அ.தி.மு.க. - R. MUTHUKUMAR நூல் அறிமுகம்

 



திராவிட இயக்க வரலாறை வாசிக்கும்போது, அதிமுக பற்றிய பகுதிகள் மட்டும் ஒருவித எரிச்சலை தரும், காரணம் மாநில சுயாட்சி, சமூக நீதி, சுயமரியாதை, இடஒதுக்கீடு, சாதி ஒழிப்பு என்ற கதையாடல்கள் பேசப்பட்டுவந்த அரசியல் களத்தில் கேவலமான ஒரு எதிர்பரசியலை அது முன்னெடுத்தது. கொள்கை அரசியல் பேச முட்டுக்கட்டையாக பிம்ப அரசியல் மாறியது. சினிமா மோகத்தில் நிலையறியாமல் சுற்றி கொண்டிருந்த ஒரு ரசிக கூட்டம் கொள்கையற்ற கட்சியாக மாறும்போது அதன் செயல்பாடுகளும் கேலிக்கூத்தாக தான் இருக்கும் என்பதற்கு அஇஅதிமுக சிறந்த சாட்சி.

தலைமையில் தொடங்கி தொண்டர்கள் வரை ஒருவருக்கும் அவர்களின் கொள்கை என்னவென்று இதவரை தெரியுமா என்பது கேள்விக்குறி, டெல்லியின் கொள்கை தான் அவர்களின் கொள்கை அது சக்ஸஸ் மாடல் என்றால் அதையே பின்பற்றுவார்கள், எடுபடவில்லை என்றால் வெட்கம் துளியும் இன்றி கொள்கையை மாற்றி கொள்வார்கள். இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் வரலாறு நெடுக நமக்கு கிடைக்கிறது.(9000 ரூபாய் பொருளாதார இடஒதுக்கீடு தொடங்கி - நீட் தேர்வு வரை)
திரைப்படங்கள் மூலம் சொல்லப்படும் பொய்களை நம்பி நம்பி அந்த கட்சியின் செயல்பாடுகளும் அப்படியே(பொய்யாகவே) மாறிப்போனது, தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்படும் வாக்குறுதிகள் பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை யாருடன் கூட்டணி என்பது பற்றியும் அவர்கள் வருத்த படமாட்டார்கள் (அவர்களிடம் தான் கொள்கையே இல்லையே).

எம்ஜியார் வெளிநாட்டில் படுத்துக்கொண்டு “Hiiii”சொன்னால் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும் அரசியலை தான் அவர்கள் மேற்கொண்டார்கள். ஆட்டுமந்தை அரசியல் அது, சாதி கட்சிகளிடம் இருக்கும் மனப்பான்மை தான் அஇஅதிமுகவிடம் இருந்தது.
திமுகவில் நடந்த பிரிவுகள் எல்லாம் பெரும்பாலும் கொள்கை சார்ந்த பிரிவுகள் (எம்ஜியார் தவிர்த்து). அஇஅதிமுகவில் அப்படி ஒரு பிரிவும் நடக்கவில்லை, அதிகார போட்டியின் காரணமாக சில காலம் இரண்டு பிரிவுகளாக இருந்துள்ளது. இப்போது இருப்பதுபோல். ஆனால் அஇஅதிமுக என்பது ஒன்றிய அரசின் Proxy பார்ட்டி.
அஇஅதிமுக இல்லாத தமிழ்நாட்டின் அரசியலை யூகித்து பார்த்தல், திமுகவுக்கு இணையான ஒரு எதிர்க்கட்சி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். காங்கிரஸில் நடந்த பிளவு, எமர்ஜெண்சி, ஈழ அரசியல், துணை-தேசிய உணர்வு போன்றவை எல்லாம் தேசிய அரசியலை நீர்த்துப்போக செய்திருக்கும். கொள்கை அரசியல் இன்னும் வீரியமாக பேசப்பட்டிருக்கும் என்பதே என் அவதானிப்பு.
R Muthu Kumar அவர்களின் புத்தகங்களுக்கு நான் ரசிகன், காலவரிசைப்படி நிகழ்வுகளை தொகுப்பதில் கில்லாடி, வேகமாக வாசிக்கும் மொழிநடை, ஒரு திரில்லர் புத்தம் படிக்கும் உணர்வு அவரின் எழுத்துக்களில் கிடைக்கும்.
அஇஅதிமுக அரசியல் இலட்சணங்களை புரிந்துகொள்ள இந்நூல் உதவும். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்

Comments