India’s north-south divide : The Economist

 




இந்த வார Economist இதழ் தென்னிந்தியாவிற்கு வட இந்தியாவிற்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார வேற்றுமைகளைச் சுட்டிக்காட்டி Cover Story ஒன்றை வெளியிட்டுள்ளது.


தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக, கேரளா, தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் இந்திய மக்கள்தொகையில் 20% ஐ கொண்டுள்ளன. ஆனால் இந்தியாவின் GDP-யில் 31% ம் தென்னிந்திய மாநிலங்களிலிருந்து செல்கிறது. மின்னணு சாதன ஏற்றுமதியில் 46% தென்னிந்தியாவிலிருந்து செல்கிறது. தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில் 66% தெற்கினுடையது. அதிகம் புத்தொழில் நிறுவனங்களைக் கொண்ட பகுதியாகவும், தொழில் வளம், வேலைவாய்ப்புகள் தொடர்ந்து பெருக்கமடையும் பகுதியாகவும் தென்னிந்தியா திகழ்கிறது. அரசியல் நிலைத்தன்மை, பன்மைத்துவம், மதச்சார்பின்மை போன்றவற்றால் முதலீடுகள் தென்னிந்தியாவில் குவிகின்றன.


பாஜகவிற்குப் பதிவாகும் மொத்த வாக்குகளில் வெறும் 11% வாக்காளர்களே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் மேலும் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள 10% மக்களவை தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றுள்ளது.



பொருளாதாரம் வளம் ஒருபக்கம் குவிகிறது, வரி பகிர்வில் பொருளாதார வளம் நிறைந்த தென்னிந்திய மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப் படுகின்றன. 2026ல் வரவிருக்கும் தொகுதி மறுவரை தென்னிந்திய மாநிலங்களில் ஜனநாயக உரிமையைச் சுருக்கி அரசியல் பேரத்தைக் குறைக்கும் சாதியத்தையும் கொண்டுள்ளது.



ஒருபுறம் மதவாத பாஜகவிற்கும் மோடிக்கும் , பொருளாதார வளம் நிறைந்த தென்னிந்திய மாநிலங்களில் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வது உலக அரங்கில் தன்னுடைய பிம்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள அவசியமானது. மோடியின் தென்னிந்தியப் பயணங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்கும் இதுவே மூல காரணமாக கூறப்படுகிறது . இந்தி பேசும் மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் செல்வாக்குடன் திகழும் பாஜகவின் கவனம் தென்னிந்தியா மீது குவிவதற்கு இவையே மைய காரணங்கள்.



இந்தி-இந்து தேசிய வெறியையும், பார்ப்பன கலாச்சார பெரும்பான்மைவாதத்தையும் வைத்துக்கொண்டு பாஜகவின் இந்த கனவு எந்தளவிற்குச் சாத்தியம் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, வடக்கே மதவாத கலாச்சார அரசியலைப் பேசும் மோடி தென்னிந்தியாவில் Development அரசியலைப் பேசியாக வேண்டிய கட்டாயத்தையும் இந்த கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

Comments