Primo Levi - The Matter of a Life

 


  காலனியம், பாசிசம், ஸ்டாலினியம் ஆகியவற்றை   20 ஆம் நூற்றாண்டில் நடந்த மூன்று மோசமான வன்முறைகளாகவும் துயரங்களாகவும் சொல்லலாம். வரலாற்றிலும் மனித வாழ்விலும் இவை உண்டாக்கிய கொடூரங்கள் பல. நிறவெறி, பிரிவினை, அடக்குமுறை, தீவிரவாதம், இனவெறி, சர்வாதிகாரம், வெறுப்பு என அவற்றை பட்டியலிடலாம். 


இதுபோன்ற அடக்குமுறைகளை அனுபவித்து அதிலிருந்து மீண்டவர்கள் முக்கிய ஆளுமைகளாக பரிணமித்துள்ளனர். க்ராம்சி பாசிசத்தால் சிறையில் அடைக்கப்பட்டு 'சிறை குறிப்புகளாக(Prison Notebooks)' தனது சிந்தனைகளை எழுதி குவித்தவர். இங்குள்ள பெரும்பாலானவர்கள், Holocaust survivorஎன்று அறியப்படும் Viktor Frankl  எழுதிய Man's Search for Meaning நூலை படித்திருக்க வாய்ப்புண்டு. அதே போல் இந்திய பிரிவினைக்கு பின்னர் மண்டோ எழுதிய துயரமான வரிகளை நாம் அறிந்திருப்போம்.


 தெற்கு போலாந்திலுள்ள நாஜி வதை முகாமான Auschwitzல் இருந்து உயிர் தப்பித்தவர் Primo Levi. 68 வயது நிறைவடையும் முன்னே தற்கொலை செய்து கொள்கிறார். அவர் எழுதிய நூல்களை படித்தவர்களுக்கு இவர் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கத்தோன்றும்.


 இயல்பாக ஒரு நூல், முன்னுரையுடன் தொடங்குவது தான் வழக்கம், ஆனால் இயல்பற்ற மரணம் அனைத்து இயல்புகளையும் தலைகீழாக புரட்டி போட்டுவிடுகிறது. Berel Lang எழுதிய 'Primo Levi - The Matter of a Life' என்ற வாழ்க்கை வரலாற்று நூல். முடிவில் இருந்து தொடங்கி, தொடக்கத்தில் முடிகிறது. 


இதுவரை வாசித்த வாழ்க்கை வரலாறு புத்தகங்களில் இருந்து இந்நூல் பெரிதும் மாறுபட்ட ஒன்று. Berel Lang ஒரு தத்துவவியலாளர், Leviன் எழுத்துக்களை ஆழ்ந்து கற்றவர். அவரது வாழ்க்கையின் ஆழ அகலங்களை அறிந்திருந்தவர் என்ற கருத்தை தான் இந்நூல் ஏற்படுத்துகிறது. The Matter of a Life என்ற துணை தலைப்புக்கேற்றார் போல் இந்நூல் Levi பற்றிய அக மற்றும் புற விஷயங்களை நமக்கு கடத்துகிறது. அதுவும்  170 பக்கத்தில். தொ.மு.சி. ரகுநாதன் புதுமைப்பித்தனை பற்றி ரசித்து எழுதிய வாழ்க்கை வரலாறு,  இந்நூலை வாசிக்கும்போது மனதில் நிழலாடியது. 


Leviயை ஒரு பன்மைத்துவ  எழுத்தாளர் என்று சொல்லலாம், Holocaust எழுத்தாளர் என்று மட்டும் சுருக்கி விட முடியாது.  நாவல், கவிதை, கட்டுரை, சிறுகதை  என Holocaust தாக்கமில்லாத படைப்புகளும் இவர் எழுத்தில் அடங்கும். ஆனால் ஒரு வேதியியலாளர்(Chemist), எழுத்தாளராக மாறியதற்கு அவரது Auschwitz வதை முகாம் அனுபவங்கள் தான் காரணம். இந்தியா அரசியல் விடுதலை பெற்ற ஆண்டான 1947இல் Levi தனது வதை முகாம் அனுபவங்களை  'If This ia a Man' என்று தலைப்பிட்ட நூலக வெளியிடுகிறார்.   


அடுத்த படைப்பு 15 ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கிறது. Leviன்  பெரும்பாலான படைப்புகளில் வரலாறும் தத்துவமும் அனுபவங்களும் நிரம்பி வழியும் என்கிறார் இந்நூல் ஆசிரியர். 


அவரது ‘The Periodic table’ என்ற நூலின் சில பக்கங்களை நான் படித்திருக்கிறேன் Argon என்ற செயலற்ற Noble Gasல் தொடங்கி அனைத்திலும் நிறைந்திருக்கும் Carbonல் முடியும். இவரது வாழ்க்கை அனுபவங்கள்- வரலாறு - தத்துவம் என்பனவற்றை எல்லாம் எழுதி இருப்பார். இதுவும் ஒரு மாறுபட்ட முயற்சி தான்.   


The end என்று தொடங்கும் இந்நூல் பின்னர் உலகப்போர் பற்றியும் வதை முகாம் பற்றியும் பேசுகிறது, அதன் பின்னர் leviன் எழுத்துக்களை ஆழமாக ஆய்வு செய்கிறது. வதை முகாம் அவருக்குள் ஏற்படுத்திய அடையாள சிக்கலை அடுத்த பகுதி பேசுகிறது. அவரது சிந்தனை மரபு எப்படியாக இருந்தது என்பதை ஒரு தத்துவ கண்ணோட்டத்தில் ஆராய்கிறார் இந்நூல் ஆசிரியர். அதை தொடர்ந்து தொடக்கமும், முடிவாக முன்னுரையும் இடம்பெற்றுள்ளது. நூலின் தொடக்கத்தில் ஒரு உரையாடல் மேற்கோளிடப் பட்டிருக்கிறது. 


Interlocutor: But surely, M. Godard, you would agree that every film should have a beginning, a middle and an end. 


M. Godard: Yes, Of course but not necessarily in that order. 


இந்த மேற்கோளுக்கு நியாயம் செய்யும் வகையில் தான் இந்நூலின் உள்ளடக்கம் அமைந்துள்ளது.


 Leviன் அனைத்து பரிமாணங்களையும் இந்நூலில் பார்க்கமுடிகிறது. எழுத்தாளராக- வேதியியலாளராக - வதை முகாமில் உயிர் பிழைத்தவராக- யூதராக- பகுத்தறிவுவாதியாக- தற்கொலையாளராக என அவரது அனைத்து முகங்களும் இதிலடங்கும். Levi பற்றிய மற்ற வாழ்க்கை வரலாறு நூல்களை படித்தால் இந்நூல் எந்த விதத்தில் மாறுபட்டு இருக்கிறது என்பதை அறிய முடியும். 


பொதுவாக எழுத்தாளுமையின் மீது ஏற்படும் கவர்ச்சி அந்த ஆளுமையின் வாழ்க்கை வரலாறு நோக்கி ஒரு வாசகனை நகர்த்தும்.(Sometimes Vice versa)  அந்த கவர்ச்சி ஒருவரது எழுத்தை வாசித்ததன் விளைவால் உருவாகி இருக்கலாம், சிலருக்கு பேச்சுக்களை நேர்காணல்களை பார்த்து அப்படியான உணர்வு ஏற்படலாம். எனக்கு, Leviன் கவிதைகளும் அவரது மேற்கோள்களும். 


குறிப்பாக "The butterfly’s attractiveness derives not only from colors and symmetry:  deeper motives contribute to it.  We would not think them so beautiful if they did not fly, or if they flew straight and briskly like bees, or if they stung, or above all if they did not enact the mystery of metamorphosis, which assumes in our eyes the value of a message, a symbol, a sign.”


 வாழ்க்கை பற்றிய சந்தேகம் வரும்போதெல்லாம் இந்த மேற்கோளை நினைத்து  கொள்வேன். leviன் வாழ்க்கையும் இந்த மேற்கோள் போன்ற ஒன்று தான். வதைபட்டு பறந்த பட்டாம்பூச்சி அவர். 


Leviஐ படிக்க மற்றுமொரு காரணம், இந்நூலை சலபதி எனக்கு படிக்க கொடுத்தார். 


வாய்பிருப்போர் அவசியம் வாசிக்கவும். 









Comments