கெட்ட வார்த்தை பேசுவோம் - நூல் அறிமுகம்
எனக்கு நினைவு தெரிந்த அளவில் நான் முதல் முதலில் திட்டு வாங்கிய வார்த்தை 'கேன புண்டை' என்பது தான். கிராமவாசி என்பதால் நில தகறாரு நடந்த சமயத்தில் எதிராளியிடம் இருந்து எனக்கு இப்படி ஒரு பட்டம் கிடைத்திருந்தது. அப்போது பொருள் தெரியாமல் முழித்து கொண்டிருந்தேன். அதன் பின் என் வாழ்க்கையில் ' சுன்னி, ஓத்தா, ஒம்மா, ஊம்பு ......' மட்டும் பல ‘யாரும் கேள்விப்படாத’ வார்த்தைகளில் எல்லாம் திட்டு வாங்கி இருக்கிறேன். 10 ஆம் வகுப்பு வரை பதிலுக்கு திருப்பி திட்டி கொண்டிருந்த எனக்கு, 11 ஆம் வகுப்பு வெளியூரில் படிக்க சென்றதும் ஆற்றின் குறுக்கே அணை காட்டியது போல் கெட்ட வார்த்தை வரத்து நின்று போனது. அன்று தொடங்கி இப்போது வரை யாரையும் வாய்விட்டு திருப்பி திட்டியது இல்லை.
மனதுக்குள் திட்டுக்கொள்வது உண்டு . என் பொறுமையை சோதிக்கிறேன் என்று சீண்டிய நண்பர்களும் இதுவரை என் வாயில் இருந்து ஒரு வார்த்தையையும் பதிலாக பெற்றதில்லை. நிற்க.
இன்றைக்கு இணையத்தின் வருகை மற்றும் அதன் பரவல், கெட்ட வார்த்தைகளை நவீனமாக்கியுள்ளது , குறிப்பால் உணர்த்தும் வகையில் கெட்ட வார்த்தைகள் பரிணமித்துள்ளன. எடுத்துக்காட்டாக ‘o***a’ என்றால் அதற்கு ஓத்தா என்று பொருள். அதே போல் sumni/pumda என்றால் Cheems பாஷையில் சுன்னி /புண்ட என்று பொருள். இதே போல் ‘N’ வரும் இடங்களில் எல்லாம் ‘M’ என்ற எழுத்தை பயன்படுத்துவது இப்போது ஸ்டைலாகி வருகிறது. meme கலாச்சாரம் கெட்ட வார்த்தைகளை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
இப்போதேல்லாம் பொது இடங்களில் தினமும் ஒருவர் திட்டுவதையாவது கேட்டுவிடுகிறேன். சமீபத்தில் ரசித்த ஒரு வார்த்தை 'தூம பாடு', அதே போல் கொஞ்சிக்கொண்டே திட்டுவது இப்போது பரவலாகி வருகிறது ‘லூசு கூதி’ என்று சொல்வதற்கு பதிலாக செல்லமாக 'Loosu cutiee' என்ற வார்த்தையையும் சிலர் பயன்படுத்துகிறார்கள்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதி 2011 இல் வெளிவந்து 2014இல் மறுபதிப்பு கண்ட 'கெட்ட வார்த்தை பேசுவோம்' என்ற நூலை அறிமுகப்படுத்த தான் இத்தனை கெட்ட வார்த்தை பேசி வைத்துள்ளேன். இதுவே நான் இந்நூலுக்கு செய்யும் நன்றி கலந்த மரியாதை.
நூலில் தலைப்பு தான் படிக்க தூண்டியது, உள்ளே நுழைந்ததும் பெரும் ஆச்சரியம் காத்து கொண்டிருந்தது. 'அல்குல்' என்ற வார்த்தை அறிமுகமானது, பெண்ணின் பிறப்புறுப்பை குறிக்கும் வார்த்தை. சங்க இலக்கியங்களில் பரவலாக காணப்படும் வார்த்தை, என்றெல்லாம் குறிப்பு நீண்டது. அதுவரை அறிந்திராத அந்த வார்த்தை ஏனோ அவ்வளவு பிடித்து போனது. ஐஸ் கிரீம் போல். இப்போது பெண்களின் பிறப்புறுப்பை குறிக்க பயன்படுத்தபடும் வார்த்தைகளுக்கு எவ்வளவோ தேவலாம் என்று தோன்றியது. அல்குல்.
ஆனால் இந்த வார்த்தைகள் பற்றிய அர்த்தங்கள் எல்லாம், ஒழுக்கம் நாகரீகம் என்ற பெயரில் வேறு அர்த்தத்தில் சுட்ட படுகிறது. அல்குல் என்ற வார்த்தை சங்க இலக்கிய கவிஞர்களால் சிலாகிக்க பட்டிருக்கிறது. ஆல அகலங்கள் வரை.
அதே போல் காமத்தை பற்றியும் புணர்ச்சியை பற்றியும் சங்க இலக்கிய குறிப்புகளை வைத்து எழுதப்பட்ட கட்டுரைகள், இன்றைக்கு நமக்கு சுட்டிக்காட்டப்படும் ‘கற்பு நெறி’ என்ற பதத்தையே கேள்விக்குட்படுத்துகின்றன. Live in relationshipஇல் இயல்பாக இருக்கும் காமத்தை போலவே அன்றைக்கும் இருந்துள்ளதை தான் நமக்கு கற்பிக்கப்படாத சங்க இலக்கிய பாடல்கள் குறிக்கின்றன. எப்படி இரு உள்ளம் இணைந்ததற்கு உள்ளப்புணர்ச்சி என்ற வார்த்தை பயன்படுகிறதோ, உடல் இரண்டும் இணைந்தால் அதனை மெய்யுறுப்புணர்ச்சி என்று அகப்பொருள் இலக்கணம் சொல்வதாக கூறுகிறார் இந்நூல் ஆசிரியர். தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணத்தில் பயிற்சி வேண்டும் என்பதை இக்கட்டுரைகள் சுட்டிக்காட்டின.
பேரறிஞர் அண்ணாவின் ‘கம்பரசம்’ பற்றிய கட்டுரை மிகவும் பிடித்தது, பெயர் அரசியலில் தொடங்கி அண்ணாவின் ரசவாதம் வரை அந்த கட்டுரை தொட்டு இருந்தது. அதே போல் இராமாயணத்தில் வரும் திராவிட இனத்தவரை உள்ளடக்கிய ரசங்களை அண்ணா குறிப்பிடாமல் விட்டதையும் இக்கட்டுரை சுட்டியது, நுண்ணரசியல்.
காளமேக புலவர் எழுதிய செய்யுள்கள் வைரமுத்து எழுதும் இரண்டு அர்த்த பாடல்களுக்கு முன்னோடி என்று சொல்லும் அளவுக்கான தன்மையை கொண்டிருப்பவை. மாடம், சதி, பருமம், கூதி போன்ற வார்த்தைகளை தமிழுக்கு அவர் தந்த கொடை என்கிறார் பெருமாள் முருகன்.
உரையாசிரியர்களாலும் , பதிப்பாசிரியர்களாலும் தவறாக குறிக்கப்பட்ட எத்தனையோ சங்ககால 'நல்ல' வார்த்தைகள் இருப்பதை இக்கட்டுரைகளை வாசிக்கும்போது அறியமுடிகிறது. இங்குள்ள கல்வி சூழலும் இந்த 'நல்ல' வார்த்தைகளையே செய்யுள்களையோ நமக்கு அறிமுகப்படுத்துவதில்லை. "அல்குல்" என்ற வார்த்தையை நான் பிறந்த 24ஆம் ஆண்டில் தான் அறிந்து கொள்கிறேன் என்பது என் பிழையா அல்லது இந்த கல்வி அமைப்பின் பிழையா?
இப்படி ஏராளமான கேள்விகளும், நிறைய பதில்களும், அதை விட நிறைய அக கிளர்ச்சிகளும் இந்நூலை வாசிக்கும்போது எழுந்தது. பல இடங்கள் பரவச நிலையை அடைய செய்தன. கற்பனை வளம் இருந்தால், வாசிக்கும் அனைவர்க்கும் இது வாய்க்கும்.
நூலின் இறுதியில் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய 'நல்லா வாயில வருது' என்று தலைப்பிடப்பட்ட கட்டுரை இடம்பெற்றிருந்தது, இந்நூலில் நான் வாசித்த முதல் கட்டுரையும் அது தான். தவறவிட கூடாத கட்டுரை, இந்த கட்டுரை தொகுப்பு தொட்டதை பற்றியும் தொடாமல் விட்டதை பற்றியும் அவர் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். மேலும் ஒரு வரலாற்று ஆசிரியராக கெட்ட வார்த்தைக்கு பின் இருக்கும் நல்லா வரலாறையும் பதிவு செய்துள்ளார்.
என் கெட்ட வார்த்தை அனுபவங்களை தயங்காமல் முகநூலில் எழுத தைரியமூட்டிய இந்நூலை அனைவர்க்கும் நல்ல மனதுடன் பரிந்துரைக்கிறேன்.
காலச்சுவடு.
இத படித்த பிறகுவாயில நல்ல வருது!வாழ்த்துகள் தம்பி.
ReplyDelete