RSS: DEPTH & BREADTH - Devanuru Mahadeva
10 நாட்களுக்கு முன் The NewsMinute இணையத்தில் Devanuru Mahadevaவின் கன்னட நூலான RSS: Aala Mattu Agala (RSS: DEPTH & BREADTH) பற்றியும் அதை சுற்றி நடக்கும் சர்ச்சை பற்றியும் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. சில நாட்களுக்கு முன் அருஞ்சொல் இணையத்தில் யோகேந்திர யாதவ், தேவனூரா மகாதேவா பற்றி எழுதிய கட்டுரை ஒன்றை வா. ரங்காச்சாரி மொழியாக்கம் செய்திருந்தார்.
இந்த நூலின் ஆங்கில வடிவத்தை Jeyannathann அண்ணன் அனுப்பி இருந்தார். கன்னடத்தில் 68 பக்கங்களை கொண்ட நூல், ஆங்கில மொழியாக்கத்திற்க்கு பின்னர் 49 பக்கமாக சுருங்கி இருந்தது.
ஆனால் நூல் கூறும் செய்திகள் யாவும், தேள் கடுப்பு போல் மிகவும் காட்டாமான வகையில் அமைந்திருக்கிறது. இவ்வளவு குறைந்த பக்கங்களில் நிறைவான கருத்துக்களை ஆழமும் அகலமும் கொண்ட நடையில் எழுதுவதற்கு முதிர்ச்சியும் பயிற்சியும் வேண்டும். அதை சீரான வகையில் Devanuru Mahadeva எழுதியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆங்கிலத்தை விட மூல மொழியில் இந்நூல் இன்னும் வீரியம் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்று உறுதியாக செல்லலாம். இன்றைய சூழலில் ஒரு நூல் 1 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகி இருக்கிறதென்றால் அதன் சாரத்தை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.
நூலில் அறிமுக உரையுடன் சேர்த்து மொத்தம் 6 இயல்கள் தான்.
முதல் இயல் RSSன் முக்கிய முகங்களான Hedgewar, Golwalkar ஆகியோர் இந்திய அரசியல் அமைப்பையும்,கூட்டாட்சி தத்துவத்தையும், மதச்சார்பின்மையையும் எவ்வகையில் சிந்தித்து கொண்டிருந்தார்கள் என்பதை அவர்கள் எழுதிய புத்தகங்களில் இருக்கும் தரவுச் சான்றோடு விளக்குகிறார். ஹிட்லரையும் நாஜிக்களையும் போற்றிப் புகழ்ந்து Golwalkar எழுதியிருக்கு வரலாறு, ஹிந்துத்துவ சிந்தனை என்பன பற்றி எல்லாம் தெள்ள தெளிவாக இந்த இயலில் விளக்குகிறார தேவனூரா மகாதேவன்.
Golwalkar எழுதிய Bunch of thoughts நூல், 1997ல் RSSன் அதிகாரபூர்வ வெளியீடாக வந்த "Vaibav ke Path par" போன்ற புத்தகங்களில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வினை தூக்கி பிடிக்கும் chaturvarna கருத்துக்களை சுட்டி கட்டுகிறார். இந்த புத்தகங்கள் வரலாற்றில் நடக்காத திட்டமிட்ட பொய்யை மீண்டும் மீண்டும் எப்படி பரப்புரை செய்து உண்மை வரலாறாக புனைய முயல்கிறார்கள் என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறார். இன்றைக்கு NCERT இந்த புனைவை எந்த எதிர்ப்பும் இல்லமால் பள்ளிகளில் படங்களாக நடைமுறை படுத்துகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் அவர்களுக்கும் அவர்களின் தத்துவங்களுக்கும் எதிராக இருக்கும் கருத்துக்களை பாட புத்தகங்களில் இருந்து நீக்கும் போக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் தொடங்கி இந்தியா முழுக்க அமைதியாக நடந்தேறி வருகிறது.
RSSன் கருத்துக்களை நிறுவ 1996லேயே 40க்கும் மேற்பட்ட ஹிந்துத்துவ அமைப்புகள் இருந்ததை குறிப்பிட்டு அவர்களுக்குள் நிலவும் கூட்டு செயல்பாட்டு தன்மையை இன்றைக்கு நாம் இந்திய அளவில் சந்தி்த்துக் கொண்டிருக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கையின் ஊற்றுக்கண்ணாக இருப்பதை சுட்டி காட்டுகிறார்.
இந்தியாவில் உருவாகி பிற பகுதிகளுக்கு பரவிய பௌத்தம், ஜைனம், போன்ற வர்னாஸ்ரம எதிர்ப்பு மதங்களை இந்து மதத்தின் அங்கமாக ஆக்குவதன் மூலம் அந்த மதங்களை நீர்த்து போகச்செய்வதும். ஜாதிய பாகுபாடுகளை எதிர்த்து அனைவரையும் சமமாக நடத்தும் இஸ்லாம், கிருத்துவம் போன்ற மதங்களை இந்துக்களுக்கு எதிரான ஒன்றாக நிறுத்துவது என்பது வர்ணபேதத்தை நிறுவ ஆர்எஸ்எஸ் காட்டும் முனைப்பின் காரணமாகத்தான் எங்கிறார்.
ஹிட்லரை ஆரிய இனத்தை சேர்ந்தவன் என்பதற்காக ஏற்றுக்கொள்ள சிறிதும் தயக்கம் காட்டாதவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர். சர்வேதச அளவில் சாதியத்தை பரப்புவது ஆர்எஸ்எஸ் கொண்டிருந்த லட்சியங்களில் ஒன்றாக இருக்கிறது.
தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக அவர்கள் மேற்கோள்ளும் மதமாற்ற நடவடிக்கைக்கு ஒரு உள்ளர்த்தம் கற்பித்து அதற்கு எதிராக சட்டம் இயற்றுவதும், ஹிஜாப்புக்கு எதிராக மாணவர்கள் தூண்டி விடுவதும், EWS என்ற சமூக அநீதி திருட்டை நியாய படுத்துவதும், அனைத்து அதிகாரங்களையும் மாநிலங்களிடம் இருந்து பறிக்கும் போக்கையும் கண்டிக்க வேண்டிய கடமை இந்தியாவின் பன்மை துவத்தையும் அமைதியையும் விரும்புபவர்கள் அனைவரது கடமையாக குறிப்பிடுகிறார்.
இறுதி இயல் இனி நாம் மேற்கோள்ள வேண்டிய செயல்பாடுகளை சுட்டி காட்டுகிறது. பன்மைத்துவ தலைமைகளை, சித்தாந்தங்களை ஒன்று திரட்டுவது அவர்களை ஒரு அணியமாக்கி இந்தியாவின் அரசியல் அமைப்பு மற்றும் கூட்டாட்சியை பாதுகாப்பது அவசியம் என்கிறார் . சாமானிய மக்களின் பங்கு இதில் முக்கியம் என்றும் முதன்மையானது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டில் இது போன்ற புத்தகங்கள் இதற்கு முன் வெளியாகி இருந்தாலும், இவரின் அணுகுமுறை யதார்த்தத்தை ஒட்டிய ஒன்றாக இருக்கிறது. அவரது கள செயல்பாடுகள் இந்நூலை உருவாக்குவதற்கு முக்கிய காரணியாக இருந்திருக்கும் என்பதை அவதானிக்க முடிகிறது.
இந்த நூலுக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு, ஒரு வகையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த கவனத்திற்கான அத்தனை தகுதிகளையும் கொண்ட நூல் என்பதை உறுதியாக சொல்லலாம். இந்த நிகழ்வு ஏனோ பெருமாள் முருகனின் மாதொருபாகன் நூல் சர்ச்சையை நினைவூட்டுகிறது.
விரைவில் தமிழிலும் பிற திராவிட மொழிகளிலும் இந்நூலை எதிர்பார்க்கலாம். வாய்ப்பிருப்போர் அவசியம் வாசிக்கவும்.
Comments
Post a Comment