The Eye of the Serpent: An Introduction to Tamil Cinema


  


1895இல் பாரிஸில் அறிமுகமான சினிமா அடுத்த இரண்டாண்டுகளில் மெட்ராஸை வந்தடைந்திருந்தது. தற்போது நாம் நுகரும் சினிமா காலம் தோரும் எப்படி மாறி மேம்பாட்டு வந்துள்ளது என்பதை படிக்கவே பூரிப்பாக இருக்கிறது. 


சினிமா மற்றும் நாடக துறை தோன்றிய சமயத்திலேயே திராவிட இயக்கம் அந்த கலைத்துறைகளை தனது அரசியலுக்கு மூலதனமாக்கி கொண்டது என்று தான் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால்  தேசிய விடுதலை பற்றிய விழிப்புணர்வுக்காக பெரிய அளவில் சினிமாவை காங்கிரஸ் இயக்கமும் பயன்படுத்தியுள்ளது. அதில் முக்கியத்துவம் வாய்ந்தவராக சத்தியமூர்த்தியை குறிப்பிடலாம். ஆம் காமராஜரை ஆதரித்த அதே சத்யமூர்த்தி தான். South Indian Film Chamber of Commerceஇன் முதல் தலைவராகவும் இவர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


1943இல் சத்யமூர்த்தி மறைந்த காரணத்தால் சினிமா என்ற துறை காங்கிரஸ் கட்சியினரால் பெரிதும் கவனிக்கப்படாத துறையாக போனது. 

அவரின் சீடரான காமராஜர் சினிமாக்காரர்களை "கூத்தாடிகள்" என்று சொல்லும் அளவுக்கு பிற்காலத்தில் சினிமா எதிர்மறையாக அணுகப்பட்டது. 

வெகுமக்களை அரசியல்படுத்த சினிமா எத்தகைய கருவியாக பயன்பட்டுள்ளது என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.  


தமிழ்நாட்டு அரசியலும் சினிமாவும் நெருக்கமாக இருப்பதற்கு வரலாற்று காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது. அது நூற்றாண்டு வளமையை கொண்ட வரலாறாக இருக்கிறது.


ஊமை படங்களும் அதை தொடர்ந்து வெளியான தொடக்ககால ஒலி படங்களும் இன்றைக்கு நம்மிடம் இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.


இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்களிடம் போருக்கு ஆதரவான மனநிலையை ஏற்படுத்தும் விதமான  திரைப்படங்களை தயாரிக்கவும் பிரிட்டிஷ் அரசாங்கம் நிதிஉதவி வழங்கியுள்ளது.  அதே பிரிட்டிஷ் அரசாங்கம் விடுதலை எழுச்சியை பிரகடனம் செய்யும் திரைப்படங்களை தடைசெய்தும் உள்ளது. 


ஊமை படங்கள், அதை தொடர்ந்து வெளியான ஒலி கோர்க்கப்பட்ட சினிமா, பாடல்கள், வசனம், இந்த நிலத்தின் அரசியலோடு அது பொருந்தி வந்த விதம் இவை எல்லாம் இந்த புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஊமை படங்கள் தொடங்கி ஒலி பொருத்தப்பட்ட சினிமா வரை 40க்கும் மேற்பட்ட ஆரம்பகால திரைப்பட குறிப்புக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள், வசனகர்தாக்கள் என பல ஆளுமைகளின் அறிய குறிப்புகள் இந்நூலில் அடங்கும். ஒரு சிறந்த ஆய்வு நூல். தமிழ் சினிமா பற்றி அறிய விருப்பமுள்ளவர்களுக்கு மிகச்சிறந்த கையேடு.  


ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் படிக்க கிடைக்கிறது.  வாய்ப்புள்ளவர்கள் வாசிக்கவும். 






Comments