சாத்தனூர் அணை- Data Points

  


இன்றைய தி இந்து ஆங்கில நாளேட்டின் Data Point பகுதியில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அதே நேரத்தில் அறிவியல் ரீதியாக தர்க்கப்பூர்வமான ஒரு செய்தியை இரண்டு ஊடகர்கள் எழுதியுள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் இந்நாளில்(09/12/2024) நாம் அனைவரும் அதனை அறிந்து வைத்திருப்பது அவசியம் என்றே தோன்றுகிறது.
உள் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் சாத்தனூர் அணையிலிருந்து அறிவிக்கப்படாமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்று அஇஅதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. நீர்வளத்துறை அமைச்சரும், அமைச்சகமும் தக்க ஆதாரங்களோடு இதனை மறுத்திருந்தன.



தமிழ் செய்தி ஊடகங்களும் இந்த குற்றச்சாட்டை எவ்வித தரவும் இன்றி மெய்போல் சித்தரித்து வழக்கம் போல் வெற்று பரபரப்புகளுக்காகச் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தன. இந்த அணையின் கொள்ளளவு, அங்குப் பின்பற்றப்படும் அணையின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் உள்ளிட்ட விவரங்கள், இரண்டு நாள் இடையில் பெய்த வரலாறு காணாத கனமழை குறித்த விவரங்களையும் பொது மக்களுக்குச் செய்தி ஊடகங்கள் தெரியப்படுத்தத் தவறிவிட்டன.





கடந்த 60, 70 ஆண்டுகளில் இல்லாதா அளவுக்குப் பெய்துள்ள கனமழையால் திடீரென பெருகிய நீர்வரத்தும், கொள்ளளவில் 95% நிரம்பி இருந்த அணையும், நீரோட்ட திசையில் விடாமல் கொட்டி தீர்த்த மழையுமே பெருவெள்ளத்தை உருவாக்கி இருக்கிறது. அணையிலிருந்து நீர் வெளியேற்றம் மிகவும் திட்டமிட்ட வகையிலேயே செயல்படுத்தப் பட்டிருக்கிறது.
தரவுகளைக் கவனிக்கத் தெரிந்தவர்கள் சாத்தூர் அணையில் நடைபெற்ற நிகழ்வுகளுவுகளை உய்ந்தறியலாம்.


Comments