In those days there was no coffee / Book Review/
வரலாறை இவ்வளவு சுவரசியமாகவும் அதே சமயம் விரிவான தரவுகளுடனும் எழுத முடியுமா? என்று இந்நூலை வாசித்த பின் தான் உணரத் தொடங்கினேன். “In those days there was no coffee(2006)” பல பிரமிக்கவைக்கும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.
தமிழ்நாட்டில் காபி வந்த கதை, புகையிலை நுழைந்த அதை, சென்னை என்ற நகரம் உருவாக தொடங்கிய சமயத்தில் மக்களின் பொது புத்தியில் எப்படி பதிந்திருந்தது, விடுதலைக்கு முன் செய்தித்தாள்களில் கேலிச்சித்திரம்(Cartoons) பரிணமித்த கதை, புதுமைப்பித்தனின் இலக்கியமும் அது அணுகப்பட்ட விதமும் என முதல் பகுதி அமைந்துள்ளது. இதிலிருக்கும் ஒருவொரு கட்டுரை பற்றியும் ஒரு பதிவை எழுதலாம் அவ்வளவு ஆழமான கருத்துக்களை வாசகனுக்கு கடத்தும் தகவல் பெட்டகம் இந்நூல் .
இரண்டாவது பகுதி முழுக்க முழுக்க காலனிய காலத்தில் தமிழ் இலக்கியத்தையும் அதை சுற்றி நடந்த அரசியலையும் மையமாக வைத்து நான்கு அத்தியாயங்களில் விளக்க முற்படுகிறதுக்கு. சங்ககால நூல்கள் 19 ஆம் நூற்றாண்டில் எப்படி அணுகப்பட்டது என்பதில் தொடங்கி சமஸ்கிருத மொழி நீக்கம், மொழி சீர்திருத்தத்தில் தனி தமிழ் இயக்கத்தின் பங்கு , திராவிட இயக்கத்தின் நவீனம்- மொழியியலில் செலுத்திய தாக்கம் எத்தகையது, திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமா?, சுயசரிதை நூல்கள் குறிந்தளவிலேயே கிடைப்பதற்கு உளவியல் மற்றும் சமூக காரணிகள் எவை என்பது வரை இந்த பகுதி நீள்கிறது.
இதில் இடன்பெற்றுள்ள அனைத்து கட்டுரைகளும் தரவுகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு நோக்கில் எழுதப்பட்டவை. ஆனால் இலக்கியத்தன்மையும் கதைசொல்லும் விதமும் ஒரு சிறந்த புனைவை போலவே மிக அழகாக எழுதப்பட்டிருந்தது.
காபி பற்றிய கட்டுரையை மிகவும் சிலாகித்து இரண்டு முறை வாசித்தேன், புதுமைப்பித்தன் பற்றிய கட்டுரையை படித்த பின் தினம் ஒரு சிறுகதை என புதுமைப்பித்தனை வாசித்து கொண்டிருகிறேன். பிற கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் இதற்கு முன்பிருந்த புரிதலை மேம்படுத்திக்கொள்ளும் விதத்திலேயே இருந்தது. எத்தனை காலம் கடந்து படித்தாலும் இந்த கட்டுரைகள் உயிர்ப்புடன் இருக்கும்.
வரலாறு என்பது இப்படி தான் எழுதப்பட்டிருக்கவேண்டும், அன்றாடம் வாழ்வில் எதிர்கொள்ளும் விசயங்களை தரவுக்குகளின் துணையுடன் அணுகுவது வாசிப்பு அனுபவத்தை மெருகேற்றுகிறது.
ஒரு சமூகமாக நாம் முன்னேற அறிவை ஜனநாயகப்படுத்த வேண்டும், மக்களிடம் ஒரு கருத்து பரவலாக பேசப் படும்போது மாற்றங்கள் சாதாரணமாக நிகழும். இத்தகைய புத்தகங்களை வெங்குஜன மக்கள் வாசிக்கும் விதத்தில் எழுதுவதே, ஜனநாயகப்படுத்தலின் ஒரு பகுதியாக நான் பார்க்கிறேன்.
இந்நூலை வாசித்துக்கொண்டிருந்த சமயத்திலேயே இவரது பிற புத்தகங்களை சேமிக்க தொடங்கிவீட்டேன். அனைத்து புத்தகங்களுக்கும் அறிமுகம் எழுதுகிறேன். "அந்த காலத்தில் காபி இல்லை"(காலச்சுவடு வெளியீடு என்ற தலைப்பில் தமிழிலும் கிடைக்கிறது, வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.
நன்றி AR venkatachalapathy
Comments
Post a Comment