ஜீவானந்தம் ஏன் நினைவு கூறப்பட வேண்டும்?

 



சமீபத்தில் ப. ஜீவானந்தம் குறித்து ஒரு ஆவணப்படம் பார்க்க நேர்ந்தது, 4 இளைஞர்களும், ஜீவாவின் பெயரன் ஒருவரும்(அதிமுக காரர்) அந்த பகுதியைச் சேர்ந்த இடதுசாரி தோழர் ஒருவரும் இந்த ஆவணப்படத்தில் ஆங்காங்கே வந்து சென்றனர். தோழர் ஜீவா குறித்த அவரவர் கொண்டிருக்கும் அபிப்ராயங்களை பகிர்ந்து கொண்டனர். கருத்தியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு உள்ளீடற்ற ஆவணப்படம் இது. இன்னும் கொஞ்சம் ஆய்வு செய்து இருக்கலாம், அல்லது அந்த பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒருவறையேனும் பேச வைத்திருக்கலாம்.

இவர்களுள் பெரும்பாலானவர்கள் சொன்னது ஜீவா என்ற ஒரு அரசியல் தலைவரைத் தமிழ்நாடு மறந்து விட்டது, என்பதைத் தான். ஒருவாறு மட்டும் அதற்குத் திராவிட காட்சிகள் தான் காரணம் என்றார். மற்றவர்கள் அதே கருத்தைப் பூசி மெழுகி வெளிப்படுத்தினர்.
சுந்தரராமசாமி எழுதிய ‘காற்றில் கலந்த பேரோசை’ என்ற கட்டுரை மூலம், ஜீவாவின் மறைவையொட்டி தாமரை இதழ் வெளியிட்ட சிறப்பு மலர்(ஏப்ரல், 1963) பார்க்க கிடைத்தது. இந்த மலரில் அன்றைக்குத் தமிழ்நாட்டிலிருந்த அனைத்து அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் பங்களித்திருந்தனர். ஜீவாவுடனான நினைவுகளையும், அவரது ஆளுமையையும், அவரது பேச்சாற்றலையும் புகழ்ந்து பெரும்பாலான கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன. மெல்லிய விமர்சனங்களையும் சிலர் வெளிப்படுத்தி இருந்தனர். என்.வி. நடராசன், எம்.ஜி.இராமச்சந்திரன் உள்ளிட்ட திமுக தலைவர்களும் அஞ்சலி கட்டுரைகள் எழுதி இருந்தனர். நிற்க.
Fast Forward!!!
இப்போது தமிழ்ச் சமூகம் ப.ஜீவனந்தத்தை மறந்ததற்கு யார் காரணம்?
‘கத்தி’ படத்தில் கதாபாத்திரத்திற்கு ஜீவானந்தம் என்று பெயர் சூட்டியமைக்காக படக் குழுவுக்குப் பாராட்டு விழா நடத்திய தோழர்களா?
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சில காலம் பயணித்து பின்னர் விலகிய ஜீவனந்தத்தின் பெயரைப் பள்ளிகளுக்கும், ரயில் நிலையத்திற்கும் சூட்டி, அஞ்சல் தலை வெளியிட்ட திராவிட கட்சிகளா?
இலங்கையில் ஆட்சியைப் பிடித்துள்ள இனவாத JVP கட்சிக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட்டுகளா?
அல்லது 30 நொடிகளுக்கு மேல் எதிலும் ஆர்வம் செலுத்தாமல் உதிரிகளாகச் சிதறி லயித்துக் களிக்கும் ஈராயிரம் குழவிகளா?
(ஜீவானந்தம் எதற்காக நினைவுகூரப்பட வேண்டும் என்ற கேள்வியும் அடியாழத்தில் ஊறி கொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை!)

Comments