Pedagogy of the Oppressed // Perspectives
Paulo freire எழுதிய Pedagogy of the Oppressed நூலை சற்று முன் தான் வாசித்து முடித்தேன். நேரம் எடுத்து படித்த நூல். வெளியாகி அரை நூற்றாண்டு கடந்தும் கல்வி, விடுதலை, ஒடுக்குமுறை சார்ந்த கோட்பாடுகள் பொருத்தப்பாடுடையதாகவே இருக்கின்றன.
இந்நூலின் உள்ளடக்கம் பற்றி எதையும் இப்போது எழுதப்போவதில்லை. மாறாக இதில் கூறப்படும் கோட்பாடுகளை திராவிட அசைவியக்கத்தின் வளர்ச்சியோடும் பரிணாமத்தோடும் பொருத்தி பார்க்கிறேன்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கம் முதல் இன்றைய திராவிட முன்னேற்ற கழகம் வரை இம்முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மக்களிடம் மிக நெருக்கமான அரசியலை தான் திராவிட இயக்கங்கள் மேற்கொண்டு வந்திருக்கின்றன. அது மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையிலான உரையாடலாக தான் இருந்துள்ளது.
அண்ணா எழுதிய “தம்பிக்கு..” கடிதங்களாக இருக்கட்டும். கலைஞர் “உடன்பிறப்பே..” என்று எழுதிய கடிதங்களாக இருக்கட்டும், இன்றைக்கு முக ஸ்டாலின் எழுதும் “உங்களில் ஒருவனாக” இருக்கட்டும். இந்த தலைவர்கள் எல்லாம் மக்களை மையமாக வைத்தே தங்களது கோட்பாட்டாக்கத்தை மேற்கொண்டனர்/மேற்கொள்கின்றனர்.
உரையாடல் மூலம் அறிவூட்டும் திராவிட இயக்க மரபின் தொடர்ச்சியாக தான் சமகால 'திராவிட மாடல் பயிற்சி பாசறைகளையும்' பார்க்க வேண்டும்.
இதை இன்னும் விரிவாக தனி கட்டுரையாகவே எழுதலாம் என்று நினைக்கிறேன். தரவுகளை திரட்டி எழுதுகிறேன்.
மற்ற எல்லா துறையை சேர்ந்த நண்பர்களும் குறிப்பாக கல்வி துறை நண்பர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய நூல். தமிழ்நாட்டில் “அறிவொளி இயக்கம்” செயல்பட்ட சமயத்தில் இந்நூல் பெரிதும் படிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
நூல் வெளியாகி 50 ஆண்டு கழித்து படித்திருப்பது குற்றவுணர்வை ஏற்படுத்தினாலும், சிந்தனை முறையில் ஏற்படுத்திய தாக்கத்தினால் மகிழ்கிறேன்.
நட்பு பட்டியலில் இருக்கும் அனைவர்க்கும் இந்நூலை உளமார பரிந்துரைக்கிறேன்.
Comments
Post a Comment