#GraciasKroos

 







 ரியல் மாட்ரிட்டின் அச்சாரம் என்றால் அதன் மிட் பீல்டு தான். வலிமையான மிட் பீல்டு ஆட்டக்காரர்கள் தான் மாட்ரிட்டின் ஆட்ட போக்கை கடந்த பத்தாண்டுகளாகத் தீர்மானித்து வருகிறார்கள். Benzema- Bale-Ronaldo(BBC) என்ற புகழ்பெற்ற முன்கள ஆட்டக்காரர்களின் கோல்கள் பெரும்பாலும் மிட் பீல்டர்களாலேயே உருவாக்கப்பட்டது. Set piece, counter-attack போன்ற கோல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடங்கி ஆட்டத்தின் வேகத்தையும் தன்மையையும்  தீர்மானிப்பது வரை மாட்ரிட்டின் என்ஜின் போலச் செயல்பட்டனர் அதன் மிட் பீல்டர்கள். தொடர்ச்சியாக மூன்று UCL(2016,2017,2018) கோப்பைகளை வென்றதற்கு மூல காரணமாகத் திகழ்ந்தது அதன் மிட் பீல்ட் தான். அப்போது Managerஆக இருந்த Zidane மிகக் கவனமாக இந்த மிட் பீல்டை கட்டமைத்தார். 


Modric- Kroos என்ற புகழ்பெற்ற மிட் பீல்டர்கள் இணையில் ஜெர்மனியைச் சேர்ந்த Toni Kroos இந்த Euro-வோடு  தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.  மாட்ரிடுக்காக 15-வது சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதே, அனேகமாக அவரது கடைசி மகுடமாக இருக்கும். அவருடைய சொந்த அணியான ஜெர்மனி தற்போது இருக்கும் நிலையில் யூரோ கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தோன்றுகிறது. இருந்தாலும் அவர் World cup, Champions League, La liga, Club World Cup, Super Copa, Copa del re போன்ற கோப்பைகளை வென்ற கால்பந்தாட்ட உலகின் அலங்கரிக்கப்பட்ட ஆட்டக்காரராகவே ஓய்வு பெறுகிறார்.  


James Bond நாயகன் Daniel Craig போல் உடல் மற்றும் முக வாகை கொண்டவர் Kroos. நேர்த்தியான ஆட்டத்திற்கும், துல்லியமான Passகளுக்கும் பெயர் போனவர் என்பதால் அவர் கால்பந்தாட்ட ரசிகர்கள் வட்டாரத்தில் German Sniper என்று அழைக்கப்படுகிறார். மாட்ரிட்டின் கேப்டன்களுள் ஒருவர். தற்போது விளையாடி வரும் மாட்ரிட் ஆட்டக்காரர்களில் Fede Valverde போன்ற இளம் வீரர்களை அதிகம் Inspire செய்தவர் Kroos தான். Kroos விளையாடும்  ஆட்டங்களில் அவருடைய Pass Accuracy பெரும்பாலும் 93%க்கும் குறைவாக இருந்ததே இல்லை. பந்தைத் தக்கவைத்து, எந்த திசையை நோக்கிச் செலுத்துவது என்பதை ஆட்டத்தின் உள்ளே இருந்து தீர்மானிக்கும் திசைகாட்டியாக அவர் விளங்கினார். 


மாட்ரிட்டின் புகழ்பெற்ற, காவிய தன்மைகொண்ட கடைசி நிமிட வெற்றிகளில் பெரும்பாலானவற்றுக்கு Kroos-ம் நாயகனாக இருந்திருக்கிறார். அவரது உடல்மொழி மிக அரிதாகவே வெற்றி களிப்பை வெளிப்படுத்தும் . Set piece-களின் போது மட்டும் கையை உயர்த்தி எந்த பக்கம் பந்தை உதைக்கப் போகிறார் என்பதை சமிக்ஞை செய்வார்.  ஆடுகளத்தில் அமைதியாக, உணர்வற்ற ஞானி போல் காட்சியளிப்பார். அபாரமான கோல் அடித்தால் கூட மிக எளிமையான கொண்டாட்டத்தோடு முடித்துக் கொள்வார். 



   மாட்ரிட்டின் நட்சத்திரங்களின் பட்டியலில் ஒன்று விடைபெறப் போகிறது. Galácticos சகாப்தம் முடிவுக்கு வருகிறது. இத்துடன் கால்பந்து விளையாட்டிலிருந்தே ஓய்வு பெறுகிறேன் என்று அவர் அறிவித்திருப்பது, அரிதானது. ஒரு நட்சத்திரம் மங்க தொடங்கும் முன்பே தான் ஒளிர்வதை நிறுத்தி கொள்வது என்பது அரிதான ஒன்று தான். அளவை விடத் தரம் பெரிதென நீங்கும் ஆட்டக்காரர்கள் எடுக்கும் முடிவு இப்படி தான் இருக்கும் போல. தான் ஒரு German தயாரிப்பு என்பதை Kroos குறிப்பால் உணர்த்துகிறார் என்று எண்ணிக் கொண்டேன்.



 பெரிய கொண்டாட்டங்களை வெளிப்படுத்தாத வீரர் மாட்ரிடுக்காக 15வது கோப்பையை வென்று கொண்டாட்டத்தோடு விடைபெறட்டும். மகுடத்தோடு விடை பெறுங்கள் Toni Kroos! மாட்ரிட் உங்கள் பிரிவைத் தாங்கிக்கொள்ளட்டும்! 



Hala Madrid! 





 


Comments

Popular Posts