SOUTH INDIAN LIBERAL FEDERATION - THE CONSTITUTION


  


1931இல்  "THE JUSTICE MOVEMENT -1917" என்ற பெயரில் வரதராஜலு நாயுடு புத்தகம் ஒன்றை தொகுத்து இருக்கிறார், நீதி கட்சி வெளியிட்ட non- brahmin manifesto  தொடங்கி பல அறிய தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக TM நாயர், தியாகராயர் ஆகியோரின் உரைகளும் Justice  பத்திரிகையில் அவர்கள் எழுதிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளது. வாய்ப்பிருப்போர் படத்தில் உள்ள Preamble பகுதியை மட்டும் வாசித்து பாருங்கள். 


நூலின் பின்னிணைப்பாக “SOUTH INDIAN LIBERAL FEDERATION - THE CONSTITUTION” என்ற ஒன்று இருந்தது. அது தான் இந்நூலின்  மிக முக்கியமான பகுதி.


 21 வயதுக்கு மேல் உள்ள  பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் இந்த சங்கத்தின் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டு அடுத்த வரியில். பார்ப்பனர் அல்லாதார் என்ற சொல் இஸ்லாமியர்களையும், இந்திய கிறிஸ்துவர்களையும், இந்திய குடிநபராக பதிவு செய்துகொண்ட ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோரையும் உள்ளடக்கிய ஒன்றாகும் என்று அந்த பகுதி சொல்கிறது. 





மேலும் “Social progress committee”  என்ற 8 உறுப்பினர்களை கொண்ட ஒரு கமிட்டி  சங்கத்தின் அங்கமாக இருந்து பார்ப்பனர் அல்லாதார் இடையே ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும்(unity and solidarity) ஊக்குவிக்கும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. 


ஒரு கட்சியின் தெளிவான செயல்திட்டங்களை இந்த Constitution வரையறை செய்துள்ளது. சுவாரசியமான ஆவணம் தான். Tamil digital library இல் மின்னூலாக படிக்க கிடைக்கிறது. 


Comments