‘One Hundred Years of Solitude’ Netflix தொடர்!!

 




“MANY YEARS LATER, as he faced the firing squad, Colonel Aureliano Buendía was to remember that distant afternoon when his father took him to discover ice.”, என்று தொடங்கும் Gabo-வின் நாவலை எப்படி காட்சியாக்க முடிக்கும் என்று பல நேரம் அவநம்பிக்கையோடு நினைத்திருக்கிறேன். ஆனால் அந்த நாவலுக்கு நியாயம் செய்யும் வகையில் அபாரமான படைப்பாக வெளியாகி இருக்கிறது ‘One Hundred Years of Solitude’ Netflix தொடர்.



வசனங்களால் இட்டு நிரப்ப முடியாத பகுதிகளை Gabo-வின் குரல் போலவே பின்னணியில் கதைசொல்லும் குரல் பூர்த்தி செய்கிறது. காட்சி அமைப்பு, திரைக்கதை, இசை, நடிப்பு, ஒளிப்பதிவு என அனைத்துமே இந்த தொடருக்கு கன கச்சிதமாக வாய்த்திருக்கிறது.


தொடரின் காட்சிகள் ஒரு வாழ்வியலை நம் கண்முன்னே விரிக்கின்றன, Gabo-வின் அடர்த்தியான சொற்களைப் போலவே படத்துணுக்கும் பொருள்பொதித்ததாகவே வெளிப்படுகிறது. நாவலில் இடம்பெற்ற நுணுக்கமாக சில விஷயங்களையும் விடுபடாமல் அப்படியே பதிவு செய்துள்ளார்கள்.

நாவலில் மாய எதார்த்தம் நிரம்பி வழியும் பகுதிகளை தொடரில் காட்சிப்படுத்திய விதமும் அருமை. புணர்ச்சியின்பத்தையும் பிறழ்காம உணர்வுகளை அப்படியே காட்சி படுத்திய விதம் நாவலுக்கு கொஞ்சமும் சளைக்காத அனுபவத்தை அளிக்கிறது. மொத்தம் 16 அத்தியாயங்களை கொண்ட இந்த தொடரின் முதல் 8 அத்தியாயங்கள் முதல் பாகமாக வெளியாகி இருக்கின்றன. இரண்டாம் பகுதியை காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டவும் தவறவில்லை.


தவறவிடக் கூடாத தொடர்களின் பட்டியலில் இதனையும் சேர்த்துக் கொள்ளலாம்!

Comments