காலை உணவுத் திட்டம்
“ஏழைக் குழந்தைகளின் வயிற்றுக்கு நிறைவும் செவிக்கு அறிவும் ஊட்டும் கனவுத்திட்டம், காலை உணவுத் திட்டம்” - தமிழ்நாட்டு முதல்வர் திரு. மு.க ஸ்டாலின்.
மதிய உணவு திட்டம் போல் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" என்ற பெயரில் 1-5 வகுப்பு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான நிதியை(₹33 கோடி) தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாடு தொடர்ந்து மேற்கொண்டுவரும் Human Capital Investmentஇல் இது மற்றுமொரு முக்கிய நகர்வாகும்.
உணவு என்பதும் இங்கு சாதி சார்ந்த அதிகார மேலாண்மைக்கு ஆட்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது. சேரன்மாதேவி குருகுலத்தில் சமபந்தி முறை கடைபிடிக்கப்படாமல் இருந்ததாக கூறி போராட்டம் நடந்தது, பிராமணாள் கஃபே என்றிருந்த பெயரை அழிக்க ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி இருந்தது. பணம் இருந்தும் உணவில்லாத நிலை தான். இதிலிருந்து மீள பல்வேறு சுதந்திர-சமத்துவ போராட்டங்களை நம் முன்னோர்கள் முன்னெடுத்தார்கள் . இதன் பலன்களை நாம் இன்றைக்கு அனுபவித்து வருகிறோம்.
சமூக மற்றும் பொருளாதார ஜனநாயகத்தை வென்றெடுக்க உணவை அனைவருக்குமான ஒன்றாக பரவலாக்குவது அவசியமானது. கல்வி, சுகாதாரம், தகவல் போன்றவற்றை மக்கள் மய படுத்துவதை விட உணவை ஜனநாயக படுத்துவது சிக்கல் நிறைந்த ஒன்று. சமுகத்தில் பட்டினியை ஒழிப்பது அரசின் கடமையாக மட்டுமல்லாமல் சமூகத்தின் கடமையாகவும் இருக்கிறது. ஒருவருக்கொருவர் மாறுபடும் அம்சமாக இங்கு பசியே இருக்கிறது. .
திராவிட இயக்கத்தின் சமூகநீதியை நோக்கிய நெடும் பயணத்தில் உணவும் முக்கியமான பாத்திரமாகும். Mid- day meal scheme, Tamil Nadu Integrated Nutrition Project, PDS, Free Breakfast Scheme இவற்றை போல் உணவுக்காக ஏற்படுத்தப்பட்ட எண்ணற்ற திட்டங்களை பட்டியலிடலாம். மதியஉணவு திட்டம், TINP ஆகியவை நடைமுறைக்கு வருவதற்கு பின் இருந்த வரலாறை S.Narayanan எழுதிய "The Dravidian Years" புத்தகத்தில் விரிவாக பதிவு செய்துள்ளார். அனைவரும் படிக்கவேண்டிய வரலாறு அது. இதனால் நாம் அடைந்த முன்னேற்றத்தை "The Dravidian Model" புத்தகம் பேசுகிறது.
கம்யூனிஸ்டுகள் ஆண்ட கேரளாவில் 1984ல்லும், மேற்கு வங்கத்தில் 2003ல்லும் தான் மதிய உணவு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
ஒரு வகையில் சத்துணவு திட்டத்தை வெகுஜன அரசியல் நடவடிக்கை என்று பார்த்தாலும், அதனால் ஏற்பட்ட சமூக மாற்றம் என்பது அதுவரை இந்தியாவில் வேறு எங்கும் நடந்திராத மாற்றமாகும். குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதால் ஏற்பட்ட நன்மைகளை இப்போது தான் பல ஆய்வறிஞர்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள்.
1960களில் United States Agency for International Development (USAID) அமைப்பு தமிழ்நாட்டின் ஊட்டச்சத்து நிலை பற்றி ஒரு ஆய்வு செய்கிறது. அதில் தமிழ்நாட்டின் calorie supply per capita பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது மிக குறைவாக இருப்பது தெரிய வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அப்படி இருந்த தமிழ்நாடு இன்றைக்கு அடைத்திருக்கும் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இது போன்ற வளர்ச்சி திட்டங்களே ஆகும். மேலும் 1980கள் தொடங்கி இது போன்ற திட்டங்களுக்கான Infrastructure, supply chain, Labour force ஆகியற்றிலும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை நாம் எட்டியுள்ளதால் இது போன்ற திட்டங்களை செயலாக்குவது தமிழ்நாட்டில் எளிமையான ஒன்றாகும். சத்துணவு திட்டம் அறிமுகப்படுத்த காலத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் உணவு சமைத்த நிகழ்வு எல்லாம் நடந்ததாம்.
திராவிட இயக்க அரசியலில் மாநில சுயாட்சியை போல், மொழி உரிமையை போல், இடஒதுக்கீட்டு உரிமையை போல், இது போன்ற உணவு திட்டங்களும் முக்கியமானவை. பாராட்டத் தக்கவை.
M. K. Stalin
Comments
Post a Comment