"இஸ்லாம் ஒரு திராவிட மதம்" - பெரியார்


   


இந்திய முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களும், பாகுபாடுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில் தமிழ்நாட்டில் இத்தகைய போக்கு நிகழாமல் இருப்பதற்கு என்ன காரணம்? இங்கு நடந்த திராவிட இயக்க  அரசியல் நடவடிக்கைகள், மத மோதல்களை எப்படி மட்டுப்படுத்தியது? பெரியார், "ஆதிதிராவிடர்கள் இஸ்லாம் மதத்தை தழுவ வேண்டும்" என்றும், "இஸ்லாத்தில் சமூக சமத்துவம் இருக்கிறது" என்றும் எதற்காக சொன்னார்? தீண்டாமையில் இருந்து நிரந்தர தீர்வை அடைய அவர் எதற்காக இஸ்லாத்தை முன்னிறுத்தினர் என்பதை எல்லாம் இரண்டு தரவுகளை அடிப்படையாக வைத்து இந்த கட்டுரை விளக்க முயல்கிறது. சமீபத்தில் வெளியான "நான் இந்துவாக இறக்கப்  போவதில்லை"(காட்டாறு, தலித் முரசு, 2021) என்கிற பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரை நூலும், ஆகஸ்ட்  2018ல் நடைபெற்ற  “Dravidanism - a symposium on the legacy of the Non-Brahmin Movement in Tamil Nadu” என்கிற கருத்தரங்கில் S. Anwar வெளியிட்ட “Muslims and the Dravidian Movement” என்ற கட்டுரையையும் அடிப்படையாக வைத்தே இந்த கட்டுரை எழுதப்படுகிறது. 


பிரிட்டிஷ் இந்தியாவில், வடக்கு மாகாணங்களில் எல்லாம் மத ரீதியிலான அரசியல் அணிதிரட்சி நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில், தென் இந்தியாவில் பார்ப்பனர்  அல்லாதார் என்கிற அடையாளத்தின் கீழ் இஸ்லாமியர்களும் உள்ளடக்கப்பட்டார்கள். நீதி கட்சியால் கேட்கப்பட்ட  பார்பனரல்லாதாருக்கான இடப்பங்கீடு என்பது இங்கு பிற மதத்தவரையும் உள்ளடக்கியே கேட்கப்பட்டது. 


இதை தொடர்ந்து பெரியாரின் இஸ்லாமிய மத ஆதரவு என்பது முக்கியமான ஒன்றாக தெரிகிறது , அவர் இஸ்லாத்தை அப்பழுக்கற்ற மதம் என்றோ குறைபாடுகள் அற்ற மதம் என்றோ கூறவில்லை, அதிலுள்ள மூடப்பழங்களை கண்டிக்கிறார், பிற்போக்கு தனங்களை சுட்டிக்காட்டி தவிர்க்க சொல்கிறார். தீண்டாமையில் இருந்து விடுபட இஸ்லாத்தை பெரியார் பரிந்துரைக்கிறார். குறிப்பாக ஆதி திராவிடர் சகோதரர்கள் எல்லாம் இஸ்லாம் மதத்தை தழுவினால் இந்து மத இழிவுகளில் இருந்து தப்பிக்க முடியும் என்றும், சமூக சமத்துவத்தை அடையமுடியும்  என்றும் கூறுகிறார். 


பௌத்தமும், கிறிஸ்துவமும் சாதியத்தை செரித்துக்கொண்டு செயல்பட தொடங்கிய நேரத்தில் தான், இந்த இரண்டு மதங்களை தவிர்த்து, இஸ்லாத்தை தீண்டாமைக்கு எதிரான மதமாக முன்னிறுத்துகிறார் பெரியார். 1930களில் மதமாற்றம் என்கிற கருத்தை அண்ணல் அம்பேத்கர் வெளிப்படுத்திய சமயத்தில் அவரும் இஸ்லாத்தை கருத்தில் கொண்டது(Ambedkar Considered Islam too for conversion) இங்கு குறிப்பிடத்தக்கது. 


இஸ்லாம் பற்றி பெரியாரின் கூற்றுகள் எல்லாம் சுவாரஸ்யமாவை,



"சமத்துவமான மதங்களுக்கு மாறுவது தவறாகாது",


"மதமாற்றத்தை ஆதரிப்பது சுயமரிதைக்காரனின் கடமை",


"ஆதிதிராவிடர்கள் மனிதத்தன்மையை பெறவும், சுயமரியாதையை அடையவும், இந்துமத இழிவுகளில் இருந்து விடுபடவும் இஸ்லாம் ஒன்றே தீர்வு",


"இஸ்லாத்தை அரேபியர்மதம், துருக்கியர் மதம் என்று சொல்வதை போல் இதை திராவிடர் மதம்-திராவிட மதம் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்வதில் நமக்கு ஆட்சோபனை இல்லை"


என்றெல்லாம் பெரியார் பேசியுள்ளார். இவை பெரும்பாலும் ஆதிதிராவிடர் மாநாடுகளில் பேசப்பட்ட கருத்துக்கள்.


 இஸ்லாத்தை முன்னிறுத்தியதற்கு காரணமாக பெரியார் கூறுவது " மக்கள் ஜாதி பேதம், பிறவி உயர்வு-தாழ்வு, பல கடவுள் உருவ வழிபாடு ஆகியவற்றில் இருந்து விலக வேண்டும்" என்பதற்காக தான். சமூக சமத்துவத்தை அடிப்படையாக வைத்தும் சுயமரியாதையை கருத்தில் கொண்டுமே பெரியாரின் இந்த கருத்து அமைந்தது என்பது தெளிவு. 


“திராவிட நாடு என்று ஒன்று அமைந்தால் அது  இஸ்லாமியர்களை ஒடுக்கது, காரணாம் திராவிடர் கழகம் இஸ்லாமியர்களை திராவிடர்களாகவே பார்க்கிறது” என்றார் பெரியார். மேலும் காந்தி படுகொலைக்கு பிறகு திருவண்ணாமலை, ஈரோடு, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு திராவிடர் கழக தோழர்கள் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்கள். பிரிவினைக்கு பிறகு  இந்தியா முழுக்க முஸ்லீம் லீக் கைவிடப்பட்ட சமயத்தில் கூட மெட்ராஸ் மாகாணத்தில் அது எவ்வித சிரமமும் இல்லாமல் IUMLஆக தொடர்ந்தமைக்கு திராவிட இயக்கம் இஸ்லாமியர்களை தங்களில் ஒருவராக கருதியதே காரணம். 


திராவிட இயக்கம்(திமுக) தேர்தல் அரசியலுக்கு நுழைந்த பிறகு பெரிய அளவில் இஸ்லாமியர்களின் ஆதரவை பெற்று வந்துள்ளது. 1947 - 1962 வரை காங்கிரஸ் அரசாங்கம் ஒரு இஸ்லாமிய அமைச்சர்களை கூட  தேர்ந்தெடுத்தது இல்லை, 1962 இல் தான் காமராஜர்(His 3rd term as CM) ஒரு இஸ்லாமியரை அமைச்சராக நியமிக்கிறார். இதே சமயத்தில் திமுக இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கை(IUML) சேர்ந்த ஒரு இஸ்லாமியரை மேலவைக்கு  தேர்ந்தெடுத்து அனுப்புகிறது. 1967 ஆட்சி பொறுப்பேற்ற பின் திமுகவில் திரு . எஸ். ஜே.சாதிக்பாட்சாவுக்கு வருவாய் துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


1968இல் பள்ளிப்பேட்டை(Near Madras) குழப்பம் நடைபெற்ற சமயத்தில் ஒரு முதலமைச்சராக அண்ணா அதை கையாண்ட விதம் , திராவிட இயக்கத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும்  இடையிலான பிணைப்பை பிரதிபலித்தது. கலைஞர் காலத்தில் “மீலாதுன்  நபி” விழாவை  அரசு விழாவாக கடைப்பிடித்தது, இஸ்லாமியர்களுக்கு 3.5 %(BCM) இடஒதுக்கீடு, காங்கிரஸ் அரசால் மூடப்பட்ட இஸ்லாமிய கல்லூரிக்கு “காயிதே மில்லத்” பெயரை சூட்டி திறந்து வைத்ததது என தொடரந்து. இஸ்லாமியர்களை தங்களுள் ஒருவராகவே திராவிட இயக்கம் அணுகிவருகிறது. தற்போது கூட “நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்கு” 45 கிலோ சந்தன கட்டைகளை அரசு இலவசமாக வழங்கியது. 


வட இந்தியாவில் நடைபெற்ற மதரீதியிலான  துருவப்படுத்தல் முயற்சியை பாஜக இங்கு செயல்படுத்த முயன்றாலும் அது சாத்தியப்படாது. இங்குள்ள மக்களிடம் “Dravidian Common sense/ consciousness உயிர்ப்புடன் இருக்கும் வரை, மதவாதம் இங்கு வெற்றி பெறவே முடியாது. பெரியார் சொன்னது போல் "இஸ்லாம் என்றால் திராவிட மார்க்கம்".





Comments