Periyar's REVOLT some Observations

Periyar's Revolt சில அவதானிப்புகள்



பெரியார் தொடங்கிய முதல் ஆங்கில வாரப்பத்திரிகை “Revolt”. அதுவும் அன்றைக்கு சென்னை மாகாணத்தில் படிப்பறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் 7 %. பார்ப்பனர்களும் காங்கிரஸ் இயக்கமும் வெளியிட்ட கருத்துக்கு ஆங்கில எதிர்குரலாக இந்த பத்திரிகை இருந்துள்ளது. 1928 -1930 வரை கிட்டத்தட்ட 55 இதழ்கள் வெளியானதாக தெரிகிறது. இதை எல்லாம் தொகுத்து S.V Rajadurai, V.Geetha ஆகியோர் முயற்சியில் புத்தகமாக வெளியாகியுள்ளது. அந்த தொகுப்பை Skim செய்தபோது சில விசயங்களை அவதானிக்க முடிகிறது.
இந்த இதழுக்கு பங்களித்தவர்கள் எல்லாம் அந்த காலகட்டத்தில் இயங்கிய பார்ப்பனரல்லாத சுயமரியாதை இயக்க காரர்களாகவே இருந்துள்ளார்கள். சில பார்ப்பனர்களும் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. S. Ramanathan, S. Guruswami(Kuthoosi), K. M. Balasubramaniam, P. Chidambaram Pillay, R. Viswanathan ஆகியோர் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். வைக்கம் போராட்டத்தின் தொடக்கத்திற்கு வித்திட்ட கேரளத்து காங்கிரஸ் இயக்கத்தவரான George Joseph சில கட்டுரைகளை எழுதியுள்ளார். Miss Gnanam என்ற பெண் ஒருவரும் மதத்துக்கு எதிரான பெண் விடுதலைக்கு ஆதரவான கருத்துக்களை Revolt இதழுக்கு எழுதியுள்ளார்.
Bertrand Russell & Scott Nearing எழுதிய “ Bolshevism and the West” புத்தகத்தை பற்றிய Book Review ஒன்றும் வெளியாகி உள்ளது. Ambedkar குறித்தும் அவரின் செயல்பாடுகள் குறித்தும் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது, ஆண்டு 1929. இந்தியாவில் நடந்த பிற சாதி ஒழிப்பு மற்றும் பார்பனரல்லாதனர் இயக்க நடவடிக்கைகளை குறித்த செய்திகளும் வெளியாகி இருக்கிறது.
அந்த சமயத்தில் பற்றியெரிந்த பிரச்சனைகளான Devadasi abolition, Child Marriage Restraint Bill, 1928 Nehru report, Simon Commission குறித்தெல்லாம் விரிவாக பேசப்பட்டுள்ளது. மேலைநாட்டு அறிஞர்களை இங்குள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற ஆவல் சுயமரியாதை இயக்கத்தவருக்கு இருந்துள்ளது. பகுத்தறிவு, சுயமரியாதை, நாத்திகம், பெண்விடுதலை போன்ற நவீன சிந்தனைகளை பற்றிய ஆழமான புரிதல்களை ஏற்படுத்தவல்ல கட்டுரைகள் இதழில் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்துள்ளது.
பெரியார் ஆசிரியராக இருந்த இந்த பத்திரிக்கை முதலில் ஈரோட்டில் இருந்தும் பின்னர் சென்னையில் சிறிதுகாலமும் மீண்டும் ஈரோட்டில் இருந்தும் வெளியாகியுள்ளது.
இரண்டாண்டுகள் மட்டும் வெளியானRevolt இதழ் அதன் பிறகு வெளியாகாமல் போனதற்கான காரணங்களை அறியமுடியவில்லை. 1930 பெருமந்தம் ஏற்படுத்திய தாக்கமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கக்கூடுமா என்பதையும் சரியாக அனுமானிக்க முடியவில்லை.
இதை எல்லாம் இன்றிருந்து 95 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் தொடங்கியுள்ளார், தமிழ்நாட்டின் Renaissance, Enlightenment Movement எல்லாம் பெரியார் மூலமே தொடங்க படுகிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.

Comments