2024-ல் படித்ததும் பிடித்ததும்!
கடந்தாண்டை விட இந்த ஆண்டு அதிக புத்தகங்களைப் படித்து ‘முடிக்கவில்லை’ என்றாலும், அவற்றின் சாரத்தை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் அது பிடிபடும் வரை வாசித்திருக்கிறேன். ஒரே நூலில் கிடந்து உழலாமல் மனநிலைக்கு ஏற்றவாறு தவளை போல் தாவித்தாவி படிக்க என்னை நான் பழக்கப்படுத்திக் கொண்டதால், இந்தாண்டு வாசிக்காமல் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையும் கணிசமாகவே இருக்கிறது.
2024-ல் அல்புனைவுகளை காட்டிலும் புனைவுகளை அதிகம் வாசித்திருக்கிறேன். புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அழகிரிசாமி, கு.ப.ரா, ஆதவன், பெருமாள் முருகன், மயிலன் ஜி சின்னப்பன் உள்ளிட்டோரின் சிறுகதைத் தொகுப்புகள் ஆசுவாசப்படுத்திக் கொள்ளப் பயன்படுகின்றன. சுகுமாரன், வெய்யில், இசை, பிரான்சிஸ் கிருபா, ஆகியோரின் கவிதையில் அவ்வப்போது மிதப்பதும் உண்டு. இதுபோக தமிழ் மாத இதழ்களுள் காலச்சுவது இதழை கவர்-டு-கவர் படிக்கும் வழக்கத்தையும், உயிர்மை, அந்திமழை, வையம் இதழ்களில் வெளியாகும் கட்டுரைகளில் தேர்ந்தெடுத்து சிலவற்றைத் வாசிக்கவும் செய்கிறேன்.
ஆங்கிலத்தில் Orwell, Byung-Chul-Han, Guha ஆகியோரின் கட்டுரைகள் ருசியை நிவர்த்தி செய்கின்றன.
வாழ்க்கை நெருக்கடிகளுக்கு நடுவில் வாசிப்பு ஒன்றுதான் மீட்சியாக இருக்கிறது. அப்படி இந்தாண்டு என்னை நானே மீட்டுக்கொள்ள வாசித்த புத்தகங்களின் பட்டியல் இதோ:
தமிழ்:
1.வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும் - தி.லஜபதி ராய்
2.தமிழ்ச் செல்வங்களுக்குத் தந்தை பெரியார் - பண்ணன்
3.சென்னைக்கு வந்தேன் - பழ. அதியமான்(தொகுப்பு)
4.ஆடு ஜீவிதம் - பென்யாமின் (எஸ். ராமன்)
5.பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் - மயிலன் ஜி சின்னப்பன்
6.மைத்ரி - அஜிதன்
7.சிருங்காரம் - மயிலன் ஜி சின்னப்பன்
8.அரசியல் பிழைத்தோர் - .P. ராஜநாயஹம்
9.ப.நா வுடன் 16 ஆண்டுகள் - பண்ணன்
10.ஞாலம் - தமிழ்மகன்
11.மகுடம் மறுத்த மன்னன்- பி.எஸ் ராமன்
12.நினைவுகள் - இராம. அரங்கண்ணல்
13. தமிழணங்கு என்ன நிறம்? - மு.இராமனாதன்
14.ஒரு வரலாற்று ஆசிரியரின் வரலாறு- ஆ.இராமசாமி

15.நான் கண்ட அண்ணா- எம்.எஸ் வேங்கடாசலம்
16. கோவை மு.கண்ணப்பன்: வாழ்வும் பணியும் - ஒ.சுந்தரம்
17.வெள்ளை நாக்குகளும் தமிழ் காதுகளும்- ந.கோவிந்தராஜன்
18.தேர்தல் 2024: மீளும் மக்கள் ஆட்சி - அருண் பிரசாத்(தொகுப்பு)
19.நீலச்சட்டைக் கலைஞர் - மணிகோ.பன்னீர்செல்வம்
20. தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் வரலாறு: க. திருநாவுக்கரசு
21. முப்போகம் - மயிலன் ஜி சின்னப்பன்
22. கருப்பு அம்பா கதை - ஆதவன்
English :
1.Murder on the Menu: The Sensational Story of the Tycoon who Founded Saravana Bhavan- Nirupama Subramanian
2.The Colonial Constitution - Arghya Sengupta
3.The Cooking of Books: A Literary Memoir - Ramachandra Guha
4.Sheikh Abdullah: The Caged Lion of Kashmir - Chitralekha Zutshi
5.One Hundred Years of Solitude - Gabriel García Márquez
6.The DMK Years - R. Kannan
7.ICONOCLAST A Reflective Biography of Dr Babasaheb Ambedkar - Anand Teltumbde
8. HINDI IMPERIALISM - ALADI ARUNA
படிக்காமல் …பாதியில் …நிறுத்தி….படிக்க வேண்டி இருப்பவை….
1. How we die - Venki Ramakrishan
2. How Prime Ministers Decide - Neerja Chowdhury
3. KING - Jonathan Eig
4. The Origin of Political Order - Francis Fukuyama
5. Of Gifted Voice - keshav Desiraju
6. The Age of Extremes - Eric Hobbswan
7. பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும் - டக்ளஸ் எம்.நைட்
8. களிநெல்லிக்கனி - கவிஞர் இசை
9. T.N. Rajarattinam Pillai Charisma, Caste Rivalry and the Contested Past in South Indian music - Terada Yoshitaka
10. Brother less Night - V. V. Ganeshananthan
மயிலன் ஜி சின்னப்பன் இந்தாண்டு என்னை அதிகம் கவர்ந்திருக்கிறார். அவரது வாக்கிய அமைப்பும், சொற்கள் தேர்வும் ஈர்ப்புடையதாக இருக்கிறது. அவர் மூலம் கண்டடைந்த ஆதவனின் எழுத்துக்களும் அக எழுச்சியை ஏற்படுத்தின.
ஒழுங்குடன், நேர்த்தியுடன், தவளைபோலன்றி ஊன்றி வாசிக்க வேண்டும் என்பது தான் 2025-ல் எண்ணமும், எதிர்பார்ப்பும்.
Comments
Post a Comment