சட்டநாதனும் சட்டமற்ற-நாதர்களும்

 



EWS இடஒதுக்கீட்டை மையமாக வைத்து நடக்கும் வாத-பிரதிவாதங்களில், சட்டநாதன் கமிஷன், அம்பாசங்கர் கமிஷன் அறிக்கைகள் பற்றி எல்லாம் குறிப்பிட்டு ஏதோ உளறி கொண்டிருக்கிறார்கள் EWS ஆதரவுகாரர்கள்.


உண்மையிலேயே இந்த கருத்துக்கு சொந்தக்காரர்கள் மேதாவித்தனமாக பேசுகிறோம் என்று நினைத்து கொண்டு சிலவற்றை சொல்லி வருகிறார்கள்.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுப்பதற்கு அவர்களிடம் எந்த நியாயமான வாதமும் இல்லை, அதன் காரணமாக Creamy Layerஐ சட்டநாதன் கமிஷன் எதற்கு பரிந்துரைத்தது? என்று கேள்வி எழுப்பி வாதத்தை நியாய படுத்த முயற்சி செய்கிறார்கள். அதே சட்டநாதன் கமிஷன் பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று எந்த பரிந்துரையும் செய்யவில்லை தான். ஆனால் தமிழ்நாட்டரசு அன்று பட்டியல் சாதி இடஒதுக்கீட்டையும் உயர்த்தி, கிரீமி லேயர் ஐயும் தவிர்த்து இருந்தது. நிற்க.

Article 16 (4) இப்படி சொல்கிறது Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favor of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State . இங்கு ‘In the opinion of the state’ என்பது முக்கியமான வாக்கியம். அதாவது அரசு கருதினால்.

கமிஷன்கள் அமைப்பது அரசுக்கு பரிந்துரைக்க தான், சில நேரம் அந்த கமிஷன்கள் பரிந்துரைக்காத சிலவற்றையும் அரசு செயல்படுத்தி இருக்கிறது. 10 EWS போல், 18 % பட்டியலின பழங்குடியினர் இடஒதுக்கீட்டை போல். ஆனால் தமிழ்நாட்டரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இருக்கும் முரண்பாட்டை இங்கு கவனிக்க முடியும். EWS இடஒதுக்கீட்டை அனுபவிக்கும் உயர்சாதி ஏழைகள் எதன் அடிப்படையில் Backward ? இந்தியாவில் economical backwardness என்பது கூட பொருளாதாரத்தை விட சாதி சார்ந்த ஒன்றாகவே இருந்துள்ளது. சாதிகள் தான் இங்கு வர்க்கங்கள்.

BC இடஒதுக்கீடு 50 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்ட பின்னர் அமைக்கப்பட்டது தான் அம்பாசங்கர் கமிஷன், அதன் பின் நடந்த இடஒதுக்கீடு போராட்டங்களால் தான் MBC என்ற தனி பிரிவே உருவானது, தமிழ்நாட்டில்.

சட்டநாதன், அம்பாசங்கர் கமிஷன்கள் மீது கவனம் செலுத்துபவர்கள் யாரும் நேரு காலத்தில் அமைக்கப்பட்ட காக்கா காலேல்கர் கமிஷன் பற்றி வாய் திறப்பதில்லை, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, அது ஏன் கிடப்பில் போடப்பட்டது? செலவழித்த நிதி? எதனால் அப்படி? என்ற கேள்விகள் எழும்போதேல்லாம் EWS வாத காரர்கள் சாந்தி அடைத்துவிடுவார்கள். மண்டல் கமிஷனுக்கும் அப்படியே.

மண்டல் கமிஷன் பரிந்துரைக்காத ஒரு விஷயத்தை Creamy Layerஎன்று இணைத்து அந்த சட்டத்திற்கு நியாயம் வழங்கியது உச்சநீதி மன்றம்(இந்திரா- சவ்ஹ்னே வழக்கில்). அரசு செய்யவேண்டிய பொறுப்பை உச்சநீதி மன்றம் மேற்கொண்டது ஏன் ?என்று தான் விளங்கவில்லை. இது அரசமைப்பு சட்டத்தை மீறியதாகும் தானே. இந்த வழக்கில் கூட தனி தீர்ப்பை எழுதியவர் தமிழ்நாட்டை சேர்ந்த நீதியரசர் திரு . ரத்னவேல் பாண்டியன். அவர் கிரீமி லேயர் முறையை வேண்டாம் என்றார்.

அவரவருக்கு தோன்றிய கருத்தை சொல்லி அதை உண்மையாக்க பாடுபட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் ஏனோ முழு உண்மையையும் அவர்கள் சொல்ல முயல்வதில்லை.

ஷினோ கமிஷன் பரிந்துரைக்காத ஒரு விஷயத்தை(EWS) ஒன்றிய அரசு சட்டமாக்கியுள்ளது. அதற்கு ஆதரவு அளித்த அரசியல் தெளிவற்ற அகில இந்திய கட்சிகளுக்கு எத்தனை கெட்ட வார்த்தை சொன்னாலும் தகும்.

மேலும் அந்த கமிஷன் NSSO (National Sample Survey Office) அடிப்படையாக கொண்டதாம். sample survey வை எடுத்துக்கொண்டு மட்டுமே அது சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில் இடஒதுக்கீடு என்ற ஒரு பரிந்துரையே இல்லை. ஆனால் ஒன்றிய அரசு வழங்கி இருக்கிறது.

இந்திரா- சவ்ஹ்னே வழக்கில் அரசின் செயல்பாட்டுக்குள் மூக்கை நுழைத்த உச்ச நீதி மன்றம்(By introducing Creamy layer provision), இந்த EWSவழக்கில் அப்படி செய்யாமல் இருந்திருக்கிறது. சொந்த சாதி பாசம் அல்லவா.!! எந்த வித சார்புமற்று இருக்க அவர்கள் என்ன கல்லா மண்ணா, மனிதர்கள் தானே.

ஆனால் ஒன்றைமட்டும் தெளிவாக விளங்கி கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கும் இருக்கும் அரசியல் பார்வையும், அரசியல் சரி தன்மையும், அரசியல் புரிதலும் வேறெந்த மாநிலத்தவருக்கும் இல்லை. இடஒதுக்கீடு, மொழி உரிமை என்றால் ஒற்றை அணியில் கூடி நிற்கும் பண்பை தமிழ்நாட்டு அரசியலில் மட்டும் தான் பார்க்கமுடியும். தமிழ்நாட்டில் கல்விக்கு சற்றும் தொடர்பற்ற ஒருவரிடம் சென்று இடஒதுக்கீடு பற்றி கேட்டல் அதற்கு சரியான பதிலை சொல்வார். இந்தி எதிர்ப்பை பற்றி சொல்வார். பெரியாரை குறிப்பிட்டு பேசுவார்.

இனொன்றையும் இங்கு சொல்ல வேண்டும், போராட்ட்டம் என்பது முழக்கங்கள் எழுப்பப்படும் களம் சார்ந்த ஒன்று மட்டுமல்ல என்பதை தான் நூற்றாண்டு கண்ட திராவிட அரசியல் நமக்கு சொல்லி செல்கிறது.

இதை புரிந்துகொள்ள முயற்சிக்காமல் சட்டநாதனையும், அம்பாசங்கரையும், தமிழ்நாட்டு அரசையும் சிலர் சொரிந்து கொண்டிருப்பது வேண்டிகையாக இருக்கிறது.

மற்ற நாட்களில் புரட்சி பேசிவிட்டு, நேற்று அமைதி காத்த நவம்பர் புரட்சி காரர்களுக்கும் அனுதாபங்கள்.

நேற்று தீர்ப்பு வழங்கிய சட்டமற்ற-நாதர்களை மீதும் ஒரு முறை மனதுக்குள் திட்டி கொண்டே புள்ளி வைக்கிறேன் . 

Comments