தமிழ் நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு(Tamil Nadu Governing Council on Climate Change)

 Research for action என்று jean Dreze ஒரு conceptஐ சொல்வார், அதாவது ஒரு ஆராய்ச்சி அல்லது ஆய்வு என்பது செயல்பாட்டுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். மேலும் அத்தகைய ஆய்வு யதார்த்தத்தில் சாத்தியப்பாடு கொண்ட ஒன்றாக இருக்கவேண்டும். திட்டமிடலும் action based என்ற அளவில் தான் இருக்க வேண்டும்.

இப்படி அல்லாமல், ஒரு 'Utopian' லட்சியத்தை நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வோ, தீட்டப்படும் திட்டமோ மக்களுக்கு எந்த வகையிலும் சென்று சேராது. அல்லது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
“தமிழ் நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில்(Tamil Nadu Governing Council on Climate Change)” குழுவில் பூவுலகின் நண்பர்கள் குழுவை சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றிருக்கிறார் என்ற செய்தியை அறிந்தேன். அவருக்கு வாழ்த்துகள்.
ஆனால் அவர்கள் சொல்லும் ஆலோசனையை எல்லாம், தமிழக அரசு கேட்டு அதை நடைமுறைப்படுத்தினால் (படுத்தாது என்பது என் நம்பிக்கை!) தமிழ்நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு()Aspirations of Tamil Society) எதிரான ஒன்றாக தான் அமையும்.
ஒரு புறம் ஒரு டிரில்லியன் டாலர் கனவு என்ற இலட்சியத்தை கொண்டு, மறுபுறம் 500 கோடி ரூபாயை அடையமுடியாத லட்சியத்திற்காக செலவழிப்பது எதை தான் காட்டுகிறது?
Global southன் ஒரு பகுதியாகவும், மூன்றாம் உலக நாட்டின் ஒரு அங்கமாகவும், வயது முதிர்ந்த மக்கள்தொகை பெருகிவரும் மாநிலமாகவும், per capita emission குறைவாகவும் இருக்கும் தமிழ்நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டால், 500 கோடி அதிகம். (மக்களின் வரிப்பணம் என்பதால் தான் இந்த அக்கறை!)
ஆலோசனை சொல்லட்டும், அது திட்டமாக மாறாத வரை தமிழ்நாட்டுக்கு நல்லது. இல்லை என்றால் நாளைக்கே "Green முன்னேற்ற கழகம்" என்ற பெயரில் இவர்கள் ஒரு கட்சி தொடங்கி, ஒரு கதையாடலை தயாரித்து, அதை விற்பனை செய்து முதுகில் குத்தவும் செய்யலாம். (சாத்தியம் தான்!)
திமுக அரசு கவனமாக இருந்தால், மகிழ்ச்சி.

Comments