிறுத்தியது. 


மேலும் 1940 களுக்கு பிறகு தான் மீண்டும்  இந்து- முஸ்லிம் ஒற்றுமை பற்றி அவர் பேச தொடங்கினார். இப்படி காந்தியின் வருகை யாருக்கு உதவியது என்பதையும் அது தேசிய இயக்கத்திலும்  தேசியவாதம் என்கிற தத்துவத்திலும் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதையும் விளக்கமாகவும் போதிய ஆதரங்களோடும் குறிப்பிட்டுள்ளார். 


இந்தியா என்கிற தேசியத்தின் லட்சியமும்(Aspirations of a Nation) தேசியவாதிகளின் லட்சியமும்(Aspirations of a Nationalist) ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருந்தன. புதுமைகளையும் மாற்றங்களையும் விரும்பாமல் (சில விதிவிலுக்குகள் இருக்கிறது) பழமையான உயர்சாதி அதிகாரத்தை நிறுவவே  அவர்கள் முனைப்பு காட்டினார்கள் என்பது சாதி அமைப்பு ஏற்படுத்திய ஆகப்பெரும் பேரழிவு.  


காலனிய ஆட்சி என்பது ஒரு புறம் மரபார்ந்த(Traditional) சாதிய அதிகாரங்களை கூர்தீட்டி தக்கவைத்து கொள்ளவும்  மற்றொரு புறம் அத்தகைய மரபார்ந்த சாதிய அதிகாரங்களுக்கு எதிரான மனநிலையையும் உருவாகியுள்ளது. இவை இரண்டிற்கும் ஒரு உடன்பாடு அல்லது தீர்வு ஏற்படாத வரை இந்திய ஒரு தேசியமாக உருவாக முடியாது என்று முடிக்கிறார்.   


ஒவ்வொரு  பக்கமும் தெள்ள தெளிவாக(Crystal-Clear) எழுதப்பட்டுள்ளது, இதனோடு MSS. Pandian அவர்களது கட்டுரையையும் தாகூரின் “Nationalism” புத்தகத்தையும் ஒப்பிட்டு எழுதுவதாக கூறி இருந்தேன், அதை தனி பதிவாக எழுதுகிறேன். 


வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசியுங்கள், 2021 நான் வாசித்த முக்கியமான புத்தகங்கள் வரிசையில் இந்நூல் நிச்சயம் இடம்பெறும். 






Comments