“Blood Island: An Oral History of the Marichjhapi Massacre” - நூல் அறிமுகம்


 


Blood Island: An Oral History of the Marichjhapi Massacre என்று பெயர் வைக்கும் அளவுக்கு இந்த நிகழ்வு கொடூரமானதா என்றால், ஆமாம் கொடூரமானது. சிந்தாந்த பார்வைகளை கொஞ்சம் தள்ளிவைத்து அணுகினால் இதை நிகழ்த்தியது ஹிட்லரோ!! என்றே தோன்றும். இந்த அரச வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவ பகிர்வுகளின் தொகுப்பு தான் இந்நூல். நூலாசிரியர் ஒரு ஊடகர்.இந்த அரச வன்முறையால் பாதிக்கப்பட்டவரும் கூட.  இதற்கு முன் P.Sainath எழுதிய  “Everybody Loves a Good Drought”,  K.A. Manikumar எழுதிய   “Murder in Mudhukalathur”,  Urvashi Butalia எழுதிய “The Other Side of Silence” போன்றவை எல்லாம் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையில் அரசும்-வன்முறையும் எவ்வித எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களாக சொல்வேன்(நான் வாசித்த வரையில்). 


அந்த வகையில் இந்நூல் முக்கியமானது,, பாட்டாளி வர்க்கத்துக்காக  அரசியல் செய்கிறோம் என்று சொல்லி கொள்ளும் (கொல்லும்)பார்ப்பன  கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்ததும் எப்படி மனித தன்மை அற்றவர்களாக மாறி போகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இயற்கை வளத்தை காக்கிறோம் என்று மனிதர்களை வெளியேற்றி கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறார்கள். Citizen திரைப்படம் கண் முன் வந்து செல்கிறது. அதில் வரும் காட்சிகளோடு Marichjhapiயில்  நடந்த நிகழ்வுகளும் பொருந்தி போகின்றன. 


சரியாக  எமெர்ஜென்சி முடிந்து, மொராஜ் தேசாய் பிரதமராக இருக்கும் காலகட்டத்தில் இது நடக்கிறது,ஜோதி பாசு கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் எல்லாம் அவரின் அதிகார மமதையின் விளைவு என்கிறார்கள் இதனால் பாதிக்கப்பட்டவர்கள்.


இது உயர்சாதி கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுத்த அரச பயங்கரவாதம். ஊடகங்களின்  வாயை அடைத்து  இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று மக்களை நம்பவும் வைத்தார்கள், இந்த புத்தகம் வாய்வழி வரலாற்று நூலாக வெளிவருவதற்கு காரணம் இது தான், அதையும் மீறி சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன இதனால் அந்த செய்தி  நிறுவனங்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் இல்லாமல் போகும்பட்சத்தில் சர்வாதிகாரம் மக்களை எப்படி நடத்தும் என்பதற்கு இந்த நிகழ்வு சிறந்த சாட்சி. 


Marichjhapi படுகொலையை புரிந்துகொள்ள சில அடிப்படை வரலாறு தேவை படுகிறது, இந்தியா- பாகிஸ்தான்(1947) பிரிவினைக்கு பிறகு வங்கதேசத்தில்(அப்போதைய கிழக்கு பாகிஸ்தான்) இருந்த பெரும்பாலான ஒடுக்கப்பட்ட ஹிந்துக்கள் மேற்கு வங்கத்துக்கு இடம்பெயர்கிறார்கள், கிழக்கு பாகிஸ்தானில் இந்து-முஸ்லிம் கலவரம் அதிகரிக்க அதிகரிக்க ஒடுக்குப்பட்ட இந்துகளின் வெளியேற்றமும் அதிகரிக்க தொடங்கியது. வங்கதேச விடுதலைக்கு(1972) பிறகு இது இன்னும் வீரியமாக நடந்தேறியது, இவர்கள் அனைவரும் Dandakaranya(சத்தீஸ்கர், ஒதிஷா, தெலுங்கானா மாநில பகுதிகளாலானது) என்ற பகுதியில் இருக்கும் அகதிகள் முகாம்களில் தங்கவைக்க பட்டிருந்தார்கள்.  


மேற்கு வங்கத்தில் இடது முன்னணி(Left front) ஆட்சிக்கு வந்த பிறகு இந்த இடத்திலிருந்த அகதிகள் எல்லாம் Sundharban Regionஅருகில் இருக்கும் Maichjhapi என்கிற தீவுக்கு இடம்பெயர்கிறார்கள், அந்த தீவை இடப்பெயர்வுக்கு உகந்த இடமாக காட்டியதும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிகாரர்(Marxist) என்றே சொல்கிறார்கள். தேர்தலுக்கு முன்பு வங்காளிகள் வாக்குகளை அறுவடை செய்ய இவர்களுக்கு இந்த அகதிகளின் ஆதரவு தேவை பட்டிருக்கிறது. 


இது Reserved forest  என்று சொல்லப்பட்டாலும், அந்த Marichjhapi தீவில் ஒரு சில தென்னை மரங்களை தவிர பெரிதாக எதுவும் இல்லை என்றே அறியமுடிகிறது. மேலும் இடம்பெயர்ந்தவர்களும்  மரங்களை வெட்டவோ, சூழலை பாதிக்கும் செயல்களில் ஈடுபடவோ இல்லை. தண்ணீருக்கு கூட அருகில் இருக்கும் நிலப்பரப்புக்கு சென்று தான் சேகரிக்க வேண்டிய நிலை. பெரும்பாலான மக்கள் மீன் பிடி தொழில்களை செய்தும், இருக்கும் நிலத்தில் பயிர் செய்தும், பள்ளி, மருத்துவமனை என கட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டும் தன்னிறைவுடனே இருந்துள்ளார்கள்.  


பிறகு இவர்களை வெளியேற்ற என்ன காரணம்?, இந்த தீவுக்கு பண்டங்களை ஏற்றி செல்ல முடியாமல்  தடுத்து நிறுத்தி மக்களை பட்டினியில் போட்டு கொன்றதற்கு என்ன காரணம்?, குடிசைகளை கொளுத்தி, குடிக்கும் நீரில் விஷம் கலந்து, துப்பாக்கி சூடுகள் நடத்தி, மக்களை கொன்று குவித்ததற்கு என்ன காரணம்? என்று தேடி பார்த்தால் ஜோதி பாசு என்கிற மிருகத்தின் Egoவும், அதிகார மமதையும் தான் கிடைக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட அப்பட்டமான சாதி வெறி, அதையும் அரசே முன்னின்று நடத்திய கொடூரம் தான் இந்த வன்முறையின் உச்சக்கட்டம். 


இந்நூல் அந்த வன்முறை நிகழ்வினால் பாதிக்கப்பட்ட மனிதர்கனின் கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. வலிகளும், கண்ணீரும் பாகங்களை இழந்த உடல்களாலும் நிறைந்த கதைகள் இவை. பொருளாதார தடையினால்  பட்டினி கிடந்து ஆற்றில் தூக்கி எறியப்பட்ட குழந்தைகளின் அமைதி   குரல்களால் எழுதப்பட்ட வரிகள் இவை. துப்பாக்கி குண்டுகளால் கால்களையும், உயிரையும் இழந்து, வாழ இடத்தையும் இழந்து விரட்டி அடிக்கப்பட்ட அகதிகளின் கதைகள் இவை. நம்பிக்கை துரோகத்தின் கதைகள் இவைகள். சூழலுக்காக மனிதனை விரட்டி அடித்த பார்ப்பன கம்யூனிஸ்டுகளின் கதைகள் இவைகள். இத்தனையும் நடந்த பிறகு “Those things happen” என்று மனதில் துளி ஈரம் கூட இல்லாமல் சொன்ன ஒரு சர்வாதிகார அரசின் கதைகள் இவை. இந்த கதைகள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியவை, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டை விட, அஸாமில் சமீபத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூடுகளை விட இவை கொடூரமானவை. காட்சிப்படுத்தி பார்க்கவே பயமாக இருகிறது.



வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசியுங்கள். விரைவில் இந்நூல் 

Vilasini Ramani அவர்களின் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியாக போவதை அறிந்தேன். அவருக்கு என் நன்றியும் அன்பும். 


 





  


Comments