Hala Madrid


 



Ronaldo காலம் தொட்டே  Real Madrid ஆடும் கால்பந்தாட்ட போட்டிகள் மீது அலாதி பிரியம். பல இரவுகள் கண் விழித்து மெய் சிலிர்க்கப் பார்த்த போட்டிகள் ஏராளம். Madrid 3 முறை தொடர்ச்சியாக  Champions League பட்டத்தை வென்ற பொது, கால்பந்தாட்ட பைத்தியமாகவே திரிந்தேன். யதார்த்தமான உரையாடலில் கூட Hala Madrid என்று சொல்லி முடிப்பது வழக்காக இருந்ததை இப்போது நினைத்தால் பெரும் கோமாளித்தனமாகத் தோன்றுகிறது.  Ronaldo, Juventus சென்ற பிறகு 3 ஆண்டுகள் பெரும் தடுமாற்றம் மட்ரிடுக்கு, அணியின் Managerஆக Zidane விலகிய பிறகு இருவேறு Managerகள் நிலையைச் சீர் செய்ய இயலாமல் தவித்தனர்.


  ஒரு காலத்தில் நட்சத்திரங்கள்(Galácticos) நிரம்பி இருந்த அணியில் பெரும் இளைஞர் பட்டாளம் குவியத் தொடங்கியது. பெரும் தொகை செலவு செய்து ஒரு நட்சத்திரத்தை வாங்கு போக்கு அனேகமாக Eden Hazard Transfer உடன் நின்று போனது. நீண்ட நாள் ஓட்டத்தைக் கருத்தில் கொண்டு இளம் வீரர்களை மிதமான விலைக்கு வாங்கும் வியூகத்திற்கு மாறியது மாட்ரிட்.



 Mbappe போன்ற இளம் நட்சத்திர வீரர்கள் 2 ஆண்டாக Transfer window-வில் எட்டாக் கனியாகிப் போனது இந்த போக்கிற்குக் காரணமாகக் கூறப்பட்டாலும், மாட்ரிட் தனது Galácticos கனவை முற்றிலுமாக துறந்திருப்பதை வயதுற்ற பழைய வீரர்களின் எதிர்பாரா வெளியேற்றம் உணர்த்தியது. 



Ronaldo நெடுநாட்களாக ஆடிய Left Wing ஆதிக்கம் Madrid தரப்பில் குறையத் தொடங்கியது. இந்த பாதிப்பிலிருந்துமீளவே மாட்ரிடுக்கு  2 ஆண்டுகள் பிடித்தன. Eden Hazard, ரொனால்டோ-வின் இடத்தை நிரப்புவார் என்று நம்பி ஏமாற்றமே மிஞ்சியது. ஏற்கனவே Madrid அணிக்காக Champions League பட்டத்தை வென்று கொடுத்த Carlo Ancelotti-ன் வருகை அணியின் பாணியை மாற்றி அமைத்தது. 



Valverde, Tchouameni, Camavenga,  Rodrygo,  Vini Jr.,  Mendy, Jude Bellingham போன்ற இளம் பட்டாளம் மைதானத்தில் அணியின் இயக்கத்தையே மிக Dynamicஆக மாற்றி அமைத்திருக்கிறது. தடுப்பாட்டத்திலும் திறமையாக விளையாடுகின்றனர்.  இதில் பெரும்பாலான வீரர்கள் 120 நிமிடங்கள் கூட சலிக்காமல் ஆடும் ஆற்றலைக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் சீரான விறுவிறு ஆட்டத்தைச் சாத்திய படுத்துகிறார்கள்.  ஒரு காலத்தில் Madrid அணியில் ஆடும் வீரர்களின் சராசரி வயது 31ஆக இருந்தது, இந்த போக்கு முற்றிலுமாக மாறி இன்றைக்கு  27.3 ஆகி இருக்கிறது. அணியின் 11 வீரர்களில் 25க்கும் குறைவான  வயதுள்ள  6 வீரர்கள் போட்டியில் தொடக்கம் முதலே களம் இறங்குகிறார்கள். அனுபவம் வாய்ந்த Kroos, Modric, Carvajal, Nacho போன்றவர்களின் துணையும் இந்த அணிக்கு வாய்த்துள்ளது. 


கடந்தாண்டு Champions League பட்டத்தை வென்ற English Clubஆன Manchester City-ஐ காலிறுதி போட்டியில் வீழ்த்தியதன் மூலம் மாட்ரிட் பெரும் நம்பிக்கைக்குரிய அணியாக மீண்டுமொருமுறை தன்னை நிரூபித்துள்ளது. 



German கால்பந்து வரலாற்றில் தொடர்ந்து 11 ஆண்டுகள் Bundesliga பட்டம் வென்று பெரும் ஜாம்பவானாகத் திகழ்ந்த, Bayern Munich அணியை அரையிறுதி ஆட்டத்தின் இரண்டாவது Leg-ல் மாட்ரிட் எதிர்கொள்ளவிருக்கிறது. அதுவும் தன்னுடைய கோட்டையான Santiago Bernabéu மைதானத்தில்.  இந்தாண்டு Bundesliga பட்டத்தை  இழந்திருக்கும் Bayern, Champions Leagueல் முழு கவனத்தையும் திருப்பி வீறுகொண்டு ஆடும் என்பது வெள்ளிடைமலை. அதைப் போலவே ஸ்பெயினின் La Liga தொடரை வென்ற உற்சாகத்துடன் Ancelotti-ன் மாட்ரிட் அரையிறுதி போட்டியில் பட்டத்திற்கான பெரும் பசியோடு களம் காண்கிறது. 




Madrid அரையிறுதியில் வென்றாலும் German அணியுடன்(BVB Dortmund) தான் இறுதிப் போட்டி. இன்றைக்குப்  போட்டியில் வென்றால் இந்த இளம் படை இறுதிப் போட்டியை எட்டும். இந்த இளம் வீரர்கள் Galácticosகளாக உருவெடுப்பர். 


இன்னும் 45 நிமிடங்களில் போட்டி தொடங்குகிறது.  

நிம்மதியான உறக்கத்தை அளிக்கும் இரவா அல்லது உறக்கத்தை கெடுக்கும் இரவா என்பது அடுத்த 3 மணி நேரத்தில் தெரிந்துவிடும். 


(கால்பந்து குறித்து தமிழ் எழுதி பார்க்கலாம் என்ற ஆசைக்காக எழுதியது, எழுத்தில் திருப்தி இல்லாதா போதும், வெறும்  பரபரப்புக்காக குப்பைகளை எழுதி குவிக்கும் சமூக வலைதள யுகத்தின் கொசுறு பதிவாக இதை கொள்ளலாம்)


Hala Madrid 


Comments