The Factories Act, 1948


 


The Factories Act, 1948-ல் தான் சட்ட திருத்தம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையிலும் அமைச்சர்கள் பேசி இருக்கும் சில தகவல் அடிப்படையிலுமே விவாதங்கள்/ கேலி/ கிண்டல்/ ஆதங்கம்/ அக்கறை எல்லாம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 




இந்த சட்டத்தில் “CHAPTER VI WORKING HOURS OF ADULTS” கீழ் இடம்பெற்றுள்ள சில சரத்துகள் திருத்தும் செய்யப்பட்டுள்ளன. 




51. Weekly hours


52. Weekly holidays


54. Daily hours.


55. Intervals for rest


56. Spread over


59. Extra wages for overtime. 




ஆகிய தலைப்புகள் கீழ் இருக்கும் சட்டங்கள் மட்டும் திருத்தப்படும் என்று தெரிகிறது.  மாநில அரசு சில சட்டங்களைத் திருத்த FACTORIE சட்டத்தின் சரத்து  65(Power to make exempting orders) அனுமதி அளிக்கிறது. வேலை நேரங்களில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தவும், தொழிலாளர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு வேலை நேர சீர்திருத்தங்களை ஏற்படுத்த இச்சட்ட திருத்தும் முனைகிறது. 




ஒன்றிய அரசின் Central Code(Occupational Safety, Health and Working Conditions Code) இன்னும் அமல் படுத்தப்படாத நிலையில் மாநில அரசே சில திருத்தங்களை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. 




 நவ தாராளவாத அரசியல் சூழலில் உழைப்பாளர் சட்டங்களிலும் சில மாறுதல்களைச் செய்யவேண்டி இருக்கிறது. அரசின் தலையீடு தனியார் மீது இருப்பதை இதுபோன்ற சட்டங்கள் தான் மெய்ப்பிக்கின்றன. மேலும் அரசின் சட்டங்களுக்குத் தனியார் செவி சாய்க்கிறதா என்பதையும் இத்தகைய திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்படுவதை அரசு முறையாகக் கண்காணிக்குமா  என்பது பெரும் கேள்விக் குறியாகவே உள்ளது. 




அண்டை மாநிலங்கள் இது போன்ற சட்டத் திருத்தங்களைச் செய்திருக்கும் காரணத்தால் தமிழ்நாடு அரசுக்கும் உலக முதலீடுகளை ஈர்க்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.




 திராவிட மாடல் என்பது நெகிழ்வுத்தன்மை கொண்ட அரசியல்- பொருளாதார மாதிரி தானே ஒழிய ஒரு அசைவற்ற கோட்பாடு கிடையாது. இந்த மாதிரி, வளர்ச்சி கட்டத்தில்(Evolution Phase) இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மேலும் இதுவரை ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களும் திருத்தங்களும் உழைப்பாளர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களாகவே இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இச்சட்டம் குறிப்பிட்டுள்ள Flexible Working hours என்பது தொழிலாளர்களுக்கு நன்மை பயக்க வேண்டுமே ஒழிய, முதலாளிகள் சுரண்டலுக்கு ஏதுவாக அமைந்துவிடக் கூடாது. அரசு இதிலும் கவனமாக இருக்க வேண்டும். 




 உலகம் முழுக்கவே உலகமயமாக்கல் நிமித்தமாகத் தொழிலாளர் சட்டங்கள் மாற்றமடைந்து வருவது வெளிப்படை, குறிப்பாக covid பெருந்தொற்று காலத்தில் Hybrid working Modelம் அதற்குப் பழக்கப்பட்ட புது தலைமுறை வேலையாட்களும் இச்சட்டங்கள் குறித்துக் கொண்டிருக்கும் கருத்துக்களை அரசு கேட்டறிய வேண்டும். வேலை செய்யும் முறையும் மாறிவருவதை வாதம் செய்வோர் கருத்தில் கொள்ளவேண்டும். பல நிறுவனங்கள் இப்பொழுதே ௧௨ மணி நேர வேலை முறையை தான் கடைபிடித்து வருகின்றன. அதற்கான தொகை மூலதனமாக்க படுகிறதே ஒழிய கூலியாக() வழங்க படுவதில்லை. இச்சட்டம் அதை கூலியாக வழங்கவும் நிறுவனங்களை நிர்பந்திக்கிறது. 




இணையத்தில் நடக்கும் இத்தனை பெரிய சலசலப்புகள் எல்லாம் அவசியமா என்ற கேள்வியும் எழுகிறது , திராவிட மாதிரியின் அடிப்படைகளை நாம் உயர்த்தி பிடிக்கும் வரை பிற மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக இந்த அரசியல்-பொருளாதார மாதிரி விளங்கும். அரசு இதை நல்ல முறையில் கையாளும் என்று நம்புகிறேன். 




ஒரு News cardஐ மட்டும் தூக்கிக் கொண்டு அலையும் பொறுப்பற்ற அன்பர்கள் மன்னித்தருள்க. 




Comments