THE STATE AND REVOLUTION - A CRITIQUE


 


“Liberty cannot be divorced from equality, equality cannot be divorced from liberty. Nor can liberty and equality be divorced from fraternity. Without equality, liberty would produce the supremacy of the few over the many. Equality without liberty would kill individual initiative. Without fraternity, liberty would produce the supremacy of the few over the many.” -  Dr. B R Ambedkar  


“Man is born free, but everywhere he is in chains” - Rousseau


நேற்றைக்கு தான் லெனின் எழுதிய”The State and Revolution”  புத்தகத்தை வாசித்து முடித்தேன், அரசியல் படிக்க தொடங்கிய ஆரம்பகாலத்தில் மார்க்சியம் சார்ந்த புத்தகங்களை வாசித்த அனுபவம் உண்டு குறிப்பாக “The Communist Manifesto” “Wage Labour and Capital” “The Black Shirts and Reds”. ஆரம்பகாலத்தில் இந்த தத்துவத்தின் மீது ஒரு பிடிப்பு இருந்தாலும், காலம் செல்ல செல்ல அது  நீர்த்து போனது. Bertrand Russellன்  “Political Ideals” “What i Believe” “Authority and Individual” போன்ற புத்தகங்கள் என் அரசியல் புரிதலுக்கான அடித்தளமாக இன்றும் இருந்து வருகிறது. தத்துவங்களையும் அந்த பார்வையில் தான் நான் அணுகுகிறேன். ஒரு தத்துவம் என்பது அன்பால் கட்டமைக்கப்பட வேண்டும் என்பார் Russell. 


அன்பால் உருவான தத்துவம் தான் மார்க்சியம் என்று பலர் கூறினாலும், அதன் முடிவுகளை(Ends) அடையவேண்டும் என்று அவர்கள் முன்னிறுத்தும் வழிமுறைகள்(Means) எல்லாம் வன்முறையும் ஆயுத போராட்டங்களும் தான். அதே முடிவுகளை(Ends) அடைய வேறு வழிமுறைகளை(Means) பரிந்துரைக்கும் சக மார்க்ஸியர்களையும் சந்தர்ப்பவாதிகள்(Oppurtunist) என்கிறார் லெனின். 


ஒரு கற்பனாவாத(Utopia) தத்துவத்திற்கு அறிவியல்(Scientific) அடிப்படையை ஏற்படுத்தியவர் Marx. நிலப்பிரபுத்துவதில் இருந்து புரட்சியின் மூலம்  ஜனநாயகம் உருவானது போல் கம்யூனிசமும் இயல்பாகவே நடக்கும் அது தான் இயங்கியல்(Dilectics) என்றார். பின்னர் வர்கம் அற்ற சமூகத்தில் அரசின் தேவையும் இருக்காது எனவே அரசு சில காலத்திற்கு பிறகு உதிர்ந்தது போகும் என்கிறார். 


Dictatorship of Proliteriat என்பது பிற அரசுகள் போல் இல்லை என்கிறார்கள், அதாவது அது  உழைக்கும் மக்களை ஒடுக்கும் அரசாக இருக்காது. ஆனால் சோவியத்திலும், சீனாவிலும், வட கொரியாவிலும், வியெட்னாமிலும், சோசியலிச அரசு என்று தங்களை கூறிக்கொண்ட அத்தனை அரசுகளும் அடக்குமுறை, மனித உரிமை மீறல்களை கடைப்பிடித்தே வந்துள்ளன.  (Refer “The Practice and Theory of Bolshevism” , “The Road to Serfdom”, “India’s China Challenge”)


ஜனநாயகமா சர்வாதிகாரமா என்றால் ஒரு சாதாரண மனிதன், சமத்துவத்தையும், சுதந்திரத்தையும் தனது கொள்கைகளாக கொண்டவன் ஜனநாயகத்தியே தேர்ந்தெடுப்பான். ஜனநாயகம் என்பது ஒரு வாழ்வியல். ஆனால் இந்த புத்தகத்தில் ஜனநாயகம், நாடாளுமன்றம், கூட்டாட்சி என எல்லாம் முதலாளித்துவ  நிறுவனங்கள் என்றும் குட்டி- முதலாளித்துவ சந்தர்ப்பவாதம் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளன. என்னதான் ஜனநாயகத்தின் மீது  விமர்சனங்கள் இருந்தாலும் அந்த அமைப்புக்குள் இருந்துகொண்டு மாற்றங்களை ஏற்படுத்த முடியும், Free Speechகான வாய்ப்பை அது வழங்கியே தீரும், இந்தியா போன்ற அசமத்துவங்கள்(Inequalties) நிறைந்த  நாட்டில் அத்தகைய ஜனநாயகமும் அரசியலமைப்பு சட்டமும் தான் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அரண். 


21 ஆம் நூற்றாண்டில், தனி மனித அபிலாஷைகளும், தாராளவாத சிந்தனைகளும் அதிகம்  உருவாகி கொண்டிருக்கும் காலகட்டத்தில் மனிதர்களை வெறும் வர்க்கமாக பார்ப்பதும் அதன் மூலம் புரட்சி ஏற்படும் பின்னர் சர்வாதிகாரம், அதற்கு பின் அந்த அரசு உதிர்ந்தது போகும் என்றால் அதை அறிவிலித்தனம் என்று தான் சொல்லமுடியும். 


“Man- every man is an end in himself” என்பார்Ayn rand , ஒரு மனிதனை சுயமரிதையோடு நடத்துவதற்கு காரணம் மனிதனுக்கு உள்ளார்ந்த மதிப்பு(Intrensic value) இருக்கிறது என்பதற்க்காக தான். மனிதன் என்பவன் வெறும் உழைப்புக்காகவும் கூட்டுவாழ்க்கைக்காகவும் மட்டும் பிறந்தவன் அல்ல.  


சமூக உடன்படிக்கையினால் உருவாவது தான் அரசு, அரசு இல்லாமல் ஒரு சமுதாயம் நிலையாக இருக்க முடியாது(State is a necessary Evil). மனித  சமூகம் பல பாகங்களை கொண்ட ஒரு நிறுவனம் வர்க்கங்களாக மட்டும் அவற்றை சுறுக்கிவிட முடியாது. 


மார்க்சிய பொருளாதாரத்திலும் பல சிக்கல்கள் இருக்கிறது, அவற்றை வேறொருநாள் விளக்கமாக எழுதுகிறேன். 


தங்களை அறிவுஜீவி என்று நிறுவிக்கொள்ள மார்க்சியம் பேசி தான் ஆக வேண்டும் என்று இல்லை, மார்க்சியம் பேசினால் தான் இந்த சமூகம் என்னை ஏற்றுக்கொள்ளும் என்பதற்காக எல்லாம் மார்க்சியம் பேச தேவை இல்லை. சார்பற்று  ஒரு தத்துவத்தை அணுகவேண்டும் ஒரு வாசகனுக்கு இதுவே அடிப்படை. (மேலும் ”Intellectuals and Socialism” என்ற Hayekன் கட்டுரையை வாய்ப்புள்ளவர்கள் வாசிக்கவும்)


வாய்ப்பிருக்கும் நண்பர்கள் இந்நூலை  அவசியம் வாசியுங்கள், எந்த புத்தகத்தையும் நான் கேலி கிண்டல் செய்வதற்காக வாசித்ததில்லை, படிப்பதை பகிரவேண்டும் என்பது என் வாசிப்பின் அடித்தளம், அதை நான் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன். 


Comments