பெரியாரை புரிந்துகொள்ள நீங்கள் பார்பனரல்லாதாராக இருக்க வேண்டும்.

 




பெரியாரை பற்றி பார்ப்பனர்கள் கொண்டிருக்கும் கருத்துக்கு நான் ஒருநாளும் செவிசாய்க்க விரும்பியதில்லை. தங்களது வாழ்நாளில் ஒரு ஒடுக்குமுறைக்கு கூட ஆளாகாமல், ஒரு போராட்டத்தையும் நடத்தாமல், கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம் என அனைத்து தளங்களிலும் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சாராரால் எப்படி பெரியாரை புரிந்துகொள்ள முடியும்?


இவர்கள் எழுப்பும் கேள்விகள் எந்த வகையில் முக்கியமானவை? காலம் காலமாக மந்திரம் ஓதி மனப்பாட சக்தியை மட்டும் ஏற்படுத்திக்கொண்டு தங்களது அறிவை உயர்ந்த இடத்தில வைத்து வியக்கும் இவர்களிடம் என்ன விமர்சன பார்வை இருந்துவிட போகிறது ?

எல்லாவற்றையும் மிக எளிமையாக அணுகும் வாய்ப்பை கொண்ட பார்ப்பனர்கள் சாதியை எதிர்த்து உருப்படியான போராட்டங்களேனும் செய்து இருக்கிறார்களா?

சாதி/ வர்ண அமைப்பின் உச்சியில் இருபதலையே இவர்கள் நவீனத்தை வெகு இயல்பாக ஏற்று கொள்கிறார்கள். தங்களை பிரிட்டிஷாருக்கு சமமாக நினைத்து மற்றவர்களை தாழ்த்துவார்கள். நான் ஒரு சீர்திருத்தவாதி என்று எளிதாக அவர்களால் எந்த சீர்திருத்த வேலையும் செய்யாமலே சொல்லிவிடமுடியும். 'I’m a brahmin rationalist/communist/ambedkarist' என்று சொல்லி இவர்களது பகுத்தறிவை தாராளவாதத்தை இடதுசாரி தன்மையை நிரூபித்துக்கொள்வார்கள். சாதியால் எந்த ஒடுக்குதலுக்கும் ஆளாகாமல் நான் சாதியற்றவன் என்று இவர்களால் சொல்லிவிட முடியும்.

பெரியாரை விமர்சிக்க நீங்க சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருக்க வேண்டும். இங்கு "சாதிய" என்ற சொல் ஆணாதிக்கத்தையும் உள்ளடக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

எந்த சாதிய அடக்குமுறைக்கும் ஆளாகாமல் உங்களுக்கு எப்படி பெரியாரை புரியும்? இங்குள்ள பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் ஆன்மீக தளத்தில் ஒடுக்கப்பட்டவர்கள். அதை வைத்தே அவர்களது நிலை தீர்மானிக்கப்பட்டது. கோவில் ஒரு அதிகாரமாக இருந்து ஆதிக்க நிலையை ஆன்மீக தளத்தில் நிறுவியது. காலனியத்தின் வருகை கோவிலை சார்ந்திருந்த அதிகாரத்தை அரசின் கைகளுக்கு மாற்ற முயன்றது. ஆனால் இங்கு மேலாண்மை செலுத்திய பார்ப்பனர்கள் அதை விரும்பவில்லை. மரபான அதிகாரங்களையும் நவீன அதிகாரங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்று நினைத்த அவர்கள் ஒரு பக்கம் ஹிந்து தேசியவாதத்தை பேசிக்கொண்டு இன்னொரு புறம் சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் செயல்பட்டனர்.

பெரியாருக்கு நாஜி முத்திரை குத்த இவர்கள் என்ன யூதர்களா? Klu Klux Klan, Blacksஐ பார்த்ததை விட மோசமாக பார்பனரல்லாதாரை நடத்தியவர்கள் தானே இவர்கள். வெள்ளாளர்களை சுட்டி இவர்கள் தப்பித்துக்கொள்ள என்ன அடிப்படை இருக்கிறது இவர்களிடம்.

காலம் காலமாக சொகுசான வாழ்க்கையை அனுபவித்து இன்றைக்கு தங்களது கருத்து மேலாண்மைக்கு ஆபத்து என்றதும் பெரியார் போன்ற சீர்திருத்தகாரரை மிக மோசமாக சித்தரிக்கும் இவர்களிடம் என்ன கருத்து இருந்துவிட போகிறது.

தான் ஒரு பார்ப்பனர் என்ற ஒரே காரணத்தால் ஒரு நூலில் முக்கால் பங்கு இடத்தை நிரப்பி தான் கொண்டிருக்கும் கருத்தை எல்லாம் எந்த ஒரு தர்க்கமும் அற்று நிறுவ முயலும் பி.ஏ.கிருஷ்ணன் போன்றவர்களின் கருத்து எனக்கு அவசியமில்லை. அவர் பிறழ் வாதங்கள் அவரது பார்ப்பனிய தன்மைக்கு பெரும் சான்று.

"ஏன் பெரியார்" என்ற கேள்வியை ஒரு பார்ப்பனரல்லாத சாமானியனிடம் கேளுங்கள் பதில் கிடைக்கும்.


நல்ல மொழி பெயர்ப்பு. பார்ப்பனர் அல்லாதார் எழுதிய கட்டுரைகள் அருமை.

பெரியாரை புரிந்துகொள்ள/விமர்சிக்க நீங்கள் பார்பனரல்லாதாராக இருக்க வேண்டும்.


Comments