Trevor Noahவின் அரசியலும் Faiyaaz Hussain-ன் கேலித்தனமும்






மேடையில்  வீற்று ஆங்கிலமும் தமிழும் கலந்த 4 கெட்ட வார்த்தைகளை நகைச்சுவை என்ற பெயரில் கக்குவதே தமிழ் Standup comedy கலாச்சாரமாகியுள்ளது.  சமூகம் குறித்த எவ்வித புரிதலுமற்று, அரசியல் சரித்தன்மை குறித்து கொஞ்சமும் கவலை கொள்ளாமல் வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டி கொண்டிருக்கிறார்கள். 

அப்படியான பிறழ் கலாச்சாரத்தின் வெளிப்பாடு தான் Faiyaaz Hussain-ன் சமீபத்திய அநாகரீகமான கேலித்தனம். ஒரு வகையில் இங்குள்ள உதிரிகளின் பொதுபுத்தியியை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அதை இலகுவாகக் கடந்து செல்லவும் அதன் மூலம் விளம்பரம் தேடி கொள்ளவும் முயல்கிறார். அதற்கு வருத்தமும், மன்னிப்பும் கேட்டிருக்கிறார். 

இந்த சம்பவத்தை ஒற்றி யோசித்தபோது தான் Trevor Noah என்ற தென்னாப்பிரிக்க Standup comedian நினைவுக்கு வந்தார். அவரெழுதிய Born a Crime நூலை வாசித்தபோது, பக்கத்திற்குப் பக்கம் சமூகம் குறித்த பல்வேறு படிமங்களைக் கொண்ட நகைச்சுவை உணர்வு வெளிப்பட்டுக் கொண்டே இருந்ததை நினைத்து வியந்தேன். 

இங்கு சாதி மறுப்பு திருமணம் போல் அங்கு இன கலப்பு திருமணம்(Inter-racial marriage) செய்த தம்பதிகளுக்குப் பிறந்தவர் தான் நூல் ஆசிரியர்.apartheid எனப்படும் இன ஒதுக்கல் அமலிலிருந்த   காலத்தில் கறுப்பினத்தவரும் வெள்ளையினத்தவரும் சேர்ந்து வாழ்வது குற்றம், உடலுறவு கொள்வது குற்றம் என்ற சட்டங்கள் எல்லாம் நடைமுறையிலிருந்தன, அதன் காரணமாக இவரைப் போன்றவர்கள் எந்த வகையின் கீழும் வர முடியாது, அதன் காரணமாகத் தன்னை “BORN A CRIME” என்றே அடையாளப் படுத்துகிறார். காலனியம் குறித்து இவருடைய  மென்மையான நகைச்சுவை கலந்த அரசியல் பேச்சுகள் முக்கியமானவை. 

தென் ஆப்பிரிக்காவின்  புகழ் பெற்ற நகைச்சுவை கலைஞராக உருப்பெற Trevor Noah -வின்  வாழ்க்கை சூழல் முக்கிய காரணமாக இருந்துள்ளது. இத்தகைய வாழ்வனுபவங்கள் தான் நகைச்சுவைக்கு ஏற்ற அரசியல் சரித்தன்மை கொண்ட கற்பிதங்களை ஏற்படுத்திக்கொள்ள மூல காரணமாக இருந்துள்ளன.  நகைச்சுவை என்பது பெரும் அரசியல் கருவி. Faiyaaz Hussain-ன் நகைச்சுவையில் வெளிப்படுவது எல்லாம் சமகால சமூக உதிரிகளின் பொது புத்தி மட்டுமே. சிந்திக்க வக்கற்றவர்கள் சிரிக்கலாம். 

Comments

  1. Good one Gowtham

    - Ganesh Jayachandran

    ReplyDelete

Post a Comment

Popular Posts