விலை கொடுக்க தயாராகுங்க மக்கா.

   



தமிழ்நாடு அரசும் TN Green Climate Company யும் சேர்ந்து TN Climate Change Document என்ற ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று திணைகளில் தொடங்கி பல கோடிகள் Climate Change ஐ எதிர்கொள்ள (‘முதலீடு’ என்பதா ‘வீண் செலவு’ என்பதா? படிப்போர் முடிவுக்கே விடுகிறேன்)


பல செயல்களில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம் என்றாலும் காலநிலை மாற்றம் என்று வரும்போது அரசு  காட்டும் அவசரம் அச்சமூட்டுகிறது. இதற்கு பின்னால் பெரும் லாப நோக்கம் உள்ளது என்பது ஒரு காரணம் என்றாலும்  இதுபோன்ற எளிதில் அடையமுடியாத லட்சியங்களுக்கு உரிய விலையை கொடுக்க தமிழ்நாடு தயாராக உள்ளதா என்ற கேள்வியும் அடிக்கடி எழுகிறது. எதிர்காலத்தில் வயதான ஒரு மக்கள்தொகையை வைத்துக்கொண்டு இதை நாம் எப்படி சாத்தியப்படுத்த போகிறோம்? Too early என்ற தர்க்கம் இதற்கெல்லாம் பொருந்தாதா? 


மக்களிடம் காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவது அவசியம் என்பதில் இரண்டு கருத்தில்லை. ஆனால் Pilot project என்ற பெயரில் பல கோடிகளை செலவழிப்பது தேவையற்ற ஒன்று.


மாவட்ட வாரியாக Climate Change Mission ஒன்றிணை முன்னெடுக்கவும் அதற்காக மாவட்டத்திற்கு 10 லட்சம் என்ற வீதத்தில் ருபாய் 3.80 கோடியை செலவழிக்க அரசு தீர்மானித்துள்ளது. 


இதனோடு சேர்த்து CM’s green fellowship programme என்ற ஒன்றையும் அரசு செயல்படுத்த விருக்கிறது, அதற்கு 6 கோடி இரண்டாண்டுகள். இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை ஏதோ ஒரு NGO தான் தீர்மானிக்க போகிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.. 


அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘Climate Studio’. இதற்கு வேறு ஒரு வகையில் நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஅது  ருபாய் 246.87  லட்சம் அத்தோடு சேர்த்து தமிழக அரசு நிதியாக ருபாய்  3.8 கோடி. 


அடுத்ததாக பசுமை பள்ளிக்கூட திட்டம் 5 கோடி 25 பள்ளிகள், ஒரு பள்ளிக்கு தலா 20 லட்சம். இதை மற்ற பள்ளிகளுக்கும் நீட்டிக்க திட்டம் இருக்கிறது  போல். 


Climate Smart Villages என்ற ஒரு திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கிராமங்களில் 10 கோடியில், காந்தி சொன்னது போல் ""தற்சார்புடையதாக" மாற்றும் திட்டமும் இருக்கிறது. நகரமயமாக்கல் அதிகம் தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று , இருந்தாலும் இந்த அறிக்கை தமிழ்நாட்டை விவசாய மாநிலம்(agrarian state) என்று குறிக்கிறது. எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை. 


தமிழ்நாட்டில் விவசாய நிலங்களை கொண்டிருக்கும் குடும்பங்கள் கூட விவசாயம் அல்லாத வருவாயை நம்பி தான் இருக்கிறார்கள். Agriculture to GSDP ratio: 4.  இந்த அறிக்கையை தயாரித்த சூழலியல் சூறாவளிகளுக்கு அது தெரியாமல் போய் விட்டது போல். 


38 மாவட்டங்களிலும் சூழலியல் மாநாடுகள், மாநிலத்தில் வருடம் இரண்டு சர்வதேச சூழலியல்  மாநாடுகள் நடத்தப்படும் திட்டத்தையும் இந்த அறிக்கை விவரிக்கிறது. ‘Green Monuments’ என்கிற பெயரில்  இங்கிருக்கும் நினைவு சின்னங்களை கூட பசுமையாக்கும் திட்டம் இருப்பதாக தெரிகிறது. 


 வழக்கம் போல் 33% Green cover, பலனளிக்காத  Miyawaki Model, நகரத்து சுவர்களில் செடி வளர்க்கும் (Vertical Gardens) திட்டம், (இந்த திட்டங்கள் எல்லாம் CSR நிதி மூலம் ஏற்கனவே  முன்னெடுக்கப்பட்டு சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது. சென்னை மேம்பாலங்கள் இதற்கு சாட்சி.)


இதை எல்லாம் படித்து விட்டு 2040குள் Net Zero Emissionஐ  அடைவோம் என்று பார்த்ததும் கலைந்தது 1  ட்ரில்லியன் டாலர் கனவு. 172.83 Mt CO2வை  33% காடுகள் பரப்பை உயர்த்துவதன் மூலமும் இன்னும் சில உதிரி திட்டங்கள் மூலமும் net-zero ஆக்க போகிறோமாம்….(இந்தியாவே 2070 இல் அடைய நினைக்கும் Net Zero Emissionஐ தமிழ்நாடு 2040 லேயே அடைய முயல்கிறது. )


இவற்றை எல்லாம் எதனடிப்படையில் அரசு தீர்மானிக்கிறது ? மக்களிடம் இத்திட்டங்களை முன்னெடுக்க கருத்து கேட்பு கூட்டங்கள் ஏதேனும் நடந்தனவா?  வெளிப்படைத்தன்மை உள்ளதா ? போன்ற கேள்விகளுக்கான பதில் யாரிடமும் இல்லை. Montek Singh Ahluwalia போன்றவர்கள் எல்லாம் இந்த குழுவில் இருந்தும், இத்தகைய Half-boiled அறிக்கை வெளியாகி இருப்பது வியப்பளிக்கிறது. 


வழக்கம் போல் தேவையற்ற செயல்களுக்கு எந்த வித குற்ற உணர்வும் இன்றி நிதியையே வாரி இரைத்து, முன்னோடி மாநிலம் என்று பீற்றிக்கொள்ள தமிழ்நாடு தயாராகிறது. 


விலை கொடுக்க தயாராகுங்க மக்கா. 





Comments